Thamizhum saraswathiyum : சின்னத்திரையில் பிரபலமாக வலம் வருபவர் நடிகை நக்ஷத்ரா நாகேஷ் இவர் வானவில், சன் சிங்கர் என்ற நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளியாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து இவர் சீரியலில் ஜொலித்துக் கொண்டிருந்தார் அந்த வகையில் வாணி ராணி, லட்சுமி ஸ்டோர்ஸ், மின்னலே, நாயகி என பல தொடர்களில் நடித்து வந்தார். அதேபோல் சீரியலை தாண்டி ஒரு சில திரைப்படங்களில் சிறுசிறு கதாபாத்திரத்திலும் ஷார்ட் ஃபிலிம் இல் கதாநாயகியாகவும் நடித்து வந்தார்.
இந்த நிலையில் நடிகை நக்ஷத்ரா சீரியலை தாண்டி தற்பொழுது திரைப்படங்களிலும் ஒரு சில காட்சிகளில் நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியாகிய சேட்டை, வாயை மூடி பேசவும், புலிவால், இரும்புக்குதிரை, நம்பியார், மிஸ்டர் லோக்கல், இந்திரஜித் ஆகிய திரைப்படங்களும் அடங்கும்.
மேலும் தற்பொழுது தமிழும் சரஸ்வதியும் என்ற சீரியலில் நடித்து பிரபலம் அடைந்து வருகிறார் நக்ஷத்ரா இந்தநிலையில் தன்னுடைய நண்பரான ராகவ் என்பவரை காதலிக்க தொடங்கினார் இவர்கள் நீண்ட காலம் காதலித்து வந்த நிலையில் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணமும் செய்து கொண்டார்கள் சினிமாவில் நடித்து வந்த இவர் பெரிதாக சினிமா வாய்ப்பு கிடைக்காததால் சின்ன திரையில் கவனம் செலுத்த தொடங்கினார்.
சமீப காலமாக பல நடிகைகள் தங்களுடைய கசப்பான அனுபவம் பற்றி சமூக வலைதளத்தில் நேர்காணலில் கூறி வருகிறார்கள் அந்த வகையில் இளம் நடிகைகள் முதல் முன்னணி நடிகைகள் வரை மிகவும் தைரியமாக தங்களுடைய கசப்பான அனுபவத்தை கூறி வருகிறார்கள் அந்த வகையில் நடிகை நக்ஷத்ரா அவர்களிடம் கசப்பான அனுபவம் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.
அப்பொழுது அவர் கூறியதாவது ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது உடைமாற்ற கூட எந்த ஒரு இடமும் கிடையாது ஒரு கேரவனில் சென்று உடைமாற்ற சொன்னார்கள் அந்த கேரவனிற்கு விண்டோ எதுவுமே கிடையாது முன்புறத்தில் கண்ணாடி மட்டுமே இருந்தது வேறு வழியில்லாமல் உடைமாற்ற ஆரம்பித்தேன்.
ஆனால் கேரவனுக்கு வெளியே ஐந்து பேர் சேர் போட்டு அமர்ந்திருந்தார்கள் அவர்கள் நான் உடை மாற்றுவதை வச்ச கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள் ஒரு பெண் உடைமாற்றுகிறாரே என்று திரும்பி கூட உட்கார வில்லை அந்த எண்ணம் கூட அவர்களுக்கு தோன்றவில்லை என தன்னுடைய கசப்பான அனுபவம் பற்றி தமிழும் சரஸ்வதியும் சீரியலில் நடித்துள்ள நக்ஷத்திர கூறியுள்ளார்.