விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் இன்றைய எபிசோடில் அர்ஜுன் வேலை செய்யும் தொழிலாளியிடம் தமிழிடம் வேலை செய்பவரை சந்தித்தோம் ஆனால் வழிக்கு வரவில்லை என கூறிக் கொண்டிருக்க உடனே அந்த தொழிலாளி வீட்ல அவ்ளோ கஷ்டம் இருக்கு அப்பயும் வழிக்கு வரலையா என கூறிக் கொண்டிருக்கிறார்.
வீட்டில் இருக்கும் பிரச்சனைகளை சரி செய்தால்தான் கட்டின பொண்டாட்டியை மதிப்பா என கூற உடனே அர்ஜுனனுக்கு ஒரு யோசனை வருகிறது. இதை ஃபர்ஸ்ட் சரி செஞ்சுரலாம் என அர்ஜுன் தமிழை சரிக்க திட்டத்தை தீட்டுகிறார். உடனே இந்த விஷயத்தை கார்த்தியிடம் அர்ஜுன் சொல்லுகிறார் நீ ஏதாவது பண்ணு நாம முதல்ல புரொடக்ஷன்ல கான்சன்ட்ரேஷன் பண்ணுவோம் எனக் கூற தமிழ் டெலிவரி செஞ்சுட்டா அதுக்கப்புறம் நாம என்ன பண்றது என கார்த்திகை அர்ஜுன் ஏத்தி விடுகிறார்.
அதுமட்டுமில்லாமல் இந்த தொழிலாளிங்க தமிழ தான் நம்புறாங்க அதனால இந்த பிசினஸ்ல கொஞ்சம் குறுக்கு வழியும் போய் தான் ஆகணும் என கார்த்தியை பிரைன் வாஷ் பண்ணுகிறார். வேறு வழி இல்லாமல் கார்த்தியும் ஏதாவது பண்ணு என கூறிவிட்டு சென்று விடுகிறார். அடுத்த காட்சியில் சரஸ்வதி சாப்பாடு செய்யலாமா வேண்டாமா என யோசித்துக் கொண்டே உட்கார்ந்து கொண்டிருக்கிறார். அந்த சமயத்தில் தமிழ் வருகிறார் சரஸ்வதி தமிழிடம் மதியம் நீங்க சாப்டீங்களா இல்லையா நீங்க சாப்பிட வேண்டியதானே என கேட்டுக் கொண்டிருக்கிறார்.
ஒரு பத்து நிமிஷம் வெயிட் பண்ணுங்க நான் சமைச்சிடுறேன் என கூற தமிழ் அதெல்லாம் வேண்டாம் என கத்துகிறார் எனக்கு வேற பசிக்குதுங்க எனக் கூற உடனே தமிழ் பார்சலை எடுத்து நீட்டுகிறார் பிறகு இருவரும் உட்கார்ந்து ரொமான்ஸ் பண்ணி கொண்டு சாப்பிடுகிறார்கள். சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது தமிழ் கம்பெனிக்கு போகணும் நாளைக்கு டெலிவரி கொடுக்கணும் அதனால இருக்கிற எல்லா வேலையும் முடிக்கணும் என கிளம்புகிறார்.
எல்லா வேலையும் முடித்துவிட்டு அனைத்து மெட்டீரியலையும் ஒரே இடத்தில் சேர்த்து விட்டு வண்டி வந்ததும் அனைத்து மெட்டீரியலையும் வண்டியில் ஏத்துகிறார்கள் அப்பொழுது நமச்சி பாக்ஸ்களை எண்ணிக் கொண்டிருக்கிறார் அப்பொழுது நமச்சி ஐந்து பாக்ஸ் குறைகிறது என கூற இதனால் அதிர்ச்சி அடைந்த நமச்சி தமிழிடம் 5 பாக்ஸ் குறைவாக இருக்கிறது எனக் கூறுகிறார் தமிழும் அதிர்ச்சி அடைகிறார் பிறகு நைட் நீ எண்ணி பாத்தியா எல்லாத்தையும் கரெக்டா இருந்ததா என கேட்க எல்லாமே கரெக்டா இருந்தது என கூற யாரோ வேணும்னே செஞ்சிருக்காங்க என பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.
அந்த சமயத்தில் டெலிவரி கேட்டிருந்த ஓனர் கால் செய்து எடுத்துக் கொண்டு வாருங்கள் என கூற வேறு வழியே இல்லாமல் தமிழும் செல்கிறார் அங்கு பாக்ஸ எண்ணி பார்த்துவிட்டு ஐந்து பாக்ஸ் குறைவதை கண்டுபிடித்து என்னாச்சு என கேட்க இன்னும் செய்யலையா என கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் தமிழ் ஏதேதோ காரணம் சொல்லிக் கொண்டிருக்க உங்களுக்கு காரணம் எப்படி கிடைக்கிறது. இதையெல்லாம் நான் டெலிவரி செய்ய வேண்டிய மேல் இடத்தில் சொல்ல முடியாது அதனால் நீங்க எல்லாத்தையும் எடுத்துகிட்டு போங்க ரா மெட்டிரியல் ரிட்டன் பண்ணுங்க எனக் கூற தமிழ் ஆடி போய் நிற்கிறார்.
தமிழால் டெலிவரி கொடுக்க முடியாததை நினைத்து அர்ஜுன் சந்தோஷமாக இருக்கிறார் இதனை கார்த்தியிடம் கூறுகிறார் இப்படி செய்வது தப்பு இல்லையா என்ன அர்ஜுனிடம் கேட்க நாம முன்னேற வேண்டும் என்றால் சில குறுக்கு வழியை செஞ்சுதான் ஆகணும் என கூறுகிறார். தமிழ் நம்ம கம்பெனியில் இருக்கிற ஆள எடுத்துக்கலையா என மீண்டும் கார்த்தியை அர்ஜுன் ஏத்தி விடுகிறார் இத்துடன் இன்றைய எபிசோட் முடிகிறது.