Thamizhum saraswathiyum : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் அபி ராகினியை பார்த்ததை வீட்டில் உள்ளவர்களிடம் கூறுகிறார். அதற்கு நடேசன் நீ எதுக்கு அவள பாத்த என வேகமாக பேச அதற்கு கோதை அவ தனியா இருக்கான்னு பீல் பண்ற அதனாலதான் அபியை பார்த்து பேசி இருக்கா என கூற உடனே ஆமா அம்மா ராகினி ரொம்ப பீல் பண்றா என அபி கூறுகிறார். அதெல்லாம் ஒரு மண்ணும் கிடையாது சொத்தை எழுதி வாங்கிக்கிட்டு அனுப்புனது அவதான அவளுக்கு என்ன நீங்க கரிசனம் காட்டுறீங்க அவ பேச்ச இங்க எடுக்காதீங்க என்பது போல் நடேசன் கூறி விடுகிறார்.
கோதை கோவிலுக்கு போயிட்டு வரலாம் என நடேசன் அவர்களிடம் கேட்க அதற்கு வசு மற்றும் சரஸ்வதி இருவரும் நாங்களும் வருகிறோம் என கூறுகிறார்கள். அனைவரும் கோவிலுக்கு செல்கிறார்கள் அங்கு ராகினி மற்றும் அர்ஜுனின் அக்காவும் வருகிறார்கள். ராகினி சாமியிடம் வேண்டிக்கொள்கிறார் பிறகு திரும்ப வருகையில் கோதை, சரஸ்வதி, வசு என அனைவரும் வருகிறார்கள் அப்பொழுது ராகினி அம்மா என பேச ஆனால் அர்ஜுனின் அக்கா பேசவிடாமல் தடுக்க முயற்சி செய்கிறார் ஆனால் ராகினி கோதையிடம் பேச முயற்சி செய்யும்பொழுது நடேசன் வந்து இவர்களிடம் என்ன பேச்சு என திட்டுகிறார்.
இன்னும் கையில காதுல கிடக்கிறத வாங்கிட்டு வர சொன்னானா என நடேசன் திட்டுகிறார். அடுத்த காட்சியில் தமிழ் மற்றும் நமச்சி இருவரும் இளங்கோவை அழைத்து பேசிக் கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது இளங்கோவிடம் உன்னோட ஹெல்ப் தேவை அவனை நேர்மையால் எல்லாம் ஜெயிக்க முடியாது அவன் வழியிலேயே தான் அவனை மடக்கி பிடிக்க முடியும் என்பது போல் பேசுகிறார் அதற்கு இளங்கோவும் நான் அப்பவே சொன்னேன்ல அவன் சொத்துக்காக தான் இவ்வளவு பிரச்சனையும் பண்ணி இருக்கான் உங்களுக்கு என்ன ஹெல்ப் வேணாலும் நான் செய்கிறேன் என கூறுகிறார்.
அந்த சமயத்தில் அர்ஜுன் மற்றும் அவரின் மாமா இருவரும் வருகிறார்கள் இளங்கோவை பார்த்து நட்களாக பேசுகிறார் அர்ஜுன். அது மட்டும் இல்லாமல் கோதையையே நாங்க ஓட ஓட விரட்டிட்டோம் இவங்க எல்லாம் எம்மாத்திரம் பொழச்சி போறாங்க விட்டுடு மாப்ள என அர்ஜுனனின் மாமா நக்கலாக பேசுகிறார் அது மட்டும் இல்லாமல் தகர சீட்ல இவ்வளவு பேரும் எப்படி இருக்கீங்க என இன்னும் நக்கலாக பேசிக் கொண்டிருக்கிறார் அந்த சமயத்தில் தமிழுக்கு கோபம் வந்து கொண்டிருக்கிறது.
மேலும் கோதை இவ்வளவு முட்டாளா இருப்பார்கள் என்று நான் நினைச்சு கூட பாக்கல அந்த பொம்பளைக்கு ஊர்ல எவ்வளவு பில்டப் கொடுக்கிறாங்க ஒரு பேப்பரை கூட பாக்காம பைத்தியம் மாதிரி சைன் போட்டுடுச்சு என இன்னும் கேவலமாக பேச தமிழுக்கு கோவம் வந்து நெஞ்சிலேயே மிதிக்கிறார் அர்ஜுன் மாமாவை. அது மட்டும் இல்லாமல் வெளுத்து வாங்குகிறார். மாமாவை காப்பாற்ற அர்ஜுன் அங்கு எங்கும் தேடி ஒரு உருட்டு கட்டை எடுத்து வந்து தமிழை பின்னாடி தாக்க உடனே அதனை பிடித்து அர்ஜுனை உருட்டு கட்டையால் அடிக்கிறார் தமிழ்.
இந்த சமயத்தில் அர்ஜுனனின் மாமா தப்பித்து ஓடுகிறார் ஆனால் அர்ஜுன் உருட்டு கட்டையால் அடி வாங்கியே சாவுகிறார் பிறகு இருவரும் தப்பித்து ஓடுகிறார்கள். அடுத்த காட்சியில் கோதை நடேசன் அனைவரும் வீட்டுக்கு வந்து கார்த்தியிடம் ராகிணியை பார்த்ததை கூறுகிறார்கள் அதற்கு கார்த்தி திட்டுகிறார் உடனே தமிழும் வருகிறார் தமிழிடமும் ராகிணியை பார்த்ததை கூற அனைவரும் திட்டுகிறார்கள். அப்பொழுது அர்ஜுன் மற்றும் அவரின் மாமாவை அடித்ததை நமச்சி கூறி விடுகிறார்.
பெத்த மனசு பித்த புள்ள மனசு கல்லு என்பது போல் அபியை ராகினி இருக்கும் இடத்திற்கு அனுப்ப கோதை முடிவு செய்கிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.