Thamizhum saraswathiyum : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் சரஸ்வதி, வசு, ஆதி மூவரும் கோதை வீட்டிற்கு வருகிறார்கள் அப்பொழுது அர்ஜுன் உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு எனக் கூற உடனே சரஸ்வதி உன் சர்ப்ரைஸ் தேவை இல்லடா தம்பி என கூறுகிறார் ஆதியை பார்த்த அர்ஜுன் அதிர்ச்சி அடைகிறார். உடனே ஆதி அர்ஜுன் முன்னாடி வந்து நின்று நான் திரும்ப வருவேன்னு எதிர்பார்க்கவில்லையா என அர்ஜுனனை பார்த்து முறைத்து பேசுகிறார்.
உடனே கோதை நடேசன் வசூ என அனைவரும் அர்ஜுன் பற்றி அடுக்கடுக்காக புகார்களை வைக்கிறார்கள் அதுமட்டுமில்லாமல் ஒரு அயோக்கியனை நம்ம வீட்டில் வைத்துள்ளோம் என வாய்க்கு வந்தபடி பேசிக் கொண்டிருக்கிறார்கள் அந்த சமயத்தில் கார்த்தி ஏன் இப்படி பேசுறீங்க கொஞ்சம் அமைதியா இரு எனக் கூற உடனே ஆதியை வசு அந்த வீடியோவை பிளே பண்ணு என கூறுகிறார்.
ஆதியும் வீடியோவை பிளே பண்ணுகிறார் அப்பொழுது தமிழ் அர்ஜுனை கத்தியால் குத்தவில்லை என்பது தெளிவாக தெரிகிறது அது மட்டும் இல்லாமல் அர்ஜுன்தான் தன்னைத்தானே ஆள் வைத்து கத்தியால் குத்திக் கொண்டார் என்பதும் தெரிகிறது வீடியோவை பார்த்த அதிர்ச்சடைந்த கார்த்தி அர்ஜுனை அடிக்கிறார் உன்னை எவ்வளவு நம்பினேன் உன்னால என் அண்ணனையே சந்தேகப்பட்டுட்டேன் என வெளுத்து வாங்குகிறார்.
இப்படி அடுத்தடுத்து அனைவரும் அர்ஜுனை கேள்வி கேட்கிறார்கள் ஆனால் ராகினி அமைதியாக இருக்கிறார் ஏனென்றால் அர்ஜுன் இதற்கு முன்பு ராகினியிடம் நடந்த உண்மை அனைத்தையும் கூறுகிறார் தன்னுடைய அப்பா தான் லட்சுமி இண்டஸ்ட்ரீஸ் ஓனர் அந்த கம்பெனியை உங்கள் அப்பா அம்மா வாங்குவதாக கூறி ஏமாற்றினார்கள் அதனால் என்னுடைய அக்காவின் திருமணம் நின்றது என் அக்கா இறந்து விட்டார் அதேபோல் இவர்கள் செஞ்ச துரோகத்தை நினைத்து எங்க அப்பாவும் இறந்து விட்டார் என ராகினி மண்டையை கழுவி வைத்துள்ளார் அர்ஜுன்.
இது தெரியாமல் கோதை நடேசன் என அனைவரும் ராகினி இப்போ நீ எடுக்கிற முடிவு தான் முக்கியம் என பேசுகிறார்கள் உடனே அர்ஜுன் மற்றும் தப்பு பண்ணல எல்லா தப்புக்கும் நீங்கதான் காரணம் என்பது போல் கோதையை பார்த்து ராகினி கூற அனைவரும் அதிர்ச்சியடைகிறார்கள் அது மட்டும் இல்லாமல் கோதை கோபப்பட்டு வீட்டை விட்டு வெளியே போடா என அர்ஜுனனை பார்த்து கூற அதேபோல் சரஸ்வதியும் வெளியே போடா எனக் கூறுகிறார் ஆனால் அர்ஜுன் ராகினி பின்புறம் நின்று கொண்டு சிரிக்கிறார்.
ஏனென்றால் முழு சொத்தையும் அர்ஜுன் ஆட்டையை போட்டு விட்டாரா.? ஏனென்றால் இதற்கு முன்பு அண்ணா நகரில் இருக்கும் வீட்டை எழுதி வாங்கும் பொழுது அனைத்து சொத்தையும் அவர் எழுதி வாங்கி விட்டாரா என ரசிகர்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது அல்லது ராகினியை வைத்து வேறு ஏதாவது கேம் விளையாட போகிறாரா என்பதும் தெரியவில்லை நாளை எபிசோடில் என்ன நடக்கும் என்பது தெரிய வரும்.