தமிழும் சரஸ்வதியும் இன்றய எபிசோடில் கம்பெனியில் யார் யாருக்கு என்ன பதவி என்று தமிழ் கூற இருக்கிறார் இந்த நிலையில் என்ன பதவி என்று கோதை கேட்க இன்னும் கொஞ்ச நேரத்துல நானே அநௌன்ஸ் பண்ணிடுவேன் அவசரப்படாதீங்க என பேசுகிறார் ஆடிட்டர் வந்ததும் நானே கூறுகிறேன் என கூறுகிறார். ஆடிட்டர் வந்தவுடன் எல்லாத்தையும் அன்னவுன்ஸ் பண்ணிடலாமா என பேசுகிறார் அதற்கு கண்டிப்பாக பண்ணி விடலாம் என கூறுகிறார்.
இந்த கம்பெனி மேனேஜர் யார் என்றால் என சர்ப்ரைஸ் வைத்து நமச்சி பெயரை கூறுகிறார் எனக்கு எதுக்கு இப்போ இந்த பதவி நான் ஒர்க்கராவே இருந்துட்டு போறேன் என நமச்சி கூர இந்த கம்பெனி ஜீரோவில் இருந்து இவ்வளவு தூரம் வந்ததற்கு என் கூடவே இருந்த நமச்சி தான் காரணம் என பேசுகிறார். அடுத்ததாக ஜிஎம் போஸ்ட் என்னுடைய உடலும் உயிரும் சரி பாதியாக இருக்கும் சரஸ்வதிக்கு தான் ஜிஎம் போஸ்ட் என கூறுகிறார். அதேபோல் இந்த கம்பெனிக்கு எம்டி என்ற பொறுப்பு நானே எடுத்துக் கொள்கிறேன் எனக் கூறுகிறார் அனைவரும் கை கொடுக்கிறார்கள்.
காதலிச்சுட்டு எல்லாத்தையும் முடிச்சிட்டு என்னையா ஏமாத்த பாக்குற.. காதலனுக்கு கட்டம் கட்டிய நடிகை..
இதையெல்லாம் சொல்லி முடித்தவுடன் கார்த்தி கோதை வசு என அனைவரும் வருத்தப்படுகிறார்கள் கார்த்தி தனக்கான பதவி இல்லையே என வருத்தப்பட்டு கொண்டிருக்கும் நேரத்தில் ஒரு அடி எடுத்து வைப்பதற்கு முன்பு தமிழ் இன்னொரு முக்கிய பொறுப்பு ஒன்று இருக்கிறது எனக்கூறி என்னதான் நான் எம்டியாக இருந்தாலும் படிப்பு விஷயத்தில் எனக்கு கம்மிதான் அதனால் என்னை விட திறமையான ஆள் கார்த்தி தான் திறமையை வெளிப்படுத்தும் விதமாக ஜாயினிங் மேனேஜிங் டைரக்டர் பதவியை கொடுக்கிறேன் என கூறுகிறார்.
உடனே கார்த்தி ஓடி வந்து தமிழை கட்டிப்பிடித்து தன்னுடைய சந்தோஷத்தை வெளிப்படுத்துகிறார் கார்த்தி மற்றும் தமிழ் இருவரும் ஒரு இடத்திற்கு போயிட்டு வருகிறோம் என கூறிவிட்டு கிளம்புகிறார்கள். அதற்கு முன்பு அர்ஜுன் மற்றும் அர்ஜுனனின் மாமா இருவரும் கார்த்தியை வைத்து அந்த குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என பேசிக் கொண்டிருக்கிறார்கள் அந்த சமயத்தில் கார்த்தி வருகிறார். எனக்கு தெரியும் கார்த்தி நீ வருவாய் ஏனென்றால் உனக்கு சரியான பதவி அங்கு கிடைத்து இருக்காது.
24 மணி நேரமும் ஷூட்டிங் ஸ்பாட்டில் இது இருந்தாக வேண்டும்..! சர்ச்சையை கிளப்பிய ராஜமவுலி…
என பேச எனக்கு இப்பதான் எல்லாமே புரியுது ஆனா என்னுடைய நல்லதலையும் கெட்டதுலையும் எப்பொழுதும் என் கூடவே இருக்கிற ஆளு ஒரு ஆளு இருக்காங்க அது யாருன்னு தெரியுமா என பேச யார் என்று கேட்க இதோ எங்க அண்ணன் தான் என கூறுகிறார் உடனே பில்டப் போடு தமிழ் அங்கு வருகிறார் என்னையும் தம்பியும் பிரிக்க பாக்குறியா அது இந்த ஜென்மத்துல இல்ல எத்தனை ஜென்மம் எடுத்தாலும் முடியாது கோதை பசங்க நாங்க நேர்மையும் நீதியையும் எப்பொழுதும் கடைபிடிப்போம்.
ராகினியை எங்க கிட்ட இருந்து பிரிச்சிட்ட ஆனா எங்க ரெண்டு பேரையும் பிரிக்க முடியாது உன் கணக்கு தப்பு கணக்கு போயிடுச்சா என தமிழ் அர்ஜுனனை பார்த்து சவுக்கடி பதில் கொடுக்கிறார். அர்ஜுன் பேந்த பேந்த முழித்துக் கொண்டு நிற்கிறார். பிறகு தமிழ் கார்த்தி என அனைவரும் வீட்டுக்கு வருகிறார்கள் அப்பொழுது வசு ஸ்வீட் கொடுத்து கொண்டாடுகிறார்கள். உடனே தமிழைப் பார்த்து நீ இப்படி பண்ணுவேன்னு கொஞ்சம் கூட நினைக்கல அவ்ளோ சந்தோஷமா இருக்கு என பேசிக்கொண்டு இருக்கிறார்கள் கார்த்தியும் நான் உங்களை சரியா புரிஞ்சுக்கவே இல்ல அண்ணா என தன்னுடைய வருத்தத்தையும் தெரிவிக்கிறார்.
அதேபோல் வசுவுக்கு ஏதாவது ஒரு பதவி கொடுக்கலாமே என பேச வசு நான் வீட்டிலேயே இருக்கிறேன் எனக்கு வீட்டை பார்த்துக்கொள்வது தான் ரொம்ப முக்கியம் நீ ஆபீஸ பார்த்துக்கோ சரஸ்வதி நான் வீட்டை பார்த்துக் கொள்கிறேன் என கூறுகிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.