கோதை-யையே வீட்டை விட்டு வெளியே போக சொன்ன அர்ஜுன்.? சட்டையை பிடித்து சண்டை போடும் நடேசன்.! அம்மா என்று கூட பார்க்காமல் அசிங்கப்படுத்தும் ராகினி.

thamizhum saraswathiyum september next week
thamizhum saraswathiyum september next week

Thamizhum Saraswathiyum : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் ராகினிடம் அர்ஜுன் எங்கள் குடும்பத்தை நாசம் செய்தது உங்கள் அம்மாவும் அப்பாவும் தான் அவங்களால்தான் என்னுடைய அப்பாவும் என்னுடைய அக்காவும் இறந்தாங்க, எங்க குடும்ப நல்லா வாழ்ந்த குடும்பம் உங்க அம்மா அப்பா உடைய சூழ்ச்சியாலதான் நாங்க இந்த நிலைமைக்கு வந்துள்ளோம் என பேசிக் கொண்டிருக்கிறார் அது மட்டும் இல்லாமல் முதலில் பழி வாங்க தான் இந்த வீட்டுக்குள்ளேயே வந்தேன் ஆனால் உன்னை காதலித்த பிறகு அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டேன்.

பிறகு எப்படியாவது எங்கள் கம்பெனியை மட்டும் மீட்டெடுக்க வேண்டும் என முடிவு செய்து சேர்மன் போட்டியில் கண்டிப்பாக ஜெயிக்க வேண்டும் என ஐடியா பண்ணினேன் அப்பொழுது இளங்கோ வந்து கூறியது அனைத்தும் உண்மைதான் ஆனால் தமிழை நான் எந்த ஒரு இடத்திலும் துன்புறுத்தவில்லை நானே என்னை கத்தியால் குத்திக்கொண்டு போட்டியில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக தான் அப்படி செய்தேன் அனைத்தையும் இழந்து நிற்கும்பொழுது எனக்கு வேறு வழி தெரியவில்லை.

என்னோட நிலைமையில் நீ இருந்தால் என்ன செய்வாய் என ராகினியை பார்த்து கேட்கிறார் அது மட்டும் இல்லாமல் எல்லாத்தையும் விடுறேன் என்னோட நீ மட்டும் இருந்தா போதும் என ஐஸ் வைக்கிறார். இதை ராகினி அனைவரிடம் முன்பும் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது அர்ஜுன் குடும்பம் இப்படி ஆனதுக்கு காரணம் நீங்க ரெண்டு பேரும் தான் என பேசுகிறார் உடனே அவன் சொல்வதை அனைத்தையும் நம்புகிறாயா என கார்த்தி கேட்க இவங்க இவ்வளவு சொல்லியும் அம்மாவும் அப்பாவும் அமைதியா இருக்காங்களே அதிலிருந்து உனக்கு தெரியலையா என பேசுகிறார் ராகினி.

உடனே நடேசன் அவர்கள் சொன்னது பாதி உண்மை ஆனால் பாதி பொய் அவங்க கம்பெனியை வாங்க நினைத்தது உண்மைதான் அதுக்காக பணம் ரெடி பண்ணினோம் ஆனா பணம் ரெடி பண்ண முடியவில்லை பிறகு பணத்தை முழுவதும் ரெடி செய்து கொண்டு வீட்டிற்கு சென்றோம் ஆனால் அங்கு கம்பெனியை பேங்காரர்கள் ஜப்தி செய்து விட்டார்கள் வேறு வழி இல்லாமல் பேங்கில் இருந்து தான் அந்த கம்பெனியை ஏலத்தில் எடுத்தோம் பிறகு நடந்த அனைத்தையும் அர்ஜுன் அப்பாவிடம் கூற தேடினும் ஆனால் அவர் கிடைக்கவில்லை என நடேசன் கூறுகிறார்.

இப்படியே சண்டை முற்றிக் கொண்டிருக்க ஒரு காலகட்டத்தில் இவ்வளவு நாள் உனக்காக தான் நான் பொறுத்துக் கொண்டிருந்தேன் இதுக்கு மேல என்னால பொறுமையா இருக்க முடியாது வீட்டை விட்டு வெளில போடா என அர்ஜுனனை பார்த்து கோதை கூறுகிறார் அதுமட்டுமில்லாமல் என் பொன்னையே எனக்கு எதிரா திருப்பி விட்டுடில்ல நீ இதற்கெல்லாம் அனுபவிப்பாய் என்பது போல் பேசுகிறார். அதே போல் கார்த்தியும் வீட்டை விட்டு வெளியே போடா என கூறும் பொழுது அர்ஜுன் நட்களாக சிரிக்கிறார் ராகினி திரும்பி பார்க்கிறார்.

பிறகு நீங்க சொன்னதெல்லாம் கரெக்டு தான் ஆனா என்ன வீட்டை விட்டு வெளியே போக சொல்ல உங்களுக்கு யாருக்குமே ரைட்ஸ் கிடையாது என அர்ஜுன் பேசுகிறார் அப்பொழுது கோதை நடேசன் என அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள் இத்துடன் இன்றைய எபிசொட் முடிகிறது அடுத்த வாரம் ப்ரோமோவில் திடீரென அர்ஜுன் சட்டையை பிடித்து நடேசன் சண்டை போடுகிறார் அதற்கு காரணம் அர்ஜுன் மொத்த சொத்தையும் எழுதி வாங்கிவிட்டார் என தெரிகிறது அதுமட்டுமில்லாமல் நடேசன் கையைப் பிடித்து ராகினி தள்ளி விடுகிறார் அவர் செய்ததில் என்ன தப்பு இருக்கிறது என்பது போல் பேசுகிறார். அதுமட்டுமில்லாமல் உங்க ரெண்டு பேருக்கும் பிறந்ததை நினைச்சு நான் ரொம்ப அசிங்கப்படுகிறேன் என கோதை நடேசனை பார்த்து ராகினி கூற கோதையின் மனம் உடைகிறது இத்துடன் இந்த ப்ரோமோ வீடியோ முடிகிறது.