அர்ஜுன் போனை திருடி மொத்த ஆதாரத்தையும் எடுத்த வசு.! மாப்பிள்ளை இனி கம்பிதான் எண்ணனும் போல..

thamizhum saraswathiyum august 22 promo
thamizhum saraswathiyum august 22 promo

Thamizhum saraswathiyum Promo video : தமிழும் சரஸ்வதியும் சமீபத்திய எபிசோடில் அர்ஜுனை சிக்க வைக்க ரவுடியை துரத்தி சென்றார் போலீசார் ஆனால் எதிர்பாராத விதமாக ரவுடிக்கு அடிபட்டு விடுகிறது அதனால் மயங்கி விழுந்து விடுகிறார் ஹாஸ்பிட்டலில் வைத்து ட்ரீட்மென்ட் செய்கிறார்கள். பிறகு கண் விழித்த ரவுடி இடம் விசாரணையை நடத்துகிறார்கள் அதற்கு அந்த ரவுடி அர்ஜுனனின்  மாமனார் நடேசன் தான் எல்லாத்திற்கும் காரணம் எனக் கூறி விடுகிறார்.

இதெல்லாம் போக அர்ஜுன் செய்த தப்பை நிரூபிக்க முடியாமல் கோதை மற்றும் நடேசன் கதி கலங்கி நிற்கிறார்கள். மேலும் வீட்டிற்கு வந்த கோதை மற்றும் நடேசன் அவர்களிடம் மிகவும் நக்கலாக அர்ஜுன் குடும்பம் பேசிக் கொண்டிருக்கிறது. அது மட்டும் இல்லாமல் நிரூபிக்க முடியவில்லை என்பது போல் பேசிக் கொண்டிருக்க அதற்கு கோதை ரொம்ப நாளா விஷ செடியை வளர்த்துக்கிட்டு இருக்கோம் அத அடியோடு வெட்டி புடுங்கி எரிகிறேன் என கோதை பேசிக் கொண்டிருக்கிறார்.

அதேபோல் சரஸ்வதி சென்று கொண்டிருக்கும் பொழுது நடேசன் நண்பன் நடந்த அனைத்தையும் சரஸ்வதி இடம் கூறுகிறார் அதுமட்டுமில்லாமல் நீங்கள் அம்மன் கோவிலுக்கு சென்று விளக்கு போட்டால் உங்களுக்கு நல்லது நடக்கும் எனவும் கூறுகிறார்கள் இத்துடன் இன்றைய எபிசோடு முடிந்தது ஆனால் தற்பொழுது ஒரு ப்ரோமோ வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தப் ப்ரோமோ வீடியோவில் நடந்த அனைத்தையும் நடேசன் மற்றும் கோதை தன்னுடைய மருமகள் அதாவது கார்த்தியின் மனைவியிடம் கூறிக் கொண்டிருக்கிறார்கள் அதற்கு உடனே வசு என்னதான் ஒருத்தவன் தப்பித்துக் கொண்டிருந்தாலும் அவன் செஞ்ச தப்ப எல்லாத்தையும் கண்டிப்பா போன்ல வச்சிருப்பான் எப்படியாவது அந்த போனை எடுத்தோம் என்றால் எல்லா உண்மையும் உருவிடலாம் என பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

அப்படி இருக்க சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது வசு அர்ஜுன் போனை நைசாக ஆட்டையை போட்டு விடுகிறார் அது மட்டும் இல்லாமல் லேப்டாப்பில் கனெக்ட் செய்து மொத்த ஆதாரத்தையும் எடுத்து விடுகிறார் அந்த சமயத்தில் அர்ஜுனின் மாப்பிள்ளை போன் செய்துள்ளார் ஆனால் அர்ஜுன் போனை எடுக்காமல் இருந்துள்ளார். அர்ஜுனனின் அக்கா, மாமா இவ்வளவு டைம் கால் பண்ணியும் என் போனை எடுக்கல எனக் கேட்க போனை சார்ஜ் போட்டு உள்ளேன் என அர்ஜுன் கூர உடனே நான் போய் எடுத்துக் கொண்டு வருகிறேன் என மேலே செல்கிறார்.

அதற்குள் வசு அனைத்தையும் முடித்து விட்டேன் என நடேசன் மற்றும் கோதைக்கு சிக்னல் கொடுக்கிறார் இத்துடன் இந்த ப்ரோமோ வீடியோ முடிகிறது.