விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வந்தாலும் தமிழும் சரஸ்வதியும் சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாலம் இருந்து வருகிறது, இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் படத்திற்கு போகலாம் என ஏற்கனவே பிளான் பண்ணி இருந்தார்கள் அதற்காக தமிழ் படத்திற்கு கிளம்பி கொண்டிருக்கிறார் தமிழ் நமச்சியையும் கூப்பிட நீங்க ரெண்டு பேரும் ஜாலியா போயிட்டு வாங்க நான் ஏன் இடையில நந்தி மாதிரி என்பது போல் கூறி விடுகிறார்.
தமிழ் சரஸ்வதியை அழைப்பதற்காக வீட்டிற்கு செல்கிறார் ஆனால் வீட்டில் சரஸ்வதி கிடையாது அது மட்டும் இல்லாமல் சரஸ்வதி வேலை செய்யும் இடத்திற்கு செல்கிறார், அங்கும் சரஸ்வதி கிடையாது இதனால் டென்ஷனான தமிழ் சரஸ்வதிக்கு கால் பண்ணுகிறார் ஆனால் மொபைல் சுவிட்ச் ஆப் என வருகிறது. இதனால் டென்ஷனான தமிழ் அங்கும் இங்கும் தேடிக் கொண்டிருக்கிறார் அந்த சமயத்தில் லோனுக்காகவும் கிரெடிட் கார்டுக்காகவும் கால் வருகிறது. இதனால் இன்னும் டென்ஷன் ஆகிறார்.
பிறகு சரஸ்வதி மெக்கானிக் ஓனருடன் வண்டியில் வந்து கொண்டிருக்கும் பொழுது தன்னுடைய மொபைல் சுவிட்ச் ஆப் ஆனதால் மெக்கானிக் ஓனர் மொபைலில் இருந்து தமிழுக்கு கால் செய்ய இது கிரெடிட் கார்டு லோன் காரங்க தான் என எண்ணி தமிழ் கட் செய்து விட்டு தேடிக் கொண்டிருக்கிறார். அந்த சமயத்தில் மளிகை கடை பக்கத்தில் இருக்கும் பூக்கடை அம்மாவிடம் சரஸ்வதி வந்தாளா என விசாரித்துக் கொண்டிருக்கும் பொழுது அருகில் உள்ள நபர் சரஸ்வதி அந்த பைக் மெக்கானிக் தம்பியுடன் உட்கார்ந்து கொண்டு போனார்.
அதுமட்டுமில்லாமல் நீங்கள் பெரிய இடத்தில் இருந்து வெளியே வந்தீங்க இதெல்லாம் உங்க கிட்ட சொல்லக்கூடாது ஆனாலும் கடைசில ஏன் சொல்லலைன்னு சொல்லுவீங்க என்ன சரஸ்வதியையும் மெக்கானிக்கையும் சேர்த்து வைத்து தவறாக பேசுகிறார் இதனால் தமிழ் கடுப்பாகி அவரை அடித்து விடுகிறார் அந்த சமயத்தில் சரஸ்வதி அந்த மெக்கானிக் ஓனருடன் வந்து இறங்குகிறார் பின்பு இன்னும் கோபத்துடன் சரஸ்வதியை தமிழ் அழைத்துக் கொண்டு போகிறார்.
அடுத்த காட்சிகள் நடேசன் அர்ஜுனை கத்தியால் குத்தியது யார் என்பதை கண்டுபிடிப்பதற்காக எந்த இடத்தில் அந்த சம்பவம் நடந்தது அருகில் உள்ள சிசிடிவியை பார்ப்பதற்காக செல்கிறார் அங்கு இருக்கும் ஊழியரிடம் விசாரித்துக் கொண்டிருக்கும் பொழுது ஒரு வாரத்திற்கு முன்பு டெலிட் ஆயிருக்கும் ஒருவேளை பேக்கப் எடுத்து வைத்திருந்தால் சொல்கிறேன் என உள்ளே சென்று வருகிறார் அந்த ஊழியர் உங்க நல்ல நேரம் மூணு மாதம் பேக் அப் அப்படியே இருக்கிறது என்ன தேதி என்று சொன்னால் கண்டுபிடித்து விடலாம் எனக் கூற தேதி எனக்கு தெரியாது நீங்க குடுங்க நானே பார்த்துக்கொள்கிறேன் என கூறி விடுகிறார்.
பிறகு அந்த வீடியோ ஃபுட்டேஜய் எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வருகிறார். வீட்டிற்கு வந்த நடேசன் ராகினி இடம் லேப்டாப்பை வாங்கிக் கொண்டு ரூம் கதவை பூட்டிக்கொண்டு வீடியோ ஃபுட்டேஜ் வைத்து பார்க்க ஆரம்பிக்கிறார் நிறைய வீடியோ இருப்பதால் எந்த தேதியில் என்று குழப்பத்தில் இருக்கிறார்.
மற்றொரு பக்கம் தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் சினிமாவிற்கு கிளம்புகிறார்கள் ஆனால் அங்கு நேரமானதால் படம் அரைமணி நேரம் ஓடிவிட்டது அதனால் தமிழ் கோவப்பட்டு டிக்கெட்டை கிழித்து எரிகிறார். படத்திற்கு தான் போக முடியலை அட்லீஸ்ட் சாப்பிட போகலாம் என சரஸ்வதி கூப்பிட முடியாது என மறுக்கிறார் தமிழ் பிறகு ஒப்புக்கொள்கிறார் இருவரும் சாப்பிடுவதற்காக வெளியே செல்கிறார்கள்.
அந்தப் பக்கம் நடேசன் வீடியோவை ஒவ்வொன்றாக பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது அர்ஜுன் ஜன்னலில் இருந்து எட்டிப் பார்த்து விடுகிறார். இது சம்பவம் நடந்த இடம் ஆச்சு என சிதாரித்த அர்ஜுன் இதை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் இல்லை என்றால் நாம் மாட்டிக் கொள்வோம் என எண்ணி ராகினி ரூம்மிற்க்கு செல்கிறார்.
அங்கு ராகினி பாப்பா அசைவதாக கூற ஆனால் அர்ஜுன் பதற்றத்தில் நின்று கொண்டிருக்கிறார் பின்பு எங்கேயோ செல்ல வேண்டுமென்று சொன்னியே என கேட்க ஆமா வாக்கிங் செல்லனும் என கூறுகிறார் ராகினி வாங்க போகலாம் என கூப்பிட எனக்கு வேலை இருக்கிறது எனக் கூறுகிறார் பிறகு உங்க அக்காவை கூட்டிக் கொண்டு போகிறேன் என கூற அவருக்கு நடக்க முடியாது எனக் கூறுகிறார். பிறகு அர்ஜுன் மாமாவை கூட்டிக்கொண்டு போகிறேன் என கூற அவருக்கு பொறுப்பே கிடையாது என மழுப்பி விடுகிறார் பிறகு உங்க அப்பாவை கூட்டிக் கொண்டு போ என அர்ஜுன் ஐடியா கொடுக்கிறார்.
சரி என ராகினியும் தன்னுடைய அப்பாவை அழைக்கிறார் அவர் ரூமில் வீடியோவை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது வேறு வழி இல்லாமல் லேப்டாப்பை ஷட்டவுன் செய்துவிட்டு கிளம்புகிறார் அந்த நேரம் பார்த்து அர்ஜுன் வீடியோவை டெலிட் செய்வதற்காக உள்ளே வருகிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.