Thamizhum saraswathiyum serial September 28 : இன்றைய எபிசோடில் இரவு தமிழ் வீட்டில் எல்லோரும் தூங்கிக் கொண்டிருக்கும் போது செம்ம மழை வருகிறது. அதனால் தமிழ், கார்த்தி, நமச்சி எல்லோரும் மழையால் வீட்டின் உள் வருகின்றனர் உள்ளே படுக்க எல்லோருக்கும் இடமில்லாமல் மழைவிடும் வரை பாட்டு பாடி ஜாலியாக பேசிக் கொண்டிருக்கின்றனர்.
அடுத்து மகிழனுக்கு உடம்பு சரியில்லாததால் கார்த்தியும், வசுந்தராவும் ஹாஸ்பிடலுக்கு போயிட்டு வீட்டுக்கு வருவதும் எல்லோரும் குழந்தைக்கு எப்படி இருக்கு, டாக்டர் என்ன சொன்னாங்க என்று கேட்க, வியர்வையால் உடம்பெல்லாம் அலர்ஜி வந்துச்சு ஏசியிலே தூங்கி பழக்கம் என்பதால் இங்கு வந்து ஹீட் ஒத்துக்கவில்லை என்று சொல்ல..
சரஸ்வதி தமிழ் கிட்ட ஏசி நம்ம வீட்டுக்கு வாங்கி வைத்துவிடலாமா என்று கேட்க ஏசிலாம் வாங்க வேணாம் அதுக்கு வேற ஒரு பிளான் வச்சிருக்கேன் நான் ஒரு இடத்துக்கு போயிட்டு வரேன் என்று தமிழ் நமச்சியை கூட்டிக்கிட்டு போகிறார்.. கொஞ்ச நேரம் கழித்து தமிழ் திரும்பி வந்து எல்லோரும் கிளம்புங்க நம்ம ஒரு இடத்துக்கு போகணும் என காரில் அழைத்துக் கொண்டு போகிறார்.
அந்த இடத்திற்கு வந்ததும் தமிழ் இந்த வீடு வாடகைக்கு பார்த்து இருக்கேன் உள்ள போய் எப்படி இருக்கு பாக்கலாமா என்று கூப்பிட இப்ப யாரு உன்ன வீடு பார்க்க சொன்னா அந்த வீட்டிலேயே நம்ம எல்லாம் ஒண்ணா இருக்கலாம் வாங்க திரும்ப வீட்டுக்கே போகலாம் என கோதை சொல்ல.. அந்த வீடு வசதி இல்ல, நம்ம எல்லோரும் தங்கறதுக்கு இடம் பத்தல வேணுனா நானும் சரஸ்வதியும் இங்கேயே உங்க கூட தங்குறோம் என்று சொன்னவுடன் எல்லோரும் சந்தோஷப்பட்டு போய் வீட்டை சுற்றி பார்க்கின்றனர்.
நடேசன் கோதையிடம் வீடு எப்படி இருக்கு என கேட்கிறார். அதற்கு பெத்த மகன் சம்பாத்தியத்தில் உட்கார்ந்து சாப்பிடுறது தனி சுகம் தான்.. வீடு சிம்பிளா அழகா இருக்கு என்று பார்த்துக் கொண்டிருக்கிறார் அப்போது நமச்சி இடம் தமிழ் உனக்கும் ஒரு ரூம் இருக்கு. நீயும் இங்கேயே எங்க கூட தங்கிடு கல்யாணத்துக்கு அப்புறம் உனக்கு தனி ரூம் வேணும் இல்ல என்று சொல்ல நமச்சி எமோஷனல் ஆகி கண்கலங்குகிறார்.
பிறகு சரஸ்வதி நாங்க கஷ்டப்பட்டப்ப எங்க கூட நீங்க தான் இருந்தீங்க அதுவே எங்களுக்கு ரொம்ப ஆறுதலா இருந்தது அதனால நீங்க எப்பவும் எங்க கூட தான் இருக்கணும் என்று சொல்கிறார். புது வீட்டை எல்லோரும் சுத்தி பார்க்கின்றனர் இதோடு இன்றைய எபிசோடு முடிந்துள்ளது..