விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வந்தாலும் சமீப காலமாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் சீரியல்தான் தமிழும் சரஸ்வதியும் இந்த சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது அது மட்டும் இல்லாமல் தற்போது இந்த சீரியல் மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
அதற்கு காரணம் தன்னுடைய அம்மாவை எதிர்த்து தமிழ் எலக்ஷனில் நிற்கிறார் அசோசியேஷன் எலக்ஷனில் தமிழ் நிற்பதால் அர்ஜுன் பல நார வேலையை செய்து தமிழ் ஜெயிக்க விடாமல் செய்கிறார். அதற்கு காரணம் தமிழ் தோற்றுவிட்டால் இந்த தொழிலை விட்டு போய் விடுவேன் என சபதம் செய்துள்ளார். அதேபோல் தமிழ் ஜெயித்து விட்டால் அர்ஜுன் அந்த கம்பெனியை விட்டு விலக வேண்டும் என்பதுதான் இருவருக்கும் உள்ள போட்டி.
அப்படி இருக்கும் நிலையில் தமிழ் எக்காரணத்தை முன்னிட்டும் ஜெயிக்க கூடாது என்பதில் முன்பரமாக இருக்கிறார் அர்ஜுன் அதனால் அனைத்து குறுக்கு வழியிலும் தமிழை ஜெயிக்க விடாமல் பண்ண முயற்சி செய்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் தமிழ் பேசுவது போல் மிமிக்ரி ஆர்டிஸ்ட் வைத்து அனைத்து ஓனர்களிடமும் பேசி தமிழுக்கு கெட்ட பெயரை உண்டாக்கினார்.
ஆனால் அது நான் கிடையாது என தமிழ் நிரூபிக்கிறேன் என 5 மணி நேரம் டைம் கேட்க அதற்கு ஒப்புக்கொள்கிறார்கள் பிறகு தமிழ் கம்பெனியில் வேலை செய்த தொழிலாளி இதற்கு முன்பு அர்ஜுன் தமிழ் கம்பெனியில் திருட சொன்ன நபரைவைத்து தான் தமிழை தோற்க வைக்க இந்த காரியத்தை அர்ஜுன் சாதிக்கிறார்.
ஆனால் அர்ஜூன் செய்த சூழ்ச்சியிலிருந்து தமிழ் எந்த ஒரு தப்பையும் செய்யவில்லை என நிரூபித்து தப்பு செய்தது இதற்கு முன் தமிழ் கம்பெனியில் திருடியவர் என்பதை நிரூபித்து விடுகிறார் அதனால் அர்ஜுன் பயத்துடன் நிற்கிறார் ஆனால் அந்த திருடிய நம்பர் அர்ஜுனை காட்டிக் கொடுக்கவில்லை அதற்கு காரணம் அர்ஜுன் பல ரூபாய் கொடுத்து அந்த நபரை விலைக்கு வாங்கிவிட்டார்.
அப்படி இருக்கும் நிலையில் தமிழ் மீது தப்பு இல்லை என அசோசியேஷன் நபர்கள் நம்புகிறார்கள் அதனால் தமிழுக்கு அதிக ஆதரவு கிடைக்கிறது இந்த நிலையில் தற்பொழுது புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது அந்த ப்ரோமோ வீடியோவில் எலக்சன் ரிசல்ட் பற்றி அனௌன்ஸ் பண்ணுகிறார்கள்.
அதில் முதலில் கோதை 85 வாக்குகள் வித்தியாசத்தில் பெற்றுள்ளார் எனவும் அடுத்ததாக தமிழரசன் என்பவர் 33 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார் எனவும் கூறுகிறார்கள். உடனே அர்ஜுன் மாப்பிள்ளை பட்டாசு வாங்கி விட்டேன் நாம ஜெயிசிட்டோமோ வெடிக்கலாமா என கேட்க அத்தை தான் ஜெயிக்கப் போறாங்க கண்டிப்பா நம்ம வெடிக்கலாம் என கூறுகிறார்.
அந்த பக்கம் சரஸ்வதி இப்ப அவங்க தான் லீடிங்ல இருக்காங்க என தமிழிடம் கூற அமைதியாக இரு பொறுத்து இருந்து பார்க்கலாம் என தமிழ் கூறுகிறார். பைனல் கவுண்டிங் முடிந்துவிட்டது என அசோசியேஷன் எலக்சன் ரிசல்ட் கூறுகிறார்கள் அப்பொழுது சரஸ்வதி நமச்சி மிகவும் சந்தோஷமாக இருக்கிறார்கள் இதை வைத்து பார்க்கும் பொழுது கண்டிப்பாக தமிழ் தான் ஜெயித்துள்ளார் என்பது திட்டவட்டமாக தெரிகிறது தற்பொழுது இந்த பிரமோ வீடியோ ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.