மாப்புள இந்த அடி உனக்கு விழவேண்டியது.! போஸ்டர் விஷயம் தெரிந்து கார்த்தியையும் அர்ஜுனையும் லேஃப்ட் அண்ட் ரைட் வாங்கிய கோதை.!

இன்றைய தமிழும் சரஸ்வதியும் எபிசோடில் அசோசியேஷன் நம்பர் தமிழ் ஜெயித்து விட்டதாக அறிவிக்கிறார்கள். அப்பொழுது அர்ஜுன் கார்த்தி மூஞ்சில் இ ஆடவில்லை அதுமட்டுமில்லாமல் கோதை டீம் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். இந்த சமயத்தில் நமச்சி விசில் அடித்துக் கொண்டாடுகிறார் அது மட்டும் இல்லாமல் சங்கத் தலைவர் அசோசியேஷன் தலைவர் என நமச்சி கோஷம் போடுகிறார் அதற்கு பக்கத்தில் உள்ளவர்களும் வாழ்க என வாழ்த்துகிறார்கள்.

இந்த சமயத்தில் தொழிலதிபர் ஒருவர் நீங்கள் நேர்மையானவர் கண்டிப்பாக நீங்கதான் ஜெயிப்பீங்க உங்களுடைய நல்ல மனசுக்கு நல்லபடியா தலைவர் பொறுப்ப நடத்துவீங்க என்பது போல் கூறுகிறார். அதே போல் நமச்சி சில பேர் ஜெயிக்கிறதுக்கு முன்னாடியே வெடி வெடிக்கலாம் என்று சொல்வார்கள் வெற்றின்ன என்னன்னு நீ காமிச்சிட்ட வெடி எப்படி வெடிக்கிறது என்று நான் காமிக்கிறேன் என கூறிக்கொண்டு நமச்சி வெளியே செல்கிறார்.

இந்த சமயத்தில் தமிழுக்கு அனைவரும் வாழ்த்து கூறுகிறார்கள் ஆனால் நடேசன் வந்தது வந்துட்டோம் தமிழுக்கு வாழ்த்து கூறிவிட்டு செல்லலாம் இல்லையென்றால் தப்பா நினைப்பார்கள் எனக் கூற அதற்கு கோதை கிளம்பி செல்கிறார். லிஃப்ட் அருகில் போகும்பொழுது சில முதலாளிகள் போகிறார்கள் அவர்களை கூப்பிட்டு இப்படி நம்ப வச்சு ஏமாற்றிவிட்டீர்களே என கோதை கேட்க உடனே நீங்க சொந்த மகன்னு கூட பாக்காம எலக்சனுக்காக இப்படி போஸ்டர் அடிச்சு ஒட்டிட்டீங்களே என அந்த முதலாளி கூறுகிறார்.

அதுமட்டுமில்லாமல் போஸ்டரையும் கோதையிடம் காட்ட கோதை அதிர்ச்சி அடைகிறார். இந்த சமயத்தில் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் கோதை தோற்று விட்டதை தெரிந்து அதிர்ச்சி அடைகிறார்கள் எப்படி நடந்துச்சு என கேட்டுக் கொண்டிருக்கிறார். அப்பொழுது கோதை வீட்டிற்கு வருகிறார். கோதைக்கு அனைவரும் ஆறுதல் கூறுவது போல் பேசுகிறார்கள் ஆனால் அர்ஜுன் டீம் ஆரத்தி எடுத்து வைத்தேன். நீங்கதான் ஜெயிப்பேன் என்று கூறுகிறார்கள்.

கோதை எல்லாரும் என்னை நம்ப வைத்து ஏமாத்திட்டாங்க இதை யார் செஞ்சது போஸ்ட் அடிச்சு ஓட்டுனது யார் என கேட்டுக் கொண்டிருக்கும் பொழுது நடேசன் வேற யார் செய்வார் இவங்க ரெண்டு பேரும் தான் செஞ்சாங்க என அர்ஜுனையும் கார்த்திகையும் கூறுகிறார். உடனே கோதை கார்த்தியிடம்  அப்பா சொல்வது உண்மையா என கார்த்தி இடம் கேட்க அது இல்லை என கூறும் பொழுது செவுளில் அறைந்து விடுகிறார். இந்த அடியை பார்த்த அர்ஜுன் அதிர்ச்சி அடைகிறார்.

