thamizhum saraswathiyum : தமிழும் சரஸ்வதியும் சீரியலில் தமிழுக்கு இனிமேல் தொடர்ந்து தொல்லை கொடுக்க இருக்கிறார் மேகனா ஏனென்றால் தமிழ் தன்னை காதலிக்கவில்லை ஏற்கனவே திருமணம் ஆனவர் என தெரிந்து கொண்டார் தன்னை ஏமாற்றி விட்டதாக நினைத்து தமிழை பழிவாங்க துடிக்கிறார் மேகனா அதுமட்டுமில்லாமல் அர்ஜுன் மேகனாவும் தமிழை பழிவாங்க கூட்டணி சேர்ந்து விட்டார்கள்.
இந்த நிலையில் தமிழுக்கு கிடைக்க வேண்டிய ஆர்டரை கேன்சல் பண்ணுகிறார்கள். மேலும் மேகனா இனிமேல் உங்களால் எதையும் செய்ய முடியாது உங்கள மொத்தமா நடுத்தெருவுக்கு கொண்டு வருவேன் என சபதம் போடுகிறார். ஆனால் சரஸ்வதி உங்களைவிட பெரிய பெரிய ஆளுங்க எங்க கூட மோதி மூக்கு உடைந்து போய் நிக்கிறாங்க அடுத்தது நீங்க வரிங்களா வா பாத்துடலாம் என பதிலுக்கு சபதம் போடுகிறார்.
இந்த நிலையில் புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது இந்த ப்ரோமோ வீடியோவில் அர்ஜுன் தமிழ் கம்பெனியில் ஆட்களை வைத்து கண், துப்பாக்கி என ஒலித்து வைத்து விடுகிறார். உடனே மேகனா அர்ஜுனிடம் நீங்க சொன்ன ஆளுங்க எல்லாத்தையும் கரெக்டா பண்ணிட்டாங்களா என கேட்க இந்நேரம் தமிழ் கம்பெனிக்கு ரெய்டே போயிருப்பாங்க என பேசுகிறார்.
அதேபோல் ரைட் வந்து அதிகாரிகள் அனைத்து மெட்டீரியலையும் பார்க்கிறார்கள் அவர்களுக்கு கண் மற்றும் வெடிகுண்டு எதுவும் கிடைக்கவில்லை உடனே சரஸ்வதி மேகனாவுக்கு போன் செய்து எங்க கம்பெனிக்கு ரெய்டு வர வைக்கிற அளவுக்கு வந்துட்டீங்களா என கேள்வி கேட்கிறார்.
GOAT படத்தில் மெயின் வில்லனே இவர் தான்.? அட இவர் முதுகுக்கு பின்னால் குத்துவாரே..
அதற்கு மேக்னா நான் எதுக்கு அது மாதிரி செய்யப் போறேன் என சொல்லி தப்பிக்க பார்க்கிறார் நீங்க வச்ச பொருளை இங்க இருந்தா அவ்வளவு சேஃப்டி கிடையாது அதனால உங்களுக்கு திருப்பி அனுப்பிட்டேன் என கூறுகிறார் உங்க வீட்டுக்கு தான் இந்நேரம் ரைட் வந்து இருப்பாங்க என பேசுகிறார் இதனால் மேகனா பதற்றம் அடைந்து என்ன சொல்ற என பதறி அடித்து போய் பேசுகிறார்,.
தனக்கு கொடுத்ததை இரண்டு மடங்காக திருப்பி கொடுத்துள்ளார் சரஸ்வதி இந்த அடியை மேகனா தாங்குவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.