Thamizhum Saraswathiyum july-27 : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் அர்ஜுன் அறுபதாவது கல்யாணம் நடேசனுக்கு பண்ணி வைத்தால் நம்ம மீது இருக்கும் கோபம் குறையும் என எதிர்பார்க்கிறார், அதனால் 60வது கல்யாணம் பண்ணி வைக்க கோதை மற்றும் நடேசன் இடம் ராகினி பேச அதெல்லாம் வேணாம் நம்ம குடும்பம் இருக்கிற சூழ்நிலை சரியில்லை எனக் கூறி விடுகிறார்கள். அடுத்த காட்சியில் கார்த்தி மற்றும் வசு அவர்களை கூப்பிட்டு 60தாவது கல்யாணம் நடந்த அனைத்தையும் கூறுகிறார்கள்.
உடனே வசு அறுபதாவது கல்யாணத்திற்கு சரஸ்வதி மற்றும் தமிழ் மாமாவை கூப்பிடலாம் என எண்ணி அறுபதாவது கல்யாணம் பண்ணி வைக்க ஒப்புக்கொண்டு பேசப் போகிறார்கள் அப்பொழுது கோதையிடம் ராகினி மற்றும் வசு இருவரும் பேசுகிறார்கள் ஒரு வழியாக கோதையும் ஏதாவது பண்ணுங்க எனக்கு ஒரு விடுகிறார் அதேபோல் நடேசன் அறுபதாவது கல்யாணம் பண்ணி விடலாம் எனக் கூற இந்த அறுபதாவது கல்யாணத்திற்கு தமிழ் மற்றும் சரஸ்வதியை கூப்பிடலாம் என வசு கூறுகிறார்கள்.
மற்றொரு பக்கம் நடேசன் போலீசிடம் அர்ஜுன் பணம் கொடுத்த நபரை விசாரிக்க கூறியுள்ளார் ஆனால் அர்ஜுன் பணம் கொடுத்தவர் ஒரு ஃபிராடு, கொலைகாரன், திருட்டு பையன் என தெரிகிறது உடனே போலீஸ் மற்றும் நடேசன் இருவரும் அந்த வீட்டிற்கு போகிறார்கள் ஆனால் அந்த ரவுடி அங்கிருந்து எஸ் ஆகி விடுகிறார் இதனால் கைக்கு கிடைத்தது வாய்க்கு எட்டவில்லை என நடேசன் நினைக்கிறார்.
அதுமட்டுமில்லாமல் இது எல்லாமே அர்ஜுனுடைய வேலையாக தான் இருக்கும் என நடேசன் கண்டுபிடித்து விடுகிறார் இதனை கோதை இடம் கூறுகிறார் உடனே அர்ஜனை விசாரிக்கலாம் எனக் கூற வேணாம் ஆதாரம் வேண்டும் அவர் வழியில் போகவிட்டு பிடித்து விடலாம் என நடேசன் கூறுகிறார். சரஸ்வதி மெக்கானிக் கடையில் ஒரு லேடி எக்ஸெல் சரி பண்ண வருகிறார் எக்ஸ் எல் யை சரி செய்துவிட்டு காசு வாங்காமல் இருக்கும் சரஸ்வதியை இந்த காலத்தில் இப்படி ஒரு நல்ல மனச என வாழ்த்தி விட்டு செல்கிறார் அது மட்டும் இல்லாமல் உனக்கு ஒரே பிரசவத்தில் இரண்டு குழந்தை பிறக்கும் எனவும் கூறுகிறார் இதனால் சரஸ்வதி கண்கலங்குகிறார்.
சரஸ்வதி வீட்டிற்கு வந்து தமிழிடம் மெக்கானிக் செட்டில் நடந்ததை கூறுகிறார் இது போல் தான் கோவிலில் அந்த பெரியவர் கூறினார் அடுத்த நாளே நான் அசிங்கப்பட்டு நின்றேன், அதேபோல் இப்போ அந்த லேடி என்னை வாழ்த்தியுள்ளார் என்ன நடக்கும் என்று பயமாக இருக்கிறது ஹாஸ்பிடல் டெஸ்ட் கொடுத்து இருக்கோம் எனக்கு ஏதாவது என்றால் என்னை ஒதுக்கி வைத்து விடமாட்டீர்களே என சரஸ்வதி கேட்க அதற்கு தமிழ் எனக்கு ஏதாவது குறை இருந்தால் என்ன பண்ண முடியும் என தமிழ் கேட்க உடனே நமச்சி இருவருக்கும் ஒரு வருடத்தில் குழந்தை பிறக்க தான் போகிறது அதனை நான் தூக்கி கொஞ்ச தான் போகிறேன் என சந்தோஷமாக கூறுகிறார்.
இருவரும் ஹாஸ்பிடலுக்கு சென்று டெஸ்ட்டிற்காக வெயிட் பண்ணுகிறார்கள் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.