Thamizhum saraswathiyum : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் அர்ஜுனின் அக்கா உட்கார்ந்து கொண்டிருக்கிறார் அப்பொழுது அர்ஜுனின் அம்மா இன்னும் எவ்வளவு வேலை இருக்கு சமைக்கலாம் வா என கூப்பிடுகிறார் அதற்கு நாம இந்த வீட்டு வேலைக்காரங்க கிடையாது இப்ப நம்ப முதலாளி சாப்பிட ஏதாவது ஆர்டர் பண்ணிக்கலாம் என கூறுகிறார். அந்த சமயத்தில் அபி வீட்டிற்கு வருகிறார் அப்பொழுது அர்ஜுனின் அம்மா உன்னை யார் இங்க வர சொன்னது என திட்டுகிறார்.
ஆனால் ராகினி நான்தான் வர சொன்னேன் என கூறுகிறார் இப்படி இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அர்ஜுன் மற்றும் அவரின் மாமா அடி வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வருகிறார்கள் வந்தவுடன் என்ன காயம் என ராகினி கேட்க தமிழ் அடித்ததை அர்ஜுனின் மாமா போட்டு கொடுக்கிறார். உடனே ராகினி யாரும் கேட்க ஆள் இல்லை என்று அவன் நினைச்சிட்டு இருக்கானா வாங்க போலாம் என அர்ஜுன் எவ்வளவு சொல்லியும் ராகினி கிளம்புகிறார்.
தமிழ் வீட்டிற்குச் சென்ற ராகினி உங்க மனசுல என்ன நெனச்சிட்டு இருக்கீங்க எதுக்காக அர்ஜுனை அடிச்சீங்க கேட்க ஆள் இல்லை என்று நினைத்து இருக்கீங்களா என தமிழை பார்த்து கேள்வி கேட்கிறார் அப்பொழுது இன்னும் இந்த அயோக்கிய பயல நம்பிகிட்டு தான் இருக்கியா என்ன நடேசன் கத்துகிறார் இங்க எதுவும் கத்தக்கூடாது வீட்டை விட்டு வெளியே போ என ராகினியை பார்த்து கூறுகிறார்.
ஆனால் ராகினி உங்க மேல ஒரு தப்பும் இல்லன்னு தெரிஞ்சதால தான் உங்கள பாக்கவே எனக்கு கில்டியா இருந்தது அதனால தான் அன்னைக்கு உங்கள பாக்க முடியல என தமிழைப் பார்த்து ராகினி கூறுகிறார் அதுமட்டுமில்லாமல் அர்ஜுன் அடிக்கிற அளவுக்கு உனக்கு எங்கிருந்து தைரியம் வந்துச்சு என பேசிக்கொண்டு இருக்கும் பொழுது அர்ஜுனனின் மாமா தமிழிடம் இப்ப பாரு முறைக்கிறான் என கூற அர்ஜுன் திரும்பியவுடன் பயந்து கொண்டு ஓடுகிறார்.
பிறகு ராகினி நான் போலீஸ்க்கு போன் பண்ணுகிறேன் என கூற உடனே நமச்சி போலீசுக்கு போன் பண்ணு நாங்க பாட்டுக்கு அமைதியா தான் இருந்தோம் உன் புருஷனும் அந்த அல்ல கையும் தான் எங்களிடம் வந்து வம்பு வளத்துச்சு உங்க கம்பெனி பக்கத்துல தான் இதெல்லாம் நடந்துச்சு உங்க கம்பெனி ஒர்க்கர்ஸ்க்கு எல்லாமே தெரியும் நீ போன் பண்ணு வந்து விசாரிக்கட்டும் விசாரிச்சு உள்ள போய் கலி திங்கலாம் என நமச்சி ராகினிக்கு தரமான பதிலடி கொடுக்கிறார்.
போலீஸ்க்கு நீ போன் பண்றியா இல்ல நான் போன் பண்ணட்டா என்ன நமச்சி கேட்க அர்ஜுன் பயந்து போய் வேணாம் ராகினி வா நம்ம குடும்பத்துக்கு தான் அசிங்கம் என அழைத்து செல்ல பார்க்கிறார் ஆனால் ராகினி பிடிவாதமாக போலீசுக்கு போன் பண்ண வேண்டும் என கருதுகிறார் இதனால் மயக்கம் அடைந்து விடுகிறார் உடனே ஹாஸ்பிடலுக்கு அர்ஜுன் தூக்கி செல்கிறார். ராகினி செக்கப் செய்த டாக்டர் இனிமே டென்ஷனாக கூடாது என அறிவுரை கூறுகிறார்.
ஆனால் அர்ஜுன் தமிழ் மீது தான் தப்பு இருப்பது போல் பில்டப் பண்ணி பேசுகிறார் இதனை பார்த்த அபி அதிர்ச்சி அடைகிறார். இந்த சமயத்தில் கோதை ராகினியை பார்த்து வரலாம் எனக்கூற நடேசன் நமக்கு ரெண்டு பசங்க மட்டும் தான் ரெண்டும் மருமகளும் மகள் மாதிரி அங்கெல்லாம் போகக்கூடாது என கோதையை திட்டி விடுகிறார் பிறகு அபிக்கு போன் செய்து ராகினி பற்றி விசாரிக்கிறார் ராகினிடம் போனை குடு நான் பேசுகிறேன் என கேட்க நீங்க யாரும் என்கிட்ட பேச வேண்டாம் என மூஞ்சில அடித்தது போல் கூறுகிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.