விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நன்கு பிரபலம் அடைந்து வருகிறது. இந்த சீரியலில் சமீபத்தில் வெளியாகிய எபிசோடில் தமிழின் தம்பி கார்த்திக் அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதனால் தமிழ் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறார், அது மட்டும் இல்லாமல் குழந்தையை பார்த்து கொஞ்ச வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்த தமிழுக்கு வசு குழந்தையை கோவிலுக்கு தூக்கிக் கொண்டு வருகிறார் அப்பொழுது குழந்தையை பார்த்து தமிழ் சந்தோஷத்தில் மிதக்கிறார்.
அது மட்டும் இல்லாமல் தமிழ் தன்னுடைய கம்பெனியை பிரபலப்படுத்த அடுத்த மூன்று லேத் மிஷினை லீசுக்கு எடுத்துள்ளார். அதற்காக பைனான்சியர் அவர்களிடம் பணம் கேட்க போன இடத்தில் அவருக்கு உதவியும் செய்து விட்டார்கள். ஆனால் தமிழுக்கு உதவி செய்தது சந்திரகலா என்று இதுவரை தெரியாது. சந்திரகலா தமிழுக்கு மறைமுகமாக உதவி செய்துள்ளார்.
அப்படி இருக்க கார்த்திக் கம்பெனியிலிருந்து சில பேர் தமிழ் கம்பெனிக்கு வந்துள்ளார்கள் இதனால் கோதை மிகுந்த கோபத்தில் இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் கார்த்தி ப்ரொடக்ஷன் அதிகமாக எடுக்க வேண்டும் என்பதற்காக சில கட்டுப்பாடுகளை கம்பெனிக்கு விதித்திருந்தார் ஆனால் கோதை வந்த பிறகு அதையெல்லாம் சரி செய்து விடு என கார்த்தி இடம் கூற அதையும் நீங்களே சொல்லி விடுங்கள் என கோபமாக தன்னுடைய அம்மாவிடம் பேசுகிறார்.
இந்த நிலையில் இன்று ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகிய ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது இந்த புரோமோ வீடியோவில் தமிழ் தன்னுடைய கம்பெனிக்கு புதிய ஆர்டரை எடுப்பதற்காக ஒரு கம்பெனியை சென்று சந்திக்கிறார் அங்கு தமிழை பிரசன்டேஷன் செய்ய சொல்ல இங்கிலீஷில் பிரசன்டேஷன் செய்ய முடியாமல் திணறுகிறார் . உங்களால் ஒழுங்கா பிரசண்டேஷன் செய்ய முடியவில்லை நீங்க எப்படி ப்ரோடக்ஷன் செய்து தருவீர்கள் என தமிழை வெளியே துரத்தி விடுகிறார்கள்.
பிறகு மேனேஜர் தமிழைப் பற்றி அனைத்து விவரங்களையும் கூறி தமிழுக்கு ஆர்டரை கைப்பற்றி தருகிறார் இதனால் தமிழ் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறார் தமிழ் கம்பெனி இன்னும் மேலும் மேலும் உயர போகிறது இதனால் கோதை இன்னும் காண்டாக போகிறார். இதோ வீடியோ