தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் வாழ்த்து கூறுவதற்காக நடேசன் சரஸ்வதி வீட்டிற்கு வந்துள்ளார். அப்பொழுது தமிழ் மனசு மாறி அப்பா என கூப்பிடுகிறார் அதுமட்டுமில்லாமல் ஸ்வீட் ஊட்டி கொண்டு இருவரும் பாசத்தை வெளி காட்டுகிறார்கள். மற்றொரு பக்கம் நமச்சி கமெண்ட் அடிக்க தமிழ் மற்றும் நடேசன் இருவரும் இணைந்து நமைச்சியை கிண்டல் அடிக்கிறார்கள். இருவரும் பேசிக்கொள்வதால் ஊர் கண்ணே பட்டுவிடும் என சரஸ்வதி திருஷ்டி சுற்றுகிறார்.
அடுத்த காட்சியில் தமிழ் இடம் சரஸ்வதி கூறிவிட்டு ஒரு முக்கியமான வேலையாக வெளியே போயிட்டு வருகிறேன் என வெளியே செல்கிறார் அதேபோல் நடேசன் கிளம்புகிறார் சரஸ்வதி வீட்டில் இருந்து வெளியே வருவதை அர்ஜுன் மாப்பிள்ளை பார்த்து விடுகிறார். இதனை கோதையிடம் பற்ற வைக்க வேண்டும் என குடுகுடு என உள்ளே ஓடுகிறார் அந்த சமயத்தில் நடேசன் உள்ளே வருகிறார். கோதை எழுந்து மாமா எங்கே என வசுவிடம் கேட்க அவர் வாக்கிங் செல்வதாக கூறியுள்ளார்.
எங்க போனீங்க என கோதை கேட்க வாக்கிங் சென்று விட்டு பிரண்டை பாக்க போனேன்னு என கூறுகிறார். உடனே அர்ஜுனின் மாப்பிள்ளை வாக்கிங் போன ஜிம் ஒர்க் அவுட் பண்ணுனேன் என சொல்லுங்கள் என அடித்து விடுகிறார். ஏன் அப்படி பேசுகிறீர்கள் என கேட்க சாப்பிடலாமா என அர்ஜுன் குடும்பம் கேட்க சாப்பாடு வேணாம் என கூறுகிறார் நடேசன் உடனே அர்ஜுனனின் மாப்பிள்ளை அவர் விருந்து சாப்பிட்டு வந்து விட்டாரா என கேட்கிறார்.
இவன் நக்கலாக பேசுவதை பார்த்த அர்ஜுன், மாமா ஏன் இப்படி பேசுறீங்க என கேட்கிறார் உடனே அவர் சரஸ்வதி வீட்டில் இருந்து வருகிறார் விருந்து சாப்பிட்டுவிட்டு வருகிறார். நாமலே ரச சோறு சாப்பிடுகிறோம் ஆனா அவருக்கு மட்டும் விருந்து என கூற உடனே கோதை உண்மையா என கேட்கிற ஆமாம் அவங்க நேர்மையா ஜெயிச்சிருக்காங்க ஒரு வாழ்த்து சொல்லிட்டு வரலாம் என்று போனேன் என கூறுகிறார். இதனால் கோதை டென்ஷன் ஆகிறார் அதுமட்டுமில்லாமல் அர்ஜுன் மற்றும் கார்த்திக் என்னப்பா இப்படி பண்றீங்க நாம தோத்துட்டோம்னா அவங்களே சந்தோஷத்துல இருக்காங்க நீங்க போய் அவங்கள பாத்துட்டு வந்து இருக்கீங்க என ஏத்தி விடுகிறார்.
அதனால் கோதை இன்னும் டென்ஷன் ஆகிறார் அதுமட்டுமில்லாமல் நான் மட்டும்தான் தோத்து இருக்கேன் என் தோல்வியில் யாருக்கும் பங்கு கிடையாது. அவங்க அவங்க வேலையைத்தான் பார்க்குறீங்க என்பது போல் கூறுகிறார். உடனே ராகினி என்னப்பா நீங்க இப்படி பண்றீங்க அம்மா எவ்வளவு சோகமா இருக்காங்க இந்த நேரத்துல இந்த மாதிரி பண்ணிட்டு இருக்கீங்க என்பது போல் பேசுகிறார்.
அடுத்த காட்சியில் சரஸ்வதி தமிழுக்கு சர்ப்ரைஸ் ஆக வேஷ்டி சட்டையை எடுத்துக் கொண்டு வந்து கொடுக்கிறார், இதனால் தமிழ் கோபப்படுவது போல் நடித்து சரஸ்வதிக்கும் நமச்சிக்கும் புதிய டிரஸ்சை கொடுக்கிறார் இதைப் பார்த்த நமச்சி ரெண்டு பேரும் ஒரே மாதிரி யோசிக்கிறீங்க ரொம்ப கொடுத்து வச்சவங்க எனக் கூறுகிறார் அதுமட்டுமில்லாமல் இருவரும் ரொமான்ஸ் செய்யும் நேரத்தில் நான் எதையும் பாக்கல நான் கடைக்கு போயிட்டு வரேன் என ஓடி விடுகிறார் நமச்சி.
அடுத்த காட்சியில் கோதை வீட்டிற்கு உமாபதி மற்றும் அசோசியேஷன் நண்பர்கள் வருகிறார்கள் அப்பொழுது அர்ஜுன் மற்றும் கார்த்திக் தெனாவட்டாக நிற்கிறார்கள் ஆனால் நடேசன் என்ன வந்தவங்கள வாங்க கூட கூப்பிடாம நிக்கிறீங்க என உள்ளே அழைத்துச் செல்கிறார் அதுமட்டுமில்லாமல் தமிழ் பதவி ஏற்கிறார் நீங்கள் தான் வந்து அனைத்தையும் முடித்து வைத்துவிட்டு பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என கூறுகிறார்கள் ஆனால் கோதை என்னால் வர முடியாது என முதலில் கூறுகிறார்.
நடேசன் இதுதான் நம்முடைய கடமை என அவருக்கு புரிய வைக்கிறார் இந்த சமயத்தில் அர்ஜுனனின் அக்கா தமிழும் சரஸ்வதியும் ஜெயிச்சிடோம் என தெனாவட்டுல இருப்பாங்க அதெல்லாம் அத்தை பாக்கணுமா என ஏத்தி விடுகிறார் உடனே நடேசன் கோபப்பட்டு வாய மூடுமா என கத்துகிறார். கோதைக்கு நடேசன் புரிய வைக்கிறார் நாம தான் எல்லாத்தையும் செய்யணும் என கூறுகிறார் உடனே வரேன்னு ஒத்துக் கொள்கிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.