Thamizhum saraswathiyum : தமிழும் சரஸ்வதியும் சமீபத்திய எபிசோடில் அர்ஜுன் ஒரு ரவுடியை வைத்து தன்னை தானே குத்திக் கொண்டதை எப்படியாவது நிரூபித்து தமிழை காப்பாற்ற வேண்டும் என நடேசன் மற்றும் கோதை இருவரும் களத்தில் இறங்குகிறார்கள். ஆனால் எவ்வளவு முயற்சி செய்தும் அர்ஜுன் தப்பித்துக் கொண்டே இருந்தார் கடைசியாக அந்த ரவுடி சென்னை வந்ததால் அவனை எப்படியாவது மடக்கி பிடிக்க வேண்டும் என போலீசு உதவியுடன் செல்கிறார்கள்.
ஆனால் போலீஸ் அந்த ரவுடியை துரத்தி செல்லும் பொழுது எதிர்பாராத விதமாக ஆட்டோவில் இடித்து விழுந்து விடுகிறார் மயக்க நிலையில் இருந்த அந்த ரவுடியை போலீசார் ஹாஸ்பிடலுக்கு தூக்கி செல்கிறார்கள். ஹாஸ்பிடலுக்கு தூக்கி சென்ற ரவுடி கண் முழிக்காமல் இருந்ததால் சந்தோஷத்தில் மிதக்கிறான் அர்ஜுன். அதுமட்டுமில்லாமல் இவன் கண் விழித்தால் நமக்கு தான் டேஞ்சர் என அர்ஜுனும் அவருடைய மாப்பிள்ளையும் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில் தற்போது ஒரு ப்ரோமோ வீடியோ வெளியாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது ஹாஸ்பிடலில் இருந்த ரவுடி திடீரென கண் விழிக்கிறார் அவரிடம் போலீசார் உன்னை யார் இந்த வேலையை செய்ய சொன்னது என கேள்வி கேட்கிறார்கள் ஆனால் மயக்க நிலையில் இருந்த ரவுடி அர்ஜுன் அர்ஜுன் என கூறிக் கொண்டிருக்கும் பொழுது திடீரென அர்ஜுனின் மாமனார் தான் இதுபோல் வேலையை செய்ய சொன்னது என்ன பொய் சொல்லி விடுகிறார்.
இதனால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியாகிறார்கள். அதேபோல் அர்ஜுனும் சந்தோஷத்தில் மிதக்கிறான். பிறகு அனைவரும் வீட்டிற்கு வருகிறார்கள் அப்பொழுது நடேசன் நடு வீட்டில் நிக்க வைத்து அர்ஜுனின் அம்மா ஏதோ ரவுடியை கண்டுபிடிக்க போறேன்னு சொன்னிங்களே கண்டுபிடிச்சீங்களா என தெனாவட்டாக கேட்கிறார் உடனே அர்ஜுன் கண்டுபிடிச்சாச்சுமா அது யாருன்னா என்று இழுத்த படி மாமா தான் எனக் கூறுகிறார்.
உடனே கோதை மற்றும் நடேசன் இருவரும் அதிர்ச்சி அடைகிறார்கள் அர்ஜுனனின் ஆட்டமும் வெறித்தனமாக மாறுகிறது இனி யாருக்குமே அர்ஜுன் பயப்பட போவதில்லை தைரியமாக எல்லா தப்புகளையும் செய்து ஈசியாக ராகினியை வைத்து தப்பித்து விடுவார் என தெரிகிறது இனி தமிழும் சரஸ்வதி எபிசோடு மிகவும் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.