தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் தமிழ் உமாபதி சாரை பார்த்துவிட்டு வரும் வழியில் அர்ஜுன் வழி மறித்து வம்பு செய்கிறார் அது மட்டும் இல்லாமல் அத்தையை எதிர்த்து நின்னால் தோத்து விடுவீர்கள் எதற்காக தேவையில்லாத வேலை உங்க அம்மாவை எதிர்த்து நின்னா என்ன நிலைமைன்னு உங்களுக்கே தெரியாதா? முதல்ல நிக்கலைன்னு சொன்னீங்க அப்புறம் நிக்கிறேன்னு சொல்றீங்க பயம் இருந்தா விலகிப் போக வேண்டியது தானே என அர்ஜுன் தமிழை சீண்டுகிறார்.
உடனே தமிழ் நான் கண்டிப்பாக நிற்பேன் என கூறுகிறார் அது மட்டும் இல்லாமல் அர்ஜுன் அப்படி நீங்க தோத்துட்டீங்கன்னா இந்த தொழிலை விட்டு ஓடணும் என சவால் விடுகிறார் இதனால் அதிர்ச்சடைகிறார் சரஸ்வதி மற்றும் நமச்சி அதுமட்டுமில்லாமல் இவனிடம் என்ன பேச்சு என கிளம்ப பார்க்கிறார்கள் ஆனாலும் அர்ஜுன் விடாமல் பயம் வந்துருச்சா தோத்துருவேன்னு பயம் வந்துருச்சா என சீண்டி தமிழை சவாலுக்கு ஒப்புக்கொள்ள வைக்கிறார் ஆனால் தமிழும் நான் தோத்துட்டா இந்த தொழிலை விட்டு போயிடறேன் ஆனா நான் ஜெயிச்சுட்டா நீ என்ன பண்ணுவ மாப்ள என கேட்கிறார்.
அர்ஜுன் என்ன பண்ணனும் என கேட்க உடனே கோதை இன்டஸ்ட்ரியல் உன் கால் தடமே படக்கூடாது என திட்டவட்டமாக கூறிவிடுகிறார். இதனால் அர்ஜுன் அதிர்ச்சி அடைகிறார் ஆனாலும் சவாலை ஏற்றுக் கொள்கிறார் பின்பு வீட்டிற்கு சென்றவுடன் அவரின் அக்கா அம்மா மாமா என அனைவரும் திட்டுகிறார்கள் தேவையில்லாத வேலையை பார்த்து விட்டதாக கூறுகிறார்கள் ஆனால் அர்ஜுன் இந்த எலக்ஷனில் கோதையை ஜெயிக்க வைத்து விட்டால் கோதைக்கு என் மீது நம்பிக்கை வந்துவிடும்.
தமிழ் தோற்று விட்டால் கண்டிப்பாக இந்த தொழிலை விட்டு போய்விடுவான் அதற்குப் பிறகு சொத்து அனைத்தும் நமக்கு தான் என திட்டம் போடுகிறார். எதற்காக நீங்கள் சபதம் போட்டீர்கள் என சரஸ்வதி தமிழிடம் கேட்க அதற்கு எப்படி இருந்தாலும் இந்த எலக்சன்ல ஜெயிச்சா மட்டும் தான் நமக்கு ஆர்டர் கிடைக்கும் அதனாலதான் நான் ஒத்துக்கிட்டேன் நாம தோத்துட்டா கண்டிப்பா எந்த ஆர்டர் கிடைக்கப்போவதில்லை அப்படியே கிடைச்சாலும் அது அர்ஜுன் விடமாட்டான் அதனால கண்டிப்பா இந்த எலக்சன்ல ஜெயிச்சு ஆகணும் என கூறுகிறார்.
ஒவ்வொரு அலுவலகமாக சென்று ஓட்டு கேட்டு வருகிறார்கள் தமிழ் மற்றும் உமாபதி, சரஸ்வதி, நமச்சி அப்படி ஒரு ஆபீஸில் சென்று ஓட்டு கேட்கும் பொழுது கோதை இண்டஸ்ட்ரியல் தமிழுக்கு கொடுத்த ஆர்டரை திருடி தமிழின் வளர்ச்சியை தடுக்க நினைத்தார்கள் அதனால் கோதையிடம் எப்படி நேர்மை இருக்கும் தலைமை பொறுப்பில் இருக்கும் அவரே இதுபோல் நடந்து கொண்டால் எப்படி அவர் தொழிலாளிகளுக்கு நன்மை நினைப்பார் என கூறுகிறார்கள்.
அப்படி உமாபதி சார் சொல்லும்பொழுது தமிழ் மற்றும் சரஸ்வதி அதிர்ச்சி அடைகிறார்கள். வெளியே வந்த பிறகு இது போல் கூற வேண்டாம் என கேட்க அதற்கு உமாபதி சார் அவங்க செஞ்சத தான் நான் கேட்கிறேன் நான் ஒன்னும் தப்பா சொல்லலையே என உமபதி சார் கூறுகிறார். ஜெயிக்கணும் என்றால் அவங்க குறையை சொல்லித்தான் ஆகணும் என திட்டவட்டமாக கூறிவிடுகிறார்.
கோதை பிரபல கம்பெனிக்கு ஓட்டு கேட்டு செல்கிறார் அங்கு உமாபதி சார் உங்கள் கம்பெனியில் மோசடி நடந்ததாகவும் தமிழுக்கு கொடுத்த மெட்டீரியலை திருடியதாகவும் உமாபதி சார் கேட்டு இப்பொழுதுதான் சென்றார் என கோதையிடம் சொல்கிறார் அதனால் கோதை அதிர்ச்சடைகிறார் அதுமட்டுமில்லாமல் அர்ஜுன் இதுக்கெல்லாம் காரணம் தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் தான் அவர்கள் தான் இது போல் பேச வைத்துள்ளார்கள் என கோதையை ஏற்றி விடுகிறார் அர்ஜுன்.
இதனால் கடுப்பான கோதை உமாபதி இருக்கும் இடத்திற்கு சென்று நீங்கள் செய்வது சரியா நீங்களா இதை மாதிரி பேசுறீங்களா இல்ல அவங்க சொல்லிக் கொடுத்துதான் பேசுறீங்களா? என கேட்க அதற்கு சரஸ்வதி நாங்க ஏதும் சொல்லவில்லை அத்தை என சரஸ்வதி சொல்ல நீ எதுவும் பேசாத என கோதை கோவத்துடன் சொல்கிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.