எங்கிருந்து வந்தது உங்களுக்கு இந்த தைரியம் என கோதை கத்துகிறார் அந்த சமயத்தில் நடேசன் இப்படி ஒரு யோசனை நம்ம மாப்பிள்ளை தவிர வேறு யாரு கொடுக்க முடியும் என கூற கோதை உங்களிடம் படிச்சு படிச்சு சொன்ன குறுக்கு வழியில் போக வேண்டாம் என கூற அதற்கு அர்ஜுன் இல்ல அத்தை நீங்க சின்ன முதலாளியை கூப்பிட்டு பேசினது எந்த அளவு ஒர்க் அவுட் ஆகும்னு தெரியல அதனாலதான் இப்படி செஞ்சேன் என கூறுகிறார் இதனால் கோதை இன்னும் கோபத்துடன் கத்துகிறார்.

கோதைக்கு வசு மற்றும் வசூவின் அம்மா ஆறுதல் கூறுகிறார்கள் என விடுங்க அத்த நம்ம வீட்டு ஆளுதான ஜெயிச்சாங்க என வசு கூற அவன் நம்ம வீட்டு ஆளே கிடையாது என்ன தோக்கடிச்சிட்டான் எல்லார் முன்னாடியும் நான் நேர்மை இல்லாதவன்னு நிரூபிச்சிட்டான் என கோதை கத்துகிறார் அதுமட்டுமில்லாமல் எனக்கு செத்து போயிடலாம்  போல இருக்கு எப்பவுமே வர நெஞ்சு வலி இப்ப வந்தா நல்லா இருக்கும் என்பது போல் கூற உடனே அனைவரும் அதிர்ச்சடைகிறார்கள்.

ஒரு கட்டத்தில் உங்க மூஞ்சிலயே முழிக்க எனக்கு பிடிக்கவில்லை என கோதை சென்று விடுகிறார் மற்றொரு பக்கம் தமிழுக்கு சரஸ்வதி ஸ்வீட் ஊட்டி கொண்டு சந்தோஷத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். அத்த ரொம்ப கோவமா போனாங்க என்ன சரஸ்வதி கூற நமச்சி அப்படித்தான் இருக்கும் என பேசுகிறார் உடனே தமிழ் அதை விடுடா சந்தோஷமா இருக்கற நேரத்துல அது எதுக்கு எனக் கூறுகிறார்.

இந்த சமயத்தில் தமிழுக்கு வாழ்த்து கூற சந்திர கலா வருகிறார் இவ்ளோ இளம் வயதில் அசோசியேஷன் எலக்சன் ஜெயித்தது தலைவரா வந்தது நீங்க மட்டும் தான் என சந்திரகலா கூறுகிறார். அவர் தமிழுடன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது ஏதோ போஸ்டர் அடித்து ஒட்டுனாங்கலாமே என கேட்க ஆமா ஜெயிக்கிறதுக்காக இப்படி பண்ணுவாங்கன்னு எதிர்பார்க்கவில்லை என நமச்சி கூற அது கோதை செய்யல கார்த்தியும் அர்ஜுனன் தான் அந்த போஸ்டர அடிச்சு ஓட்டுனது எனக் கூற போஸ்டர் அடிச்சு ஒட்டியும் எப்படி ஜெயிச்சீங்க இதுதான் ஆச்சரியமா இருக்கு என பேசிக்கொண்டு இருக்கிறார்.

இதற்கெல்லாம் காரணம் மாமா தான் என சரஸ்வதி கூறுகிறார் பிறகு கோவிலில் கும்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது நடேசன் அங்கு வந்து அர்ஜுனும் கார்த்தியும் தான் போஸ்டர் அடித்து ஒட்டியது என நடேசன் கூறுகிறார் அதுமட்டுமில்லாமல் தமிழ் மீது தப்பு இல்லை என நிரூபித்தாக வேண்டும் என அனைவரையும் கோயில் வாசலுக்கு அழைக்கிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.

https://www.youtube.com/watch?v=toGlWO7tzDc

Leave a Comment

Exit mobile version