பொய் கணக்கு எழுதி கோதையிடம் வசமாக சிக்கிக்கொண்ட அர்ஜுன்.! மாப்ள நாலா பக்கமும் இப்படி மாட்டிக்கிட்டியே… தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோட்

thamizhum saraswathiyum july 10 episode
thamizhum saraswathiyum july 10 episode

thamizhum saraswathiyum july 10 episode : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் வசு சரஸ்வதிக்கு கால் செய்து பேசிக் கொண்டிருக்கும் பொழுது கார்த்தி வந்தது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது என சரஸ்வதி கூறிக் கொண்டிருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இதற்கெல்லாம் காரணம் யார் என சரஸ்வதி கேட்க அதற்கு வசு வேற யாரு நம்ம அத்தை தான் என கூறிக் கொண்டிருக்கிறார். உடனே சரஸ்வதி கூடிய விரைவில் நாம எல்லாரும் ஒரே வீட்ல இருப்போம் என சந்தோசமாக இருக்கிறது என சரஸ்வதி கூறிக் கொண்டிருக்கிறார்.

வசுவும் கண்டிப்பா ஒண்ணா இருப்போம் என பேசிக் கொண்டிருக்கும் பொழுது கார்த்தி ரொம்ப பிடிவாதம் பிடிப்பாரு எப்படி இங்க வந்தாரு என பேசிக்கொண்டு இருக்கும் பொழுது சரஸ்வதி நாங்க சாப்பிட சொன்னோம் முதல்ல வேணாம்னு தான் சொன்னாரு அப்புறம் சாப்பிட்டார் என கூறுகிறார். உடனே வசு அடப்பாவி இதை சொல்லவே இல்ல என சரஸ்வதி இடம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது ஓகே சரஸ்வதி நீ போன கட் பண்ணு  எனக்கு  கொஞ்சம் வேலை இருக்கு என கூறுகிறார்.

கீழே சென்றார் வசு அதற்குள் அர்ஜுன் குடும்பம் வாங்க கார்த்தி நீங்களும் சாப்பிடலாம் என கூப்பிடுகிறார்கள். ஆனால் கார்த்தி இல்ல இப்ப எனக்கு பசிக்கல எனக் கூற அந்த சமயத்தில் கோதை நீ காலையிலேயே சாப்பிடாம போன இப்பவாவது சாப்பிடு என கூறுகிறார். ஆனாலும் கார்த்தி இல்ல எனக்கு இப்ப வேணாம் கொஞ்ச நேரம் கழிச்சு சாப்பிடறேன் என கூறுகிறார். அந்த சமயத்தில் வசு  கார்த்தி தான் ஃபுல்லா சாப்பிட்டான் அப்புறம் எப்படி சாப்பிட முடியும் என கூறுகிறார்.

என்ன சொல்ற கார்த்தி வெளில ஏதாவது சாப்பிட்டியா எனக் கோதை கேட்கிறார். அதெல்லாம் இல்லமா அவ சும்மா சொல்ற என பேசிக்கொண்டு இருக்கும் பொழுது கார்த்தி வெளில எல்லாம் சாப்பிடல ரொம்ப நெருங்கிய சொந்தத்தில் தான் போய் சாப்பிட்டு இருக்கான் என கூறுகிறார். இப்படியே பேசிக் கொண்டிருக்கும் பொழுது சரஸ்வதி வீட்டில் தான் சாப்பிட்டான் என வசு கூறி விடுகிறார்.

என்ன கார்த்தி என கேட்கும் பொழுது இல்ல வீட்டுக்கு விருந்தளி வந்தால் சாப்பிடாமல் அனுப்பக்கூடாது என நீங்கதான் சொன்னதாக சொல்லி என சாப்பிட வச்சாங்க என கூறுகிறார் அதற்கு கோதை பரவால்ல இதையாவது ஃபாலோ பண்றாங்களே ரொம்ப சந்தோஷம் என்ன பேசுகிறார். ஆனாலும் ராகினி நீ எப்படி அங்கே போய் சாப்பிடலாம் என சண்டை போட்டுக் கொண்டிருக்க யாரும் ராகினியை கண்டுகொள்ளாமல் கிளம்புகிறார்கள்.

அர்ஜுன் சில பைலில் சைன் பண்ணி விட்டிங்கனா அனுப்பி விட்டு விடலாம் என கூறுகிறார் ஆனால் கோதை ஒவ்வொன்றாக செக் பண்ணுகிறார் 60,000 செக் இருந்ததை பார்த்து இது என்ன கணக்கு என கேட்க மிஷின் ரிப்பேர் என சொல்லி சமாளிக்கிறார் ஆனால் கோதைக்கு சிறிது சந்தேகம் வந்துவிட்டது பிறகு இன்னும் அனைத்தையும் செக் பண்ணுகிறார் அதற்கு ராகினி என்னமா என்னோட வீட்டுக்காரர் ரொம்ப சந்தேகப்படுறீங்க என கேள்வி கேட்கிறார்.

அவர் ஒரு கம்பெனி டைரக்டர் அவர கேள்வி கேட்பது ஒன்னும் அவ்வளவு பெரிய தப்பு கிடையாதே என்பது போல் கோதை கூறி விடுகிறார் இவர்கள் நோண்டி நோண்டி பார்ப்பதால் அர்ஜுனனுக்கு சிறிதாக சந்தேகம் வருகிறது பிறகு உள்ளே சென்று விடுகிறார் ராகினிடம் கால் வலிக்கிறதா எனக்கூறி ஒத்தடம் கொடுத்து கொண்டு இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் அந்த சமயத்தில் தமிழையும் போட்டுக் கொடுக்கிறார். ராகினியை வைத்து அர்ஜுன் காய் நகர்த்த பார்க்கிறார் இத்துடன் இன்று எபிசோட் முடிகிறது.