Thamizhum saraswathiyum : தமிழும் சரஸ்வதியும் இன்றைய சமீபத்திய எபிசோடில் கோதை அனைவருக்கும் நிலா சோறு கொடுக்கிறார் அப்பொழுது தமிழ் ஏதோ ஒரு யோசனையில் வாங்க மறுக்கிறார் பின்பு சரஸ்வதி சொன்னதால் வாங்கி சாப்பிடுகிறார். அதுமட்டுமில்லாமல் தன் வீட்டை பார்த்து கோதை மிகவும் வருத்தப்படுகிறார் என்னுடைய ஒருத்தியால் அனைவரும் கஷ்டப்படுகிறார்கள் என கண்ணீர் வடிக்கிறார் அதற்கு நடேசன் ஆறுதல் கூறுகிறார்.
மேலும் அடுத்த நாள் காலையில் அனைவரும் எழுந்து குளித்துவிட்டு கிளம்பி கொண்டிருக்கும் பொழுது பாத்ரூம் பிரச்சனை வருகிறது ஒரே பாத்ரூம் அனைவரும் யூஸ் பண்ணுவதால் அல்ல அவசரத்திற்கு எதுவும் பண்ண முடியாமல் போனதால் தமிழ் இதற்கு ஒரு முடிவு கட்டுகிறேன் என புது வீடு பார்ப்பதற்கு ஆயத்தம் ஆகிறார். அதுமட்டுமில்லாமல் தமிழை இந்த நிலைமைக்கு ஆளாக்கியது நான் தான் என்று மிகவும் வருத்தப்படுகிறார் கோதை.
இந்த நிலையில் தற்பொழுது ஒரு புதிய ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது அந்த ப்ரோமோ வீடியோவில் காலையில் சீக்கிரம் எழுந்து கோதை அனைத்து வேலைகளையும் பரபரப்பாக செய்கிறார் அது மட்டும் இல்லாமல் பால் சுட வைக்கிறார் மாவு அரைத்து வைத்தாச்சு அவன் எழுந்ததும் தோசை ஊத்தி கொடு என சரஸ்வதி இடம் கூறுகிறார். ஆனால் சரஸ்வதி இதெல்லாம் நீங்க ஏன் அத்தை செய்கிறீர்கள் நான் செஞ்சுக்க மாட்டேனா என கூறுகிறார் அதனால என்ன இப்ப நான் சும்மாதான் இருக்கேன் அதனால செஞ்சேன் என்பது போல் கூறுகிறார் கோதை கொடுத்த காபியை தமிழ் குடித்துவிட்டு ஏதோ நீண்ட நாள் கழித்து நல்ல காபி குடிப்பது போல் பீல் பண்ணுகிறார்.
அத்தை எனக்கு முன்னாடியே எழுந்து எல்லா வேலையும் பார்த்தாங்க அவங்க தான் ரொம்ப பாவம் என கூறுகிறார் சரஸ்வதி, அதை காதில் வாங்கிய தமிழ் அவசர அவசரமாக ஒரு புதிய வீட்டை பார்க்கிறார் அப்பொழுது புரோக்கர் வந்து இரண்டு மூன்று வீட்டை பற்றி கூற எதற்கு இப்ப வீடு பாக்குறீங்க தேவையில்லாத செலவு என கோதை கூறுகிறார் அதுமட்டுமில்லாமல் நடேசன் அவர்களும் இப்ப ஏன் வீடு இங்கேயே இருக்கலாம் என கூறுகிறார்.
இங்கே பெருசா எதுவும் வசதி கிடையாது நீங்க ரொம்ப கஷ்டப்படுவீங்க அதனாலதான் என கூற அதற்கு கோதை சந்தோஷம் என்பது பெரிய வீட்டில் வாழ்வது கிடையாது புடிச்சவங்க கூட வாழ்வதுதான் என செருப்பால் அடித்தது போல் ஒரே வார்த்தையில் தமிழுக்கு புரிய வைக்கிறார். இதனால் தமிழ் மனது குளிர்கிறது இத்துடன் இந்த பிரமோ வீடியோ முடிகிறது.