டேய் பொறுக்கி நீ எல்லாம் அடங்கவே மாட்டியா.! அர்ஜுனை திட்டி தீர்த்த சரஸ்வதி.! சென்டிமென்டால் தாக்கி மொத்த ஓட்டையும் வாங்கிய கோதை.! அப்போ தமிழின் நிலைமை..?

thamizhum-saraswathiyum-june-22
thamizhum-saraswathiyum-june-22

தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் அர்ஜுன் பார்த்த நார வேலையால் மீண்டும் மூக்கு உடைந்து நிற்கிறார் அதிலிருந்து மீண்டு வந்த தமிழ் கம்பெனிக்கு கிளம்ப போகும் நேரத்தில் அர்ஜுனை பார்த்த சரஸ்வதி டேய் பொறுக்கி நீ எல்லாம் அடங்கவே மாட்டியா டா என திட்டி தீர்க்கிறார் அது மட்டும் இல்லாமல் ஜகனை இன்னும் ரெண்டு தட்டு தட்டு இருந்தா உண்மையைக் கக்கி இருப்பான் அதுக்கு பின்னாடி நீ தான் இருக்கான்னு எனக்கு நல்லாவே தெரியும் ஏற்கனவே அசிங்கப்பட்டு நிற்கிற மறுபடியும் அசிங்கப்பட்டு அத்தையே உன்ன வெளியில தள்ளிவிட்டு இருப்பாங்க என கூறுகிறார்.

அந்த இடத்தில் உண்மையை சொல்ல சொன்னால் அத்தைக்கு தான் அது அசிங்கம் என்று தான் அமைதியாக இருந்தோம் என்பதையும் கூற ஆனாலும் அர்ஜுன் அடங்குவது போல் தெரியவில்லை. கோதை நடேசன் என அனைவரும் வீட்டுக்கு வருகிறார்கள் வீட்டில் வசு என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ள ஆவலுடன் இருக்கிறார் அப்பொழுது நடேசன் அவர்களிடம் கேட்க தமிழ் மீண்டும் அவர் மீது தப்பு இல்லை என்பதை நிரூபிக்கிறார் அது மட்டும் இல்லாமல் அந்த தப்பை செய்தது மாப்பிள்ளை என்பதை போல்  நடேசன் கூற அர்ஜுனின் முகம் வாடுகிறது.

ஏற்கனவே தமிழ் கம்பெனியில் தப்பு செய்தவர் தான் இந்த வேலையையும் செய்துள்ளார் என்பதை நடேசன் கூறுகிறார். இதுக்கு மேல நாம என்ன செய்ய முடியும் என பேசிக்கொண்டு இருக்கும் பொழுது கோதை சிறிய முதலாளிகளை உடனே அழைத்துப் பேச வேண்டும் அவர்களை வர சொல்லுங்கள் என்ன பேச போற என கேட்காத நான் பேசிக் கொள்கிறேன் என கோதை கூறி விடுகிறார்.

சிறிய முதலாளிகளிடம் கோதை பேசுகிறார் அப்பொழுது உங்களுக்கு கம்பெனி வைக்க இடம் கொடுத்தது யார் என்று தெரியுமா நான் தான் அப்பொழுது மிக குறைந்த விலைக்கு இடத்தை கொடுத்தேன் உங்கள் கம்பெனி நஷ்டத்தில் போகும் பொழுது நான் தான் ஆர்டர் கொடுத்தேன் என செய்ததை சொல்லிக் காட்டக் கூடாது என அனைத்தையும் சொல்லிக் காட்டிக் கொண்டிருக்கிறார். எனக்கு பதவி மேல் ஆசை கிடையாது ஆனால் உங்களைக் கேட்டு தான் நின்றேன் ஆனால் இப்பொழுது நீங்களே ஓட்டு போட முடியாது எனக் கூறினால் நான் வாபஸ் வாங்கிக் கொள்கிறேன் என்பதை போல் அழுது கொண்டே கூறுகிறார்.

உடனே சரி முதலாளிகள் அனைவரும் நீங்கள் தான் நிற்க வேண்டும். நீங்கள் தான் ஜெயிக்க வேண்டும் என கூறிவிட்டு நாங்கள் எங்களால் முடிந்து அளவிற்கு ஐந்து பேரிடம் ஆவது கூறி உங்களுக்கு ஓட்டு போட சொல்லுகிறோம் என கூறுகிறார்கள். இந்த விஷயத்தை நடேசன் சரஸ்வதி இடம் கூற சரஸ்வதி அதிர்ச்சி அடைகிறார், அதுமட்டுமில்லாமல் வீட்டிற்கு வந்த சரஸ்வதி தமிழிடம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது கோதை சிறிய முதலாளிகளை கூப்பிட்டு பேசியதை தமிழிடம் நமச்சி கூறுகிறார்.

இதனால் தமிழ் நாம என்ன செய்ய முடியும் என சரஸ்வதி கூறும் பொழுது எனக்கு நம்பிக்கை இருக்கிற நேர்மையாக இருந்திருக்கேன் கண்டிப்பா நான் ஜெயிப்பேன் என்பதில்  உறுதியாக இருக்கிறார். அடுத்த காட்சியில் அர்ஜுன் மற்றும் கார்த்தி இருவரும் தமிழ் என்ன கொலை பண்ண பார்த்தப்ப ஜெயிலில் இருந்த போட்டோவ கேட்டு அத போஸ்டர் அடித்து ஓட்டினால் யாருமே அவருக்கு ஓட்டு போட மாட்டாங்க மொத்த ஓட்டும் நமக்கு தான் என பேசிக் கொண்டிருக்கும் பொழுது நடேசன் கேட்டு விட்டு கார்த்தி இத மட்டும் செய்யாத இது கோதைக்கு தெரிஞ்சா எவ்வளவு வருத்தப்படுவா தேவை இல்லாம இத செய்யாத என கூற.

நான் அண்ணன் என்கிறத மறந்து ரொம்ப நாள் ஆயிடுச்சு கண்டிப்பா இதை நான் செய்ய தான் போறேன் அம்மா ஜெயிக்கணும்னு நினைச்சா நீங்களும் அம்மாட்ட இதை சொல்லாத எனக்கூறி விட்டு நோட்டீஸ் அடித்து ஒட்டி விடுகிறார் இதனைப் பார்த்த நமச்சி பெரிய கம்பெனி முதலாளி இடம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது இனிமே எப்படி தமிழுக்கு ஓட்டு போடுவது அவரு பதவிக்காக என்ன வேணாலும் பண்ணுவாரு என்பது போல் கூறி விடுகிறார்கள்.

சிறிய முதலாளிகள் பேசியதை கேட்ட நமச்சி உடனடியாக தமிழிடம் வந்து கூறுகிறார் அது மட்டும் இல்லாமல் ஜெயிப்பதற்காக இப்படி கீழ்த்தரமான வேலையை செய்வாங்க என்று நினைக்கவே இல்லை எனவும் நமச்சி கூற உடனே தமிழ் அப்படி என்ன பண்ணாங்க என கேட்க நமச்சி போனில் போட்டோவை காமிக்கிறார் இதை பார்த்த தமிழ் அதிர்ச்சடைகிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.