thamizhum saraswathiyum : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் சரஸ்வதிக்கு என்ன ஆச்சு என ராகினி யோசித்துக் கொண்டிருக்கிறார் அதுமட்டுமில்லாமல் புதிய வீட்டில் அனைத்து பொருட்களையும் எடுத்துக் வைத்துக் கொண்டு இருக்கிறார்கள் அந்த சமயத்தில் நானும் வேலை செய்கிறேன் எனக் கூற செய்யக்கூடாது என அனைவரும் கூறுகிறார்கள்.
அந்த சமயத்தில் அபி கால் செய்து சரஸ்வதி எப்படி இருக்கீங்க நான் ரொம்ப பயந்துட்டேன் என கூறுகிறார். அதுமட்டுமில்லாமல் ராகினி உங்க கிட்ட பேசணும்னு சொன்னா எனக் கூற உடனே கொடு என சரஸ்வதி கூறுகிறார் ராகினி சரஸ்வதி இடம் எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா இனிமே கேர்ஃபுல்லா இருங்க என ஆறுதல் கூறிக் கொண்டிருக்கிறார்.
அடுத்த காட்சியில் அர்ஜுனின் மாமா கம்பெனிக்கு வந்து ஒரு தொழிலாளியை டீயும் வடையும் வாங்கிக் கொண்டு வரச் சொல்லுகிறார் ஆனால் அவர் முடியாது என கூறி விடுகிறார்கள் அதனால் அந்தத் தொழிலாளியை அர்ஜன் மாமா அடித்து விடுகிறார். இதனால் பூகம்பம் வெடிக்கிறது. இந்த நிலையில் புதிய ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது அந்த ப்ரோமோ வீடியோவில் அர்ஜுன் தொழிலாளியை கூப்பிட்டு பேச்சு வார்த்தை நடத்துகிறார் அப்பொழுது ஒரு சீனியர் எம்ப்ளாயை உங்க மாமா அடித்து விட்டார் எனக் கூற அதற்கு அர்ஜுன் ஏதோ சொல்கிறார்.
உடனே அனைவரும் கோபப்பட்டு இங்க வேலை செய்வதற்கு செய்யாமல் இருக்கலாம் என கிளம்பி போகிறார்கள். அனைவரும் தமிழ் கம்பெனியில் வேலைக்கு செல்கிறார்கள். ஆனால் தமிழ் கம்பெனி இனிமேல் ரன்னாக கூடாது என அர்ஜுன் ஆலை வைத்து மொத்த கம்பெனியையும் எரிக்க சொல்லி திட்டம் போடுகிறார். கூட்டத்தில் ஒருவர் பணத்தை வாங்கிக் கொண்டு இந்த கேடுகெட்ட வேலையை பார்த்து விடுகிறார்.
அதனால் தமிழ் கம்பெனி மொத்தமும் எறிந்து நாசமாகிறது இதனால் தமிழ் பதறி அடித்து ஓடிக்கொண்டு வருகிறார். இத்துடன் இந்த ப்ரோமோ வீடியோ முடிகிறது.