thamizhum saraswathiyum february 27 : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் கார்த்தியிடம் வாசு பேசிக் கொண்டிருக்கிறார் உங்க அண்ணன் தான நீ அவர் பேசின எதையும் பெருசா எடுத்துக்காத உன்னோட நல்லதுக்கு தானே பேசினார் என வசு கார்த்தியை சமாதானம் பேசுவது போல் பேசினார் அனால் கார்த்தி சமாதனம் ஆவது போல் தெரியவில்லை என்னதான் இருந்தாலும் அந்த கம்பெனியில் நான் ஒரு ஸ்டாப் தான அதனால இவர் என்ன என்ன வேணாலும் பேசுவார் அந்த கம்பெனிக்கு போவது எனக்கு இப்ப புடிக்கல என்பது போல் பேசி விடுகிறார்.
அடுத்த நாள் காலையில் சரஸ்வதி எக்ஸாமுக்கு கிளம்பி கொண்டிருக்கிறார் அப்பொழுது வசு எதற்காக பதட்டமாக இருக்கிறாய் என கேட்க எக்ஸாம் என்றாலே பயமாய் இருக்கிறது என கூறுகிறார் சரஸ்வதி அதற்கு நீங்கள் தான் நேற்று எக்ஸாம் நல்லா தானே எழுதினீங்க அப்புறம் என்ன என பேசுகிறார். அது மட்டும் இல்லாமல் சரஸ்வதி மொட்டை மாடியில் நின்று கொண்டிருக்கும் பொழுது தமிழ் ஆசை ஆசையாக பேச வருகிறார் அப்பொழுது சரஸ்வதி நீங்க எதுக்கு கார்த்திக் கிட்ட அப்படி நடந்துக்கிறீங்க எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கல இது மாதிரி நடந்து கொள்வது அவரை ஏன் ரொம்ப டென்ஷன் ஆக்குறீங்க என பேசுகிறார்.
அடுத்த காட்சியில் உன்கிட்ட ஆச ஆசையா பேச வந்தா என்ன மூட் அவுட் பண்ணிட்ட என கூற உடனே சரஸ்வதி எனக்கு படிக்கிற வேலை இருக்கு என சொல்லிவிட்டு கிளம்பி விடுகிறார். இந்த நிலையில் தமிழ் மற்றும் கார்த்தியை இருவரும் கம்பெனிக்கு போகிறார்கள் அப்பொழுது அர்ஜுன் வழி மறித்து எங்களுக்கு ஆர்டர் கொடுத்ததற்கு ரொம்ப தேங்க்ஸ் என கூற ரொம்ப நல்ல அருமையான நடிக்கிற இதெல்லாம் வேற யார்கிட்டயாவது வைத்துக்கொள் என தமிழ் கூறுகிறார்.
அதுமட்டுமில்லாமல் உனக்காக எல்லாம் அந்த ஆர்டரை கொடுக்கல எங்க அம்மா அப்பா உருவாக்கிய கம்பெனி அவங்களுக்கு தொழிலாளிக்கே கஷ்டப்படக்கூடாது அதற்காக தான் கொடுத்தேன் கூடிய சீக்கிரம் அந்த கம்பெனியை நாங்க வாங்குவோம் நீயே உன் கையால அந்த கம்பெனிய எங்கிட்ட கொடுக்க தான் போற என பேசுகிறார். தமிழ் மற்றும் கார்த்திக் இருவரும் சென்ற பிறகு பரமு அர்ஜுன் இருவரும் பேசிக் கொள்கிறார்கள் கார்த்தி அமைதியாக இருக்கிறத பாத்தா அவங்களுக்குள்ள ஏதோ சண்டை இருக்கு அத சீக்கிரம் விசாரிக்கணும் என பேசுகிறார்கள்.
சத்தமே இல்லாமல் சமந்தாவுக்கு வாழ்த்து தெரிவித்த நயன்தாரா..! இதுல உள்குத்து இருக்குமோ..
உடனே தமிழ் கார்த்தியை திட்டியதை செல்வம் அர்ஜுன் மற்றும் பரமவிடம் கூறுகிறார் இருவருக்கும் மிகப்பெரிய மனஸ்தாபம் வந்து விட்டதாகவும் கூறுகிறார்கள் இந்த நிலையில் இதனை நமக்கு சாதமாக்க வேண்டும் கார்த்தியை நம்ம பக்கம் இழுக்க வேண்டும் என பேசுகிறார். இந்த நிலையில் அர்ஜுன் மற்றும் பரமு, இருவரும் ஐ.டி பைல் பண்ண போகிறார்கள் அப்பொழுது ஆடிட்டர் தமிழ் கம்பெனி நன்றாக வளர்ந்து விட்டது அவங்க கம்பெனியில் இன்னும் சில பொசிஷன் போடவில்லை அதனை ரிமைன்ட் பண்ண வேண்டும் என கூறுகிறார்.
உடனே தமிழ் கம்பெனியில் இருக்கும் பொழுது ஆடிட்டர் போன் பண்ணி உங்க கம்பெனியில் டைரக்டர் மற்றும் சில பொசிஷன் இன்னும் போடவில்லை அதனை விரைவாக போட வேண்டும் இன்னும் ஒரு வாரத்தில் அதன் ரிபோர்ட் கொடுக்க வேண்டும் என கூறுகிறார் இதனால் தமிழ் அதிர்ச்சடைகிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.