Thamizhum saraswathiyum : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் ராகினியிடம் அர்ஜுன் அனைத்து உண்மைகளையும் கூறுகிறார் அப்பொழுது ராகினி என்னை காதலித்தது என கேட்க சத்தியமா அது உண்மைதான் உன்ன லவ் பண்ணதுக்கு அப்புறம் தான் நான் பழி வாங்குற குணத்தையும் மாத்திக்கிட்டேன் உங்க அம்மா அப்பாவால ரெண்டு உயிர் போய் இருக்கு அதுக்கு பதில் சொல்லியே ஆகணும் அப்படின்னு தான் நான் எல்லா வேலையும் செஞ்சேன் ஆனா உன்ன லவ் பண்ணதுக்கு அப்புறம் உங்க அம்மா அப்பாவை பழி வாங்கணும் என்கிற எண்ணத்தை மாற்றி விட்டேன் எப்படியாவது என்னோட கம்பெனிய அடையணும்னு ஆசைப்பட்டேன்.
அதுக்காக தான் ஒரு பிளான் போட்டேன் அதாவது இளங்கோ அன்னைக்கு வந்து சொன்னது அனைத்தும் உண்மைதான் தமிழை ஆனால் எந்த ஒரு காயமும் பண்ணல என்னைய தான் நான் கத்தியால ஆள் வச்சி குத்திகிட்டேன் அப்பவும் மாமா தான் அவசரப்பட்ட தமிழ் மேல கேஸ் கொடுத்தாரு அதையும் அடுத்த நாளே போய் வாபஸ் வாங்கிட்டேன் என அர்ஜுன் மொத்த உண்மையையும் கூறுகிறார். அது மட்டும் இல்லாமல் எப்படியாவது சேர்மன் பதவியை அடைய வேண்டும் என்று நினைத்தேன் அதுக்கு காரணம் எங்க கம்பெனிக்கு என்ன சேர்மன் ஆக்கலனாலும் பரவால்ல ஒரு டைரக்டராவது ஆக்கணும் என்று உங்க அம்மாவுக்கு தோணல அதையும் நீ தான் அடம் பிடித்து எனக்கு வாங்கி கொடுத்தா அது உனக்கே தெரியும்.
அதுக்கப்புறம் இந்த வீட்ல என்ன பெருசா மதிப்பதே கிடையாது அதையும் நீ கண்ணால பார்த்திருக்கிற உங்க அண்ணன் தமிழ் மேல் பழி போட்டதே தவிர அவரு மேல ஒரு கீறல் கூட படாம நான் தான் பாத்துக்கிட்டேன் இது எல்லாத்துக்கும் காரணம் எப்படியாவது என் கம்பெனியை அடைந்தே ஆகணும்னு தான். இப்ப சொல்லு நான் செஞ்சது தப்பா அப்படின்னா எந்த தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்கிறேன் ஆனால் நீ மட்டும் என்கூடவே இரு என்பது போல் பேசி விடுகிறார் அர்ஜுன் இதனால் ராகினி மனது குளிர்ந்து விடுகிறது.
உடனே ராகினி அவங்க செஞ்சதுல என்ன தப்பு இருக்கு அவங்க குடும்பத்துக்கு எவ்வளவு பெரிய துரோகம் செய்து இருக்கீங்க உங்களால அவங்க எல்லாத்தையும் இழந்துட்டு நடுத்தெருவுல வந்துட்டாங்க அர்ஜுனுடைய அப்பாவும் அக்காவும் இறந்ததுக்கு நீங்க தான் காரணம் உடனே கார்த்தி இந்த கதை எல்லாம் நம்ப சொல்றியா அவனே பிராடு பண்ணி இந்த கம்பெனிக்குள்ள வந்தது உன்னை கல்யாணம் பண்ணது இந்த வீட்டுக்குள்ள வந்தது எல்லாமே அவன் பிளான் பண்ணி தான் வந்து இருக்கான் அத நீ நியாயப்படுத்துறியா உடனே வசு இப்ப கூட எப்படி ராகினி நீ அவனை நம்புற.
