Thamizhum Saraswathiyum : தமிழும் சரஸ்வதியும் கடந்த எபிசோடில் கோதை மற்றும் நடேசன் இருவருக்கும் 60 வது திருமணம் செய்து வைக்க பிளான் செய்கிறார்கள் அதற்கு தமிழையும் கூப்பிடலாம் என நடேசன் கோதையிடம் சொல்லுகிறார் ஆனால் கோதை வீட்டில் இருப்பவர்களை எப்படி சமாளிப்பது அதனால் வேண்டாம் எனக் கூற அதற்கு நான் பார்த்துக்கொள்கிறேன் என கீழே வந்து தமிழையும் 60-வது கல்யாணத்திற்கு கூப்பிட போகிறோம் என கூறுகிறார் நடேசன்.
அதற்கு ராகினி அதெல்லாம் முடியாது எங்களை வேணும்னே அவமானப்படுத்துறீங்களா. அவங்க வந்தாங்கன்னா நாங்க இங்கிருந்து கிளம்பிடுவோம் வீட்டைவிட்டு போறோம் என அடம் பிடிக்கிறார் அதுமட்டுமில்லாமல் அர்ஜுன் குடும்பமும் என் பையன குத்தினவர்களை கூப்பிட்டு நீங்கள் மரியாதை பண்ணுவீங்க நாங்க இங்க இருக்கணுமா என பேசுகிறார்கள்.
ஆனால் அர்ஜுன் மனசில் இங்கிருந்து போய்ட்டா சொத்து ஆட்டையை போட முடியாது என தோணுகிறது அதனால் கொஞ்சம் அமைதியாக இரு ராகினி எவ்வளவோ சொல்லி பார்க்கிறார் ஆனால் ராகினி அர்ஜுன் பேச்சை கேட்காமல் அடம்பிடித்து கத்துகிறார் ஒரு காலகட்டத்தில் மயங்கி விழுகிறார்.
பிறகு கண் முழித்த ராகினி அனைவரையும் பார்க்கிறார் அந்த சமயத்தில் அர்ஜுனனின் அம்மா ராகினியும் குழந்தையை பற்றியும் உங்களுக்கு கவலையே கிடையாது, அதனாலதான் இப்படி எல்லாம் செய்றீங்க என ஏற்றி விடுகிறார். உடனே கோதை இப்போதைக்கு ராகினி குழந்தையை ரொம்ப முக்கியம் அதனால அவங்கள கூப்பிட வேண்டாம் என தன்னுடைய கணவர் நடேசன் இடம் கூறுகிறார்.
இந்த நிலையில் தற்பொழுது ஒரு புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது அந்த ப்ரோமோ வீடியோவில் அறுபதாவது கல்யாணம் கோவிலில் நடைபெறுகிறது அந்த 60 வது கல்யாணத்திற்கு தமிழ் மற்றும் சரஸ்வதி நமச்சி மூவரும் வருகிறார்கள் அப்பொழுது ராகினி உங்களை யாரு கூப்டது எதுக்கு இங்க வந்தீங்க என்ன கத்துகிறார் ஆனால் நடேசன் அவங்க கோவிலுக்கு வந்திருக்காங்க கோவிலுக்கு வரவங்கள நாம என்ன சொல்ல முடியும் என பேசுகிறார்.
தலைக்கு தண்ணீர் ஊற்றும் பொழுது வசுவின் அம்மா அவங்க ஏன் தனியாக நிக்கிறாங்க இங்க கூப்பிடுங்க எனக் கூறுகிறார் அதனால் இருவரும் அருகில் வர உடனே அவர்களையும் தண்ணீர் ஊற்ற சொல்லுங்கள் என கூறுகிறார்கள் அப்பொழுது அர்ஜுன் குடும்பம் கார்த்தி என அனைவரும் வேண்டாம் எனக் கூற நடேசன் கடைசிவரையும் இவங்க தண்ணி ஊத்தல என்ற குற்ற உணர்ச்சியோட நாங்க இருக்கணுமா என பேசி ஒரு வழியாக தண்ணீர் ஊற்ற சம்மதம் வாங்கி தண்ணீர் ஊற்ற கூறுகிறார் இத்துடன் இந்த ப்ரோமோ வீடியோ முடிகிறது.