ராகினியை வச்சி உன் வேலையை காமிச்சிட்டியே மாப்பிள்ளை.! இது என்னோட டைம் என பக்காவாக ஸ்கெட்ச் போட்ட நடேசன்.!

Thamizhum Saraswathiyum july-31
Thamizhum Saraswathiyum july-31

Thamizhum saraswathiyum : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் நடேசன் தமிழையும் சரஸ்வதியையும் 60-வது கல்யாணத்திற்கு கூப்பிட்டு விட்டோம் ஆனால் இப்பொழுது கோதை வேண்டாம் என கூறிவிட்டார் எப்படி அவர்களிடம் சொல்வது என யோசித்துக் கொண்டே செல்கிறார். அந்த சமயத்தில் சரஸ்வதி நடேசனை மாமா மாமா என கூப்பிடுகிறார் ஆனால் நடேசன் காதில் வாங்காதது போல் வேகமாக போகிறார். சரஸ்வதி நடேசன் பிடித்து ஏன் மாமா இப்படி போறீங்க என கேட்க அதெல்லாம் ஒன்னும் இல்ல கூறிக் கொண்டிருக்க வீடு அங்க இருக்கு மாமா என  சரஸ்வதி கூறுகிறார்.

இதுக்கு மேல என்னால சமாளிக்க முடியாது சரஸ்வதி எனக் கூறிய நடேசன் வீட்டில் ராகினி செய்த பிரச்சனையை கூறுகிறார் பரவால்ல மாமா உங்க 60 தாவது கல்யாணத்திற்கு நாங்க வரக்கூடாதுன்னு இருக்கு போல என கூறிய சரஸ்வதி, ராகினி இந்த மாதிரி நேரத்துல டென்ஷன் ஆக கூடாது அதனால விடுங்க மாமா என கூறிவிடுகிறார் சரஸ்வதி. அடுத்த காட்சியில் வசு சரஸ்வதிக்கு போன் செய்து பேசிக் கொண்டிருக்கிறார் அப்பொழுது நடந்ததை வசு கூற மாமா சொன்னாரு என சரஸ்வதி கூறுகிறார் மாமா பீல் பண்ண வேணாம்னு சொல்லு என சரஸ்வதி கூறுகிறார்.

அடுத்த காட்சியில் வசுவும் நடேசன் தமிழும் சரஸ்வதியும் பங்க்சனுக்கு வந்தே ஆக வேண்டும் என பிளான் செய்கிறார்கள் உடனே கீழே சென்று இந்த அறுபதாவது கல்யாணம் வீட்டில் வேண்டாம் என நடேசன் கூற அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள் உடனே வாய்க்கு வந்தபடி அனைவரும் பேச ஒரு நிமிஷம் அமைதியா இருங்க என கத்துகிறார் வசு. மாமா என்ன சொல்ல வரேன்னு கேளுங்க என வசு கூறுகிறார் உடனே நடேசன் கோவிலில் அறுபதாவது கல்யாணம் பண்ணா நல்லது என தனக்கு தெரிந்த ஜோசியக்காரர் கூறியதாக நடேசன் கூற நாளைக்கு பங்க்ஷன் வச்சிக்கிட்டு இன்னைக்கு எப்படி மாற்ற முடியும் என பேசுகிறார்கள் அந்த சமயத்தில் கோதையிடம் நடேசன் கேட்க உடனே கோதையும் கோவிலுக்கு பங்ஷனை மாற்றி விடலாம் என கூறிவிடுகிறார் உடனே வசுவும் நடேசன் சந்தோசம் படுகிறார்கள்.

அடுத்த காட்சியில் தமிழ் ஆபீஸில் இருக்க அப்பொழுது உமாபதி சார் வந்து புதிய யூனிட் வாங்குவதை பற்றி பேசுகிறார் அதற்கு தமிழும் சரஸ்வதி இடம் கேட்டு சொல்கிறேன் என கூறி விடுகிறார். அடுத்த காட்சியில் அறுபதாவது கல்யாணத்திற்கு நீங்கள் போய் தண்ணீர் ஊற்றினால் தான் உங்களுக்கு நல்லது என்பது போல் கூற அனைவரும் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள் அதேபோல் தமிழ் புதிய கம்பெனி வாங்குவதை பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறார் இத்துடன் இந்த எபிசோட் முடிகிறது.