சரஸ்வதியும் அவன் சொல்ற எதையும் நம்பாதே அவன் உன்னையும் எதையோ சொல்லி மாத்த பார்க்கிறான் எனக் கூற உடனே ராகினி அது உண்மை இல்லை என்று சொல்கிறீர்களே உண்மை இல்லன்னா அப்பா அம்மா ஏன் இவ்வளவு அமைதியா இருக்காங்க என கேட்க உடனே கார்த்தி பதிலுக்கு கேட்கிறார் அதற்கு நடேசன் அவங்க சொல்றதுல பாதி உண்மைதான் அந்த கம்பெனியை நாங்க வாங்கலாம்னு முடிவு பண்ணனும் ஆனா அவ்வளவு பணம் எங்களால ரெடி பண்ண முடியல அதுக்கப்புறம் பணம் ரெடி பண்ணிட்டு அவங்கள பார்க்க போனோம் கம்பெனி அதுக்குள்ள பேங்க்காரங்க ஜப்தி பண்ணிட்டாங்க.
வேற வழி இல்லாம அப்புறம் ஏலத்துக்கு போய் அந்த கம்பெனியை எடுத்தோம் இதை எல்லாத்தையும் அவங்க அப்பா கிட்ட சொல்லலாம்னு அவங்க அப்பாவை பார்க்க போனா அவங்க அப்பா அங்க இல்ல நாங்க எவ்வளவு தேடியும் அவர் கிடைக்கல என நடந்த உண்மையை நடேசன் கூறுகிறார் ஆனால் அர்ஜுன் குடும்பம் மொத்தமும் கோதை மற்றும் நடேசன் அவர்களால் தான் என்னுடைய கணவரும் என்னுடைய மகளும் இறந்தார் என்பதை அர்ஜுனனின் அம்மா கூறுகிறார்.
உடனே ராகினி நான் அவர் பக்கம் தான் நிக்க போறேன் என தன்னுடைய அம்மா கோதை அப்பா நடேசன் முன்பு கூறுகிறார். உடனே கோதை என்னடி சொல்ற உனக்கு புத்தி கெட்டுப் போச்சா என கேட்க அதான் அப்பா அது உண்மைதான் என்று சொல்கிறார்களே எனக் கூற உடனே கோதை அன்னைக்கு தமிழை கத்தியால குத்தினப்ப நீ பார்த்தேன்னு சொன்ன ஆனா இப்ப வீடியோவை பார்த்துட்டு இல்லன்னு தெரியுதுல்ல என கேட்க நீங்க ஏமா தமிழ் குத்திருப்பான்னு நம்புனீங்க என கேட்க அதற்கு உன்ன முழுசா நம்புன அதனாலதான் நம்பிட்டேன் என கோதை கூறுகிறார்.
உடனே கார்த்தி என்ன நடந்தாலும் அவன் இங்க இருக்கவே கூடாது இருந்தா அவ்வளவுதான் என பேசிக் கொண்டிருக்கிறார் உடனே சரஸ்வதி போலீசில் பிடித்து கொடுத்து விடலாம் என பேச அதற்கு கார்த்தி இவனை அடிச்சே துரத்தனும் என பேசுகிறார் வீட்டை விட்டு வெளியே போக கூறுகிறார் கோதை அதே போல் சரஸ்வதியும் கூறுகிறார் ஆனால் அர்ஜுன் நக்கலாக அனைவரையும் பார்த்து சிரிக்கிறார் உடனே கார்த்தி போகலன்னா தொலைச்சிருவேண்டா என மிரட்டுகிறார் அதற்கும் சிரிக்கிறார் அர்ஜுன்.
உடனே அர்ஜுன் சரஸ்வதி பார்த்து நீங்க ரொம்ப கில்லாடி தான் வீடியோவை எப்படியாவது மறைக்க ட்ரை பண்ணுன ஆனால் அதையும் எடுத்துட்டு வந்துட்டீங்க என நட்களாக சிரிக்கிறார் ஆனால் இப்போது எனக்கு கவலையே கிடையாது என்பது போல் அர்ஜுன் கூறுகிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.