Thamizhum Saraswathiyum September 26 : இன்றைய எபிசோடில் தமிழ் சரஸ்வதி இடம் எழுந்திரி ஒரு இடத்துக்கு போகணும் என சரஸ்வதியை மெக்கானிக் ஷெட்டுக்கு அழித்துக் கொண்டு போகிறார். சரஸ்வதி இங்கே ஏன் அழைச்சிட்டு வந்தீங்க நீங்க தான் வேலைக்கு இனிமேல் போகக்கூடாது என்று காலைல தானே சொன்னீங்க..
இப்ப என்ன திடீர்னு என்று கேட்க, அதுவா நமச்சி சொன்னா பொண்ணுங்க மாசமா இருக்கும் பொழுது அவங்க ஆசைப்படுறது எல்லாம் செய்யணுமா, அதனால இது உனக்கு புடிச்ச வேலை என்கின்றதால் உன்னை இங்கு கூட்டிட்டு வந்திருக்கேன்.
ஆனா ஒரு கண்டிஷன் நீ இங்க எந்த வேலையும் செய்யக்கூடாது சின்னாவ வச்சு தான் வேலை செஞ்சுக்கணும் நீ மேற்பார்வை மட்டும் பார்த்துக்கிட்டு உட்கார்ந்துக்கலாம் என்று சொல்கிறார்.. மேலும் தமிழ் ஒரு பையை கொடுத்து இதில் மாங்கா, புளிப்பு மிட்டாய், ஊறுகாய் எல்லாம் இருக்கு அப்பஅப்ப இதெல்லாம் சாப்பிடு நான் கிளம்புறேன் என்று சொல்லிவிட்டு தமிழ் சென்றுவிட்டார் பிறகு சரஸ்வதி வேலை பார்க்கிறார்.
அப்பொழுது ஒரு பாக்ஸை கையில் எடுக்கும் பொழுது தமிழ் தூரத்தில் இருந்து சரஸ்வதியை பார்த்துவிட்டு வெயிட் தூக்காத என்று ஓடி வருகிறார். உடனே சரஸ்வதி நீங்க இன்னும் போகலயா, இது வெயிட்டே இல்ல வெறும் டப்பா தான் என்று சொல்கிறார் பிறகு சரி நான் போறேன் நீ பத்திரமா இரு என்று சொல்லிவிட்டு தமிழ் கிளம்புகிறார்.
அடுத்து அர்ஜுனுடைய அப்பாவிற்கு நினைவு நாள் என்பதால் அவரது அப்பா மற்றும் அக்கா புகைப்படத்தை வைத்து மாலை போட்டு சாமி கும்பிடுகின்றனர் அப்பொழுது அர்ஜுனின் அம்மா லட்சுமி என்ன தான் கோதையை வீட்டை விட்டு துரத்தினாலும் அவ அவங்க பசங்க கூட சந்தோஷமா இருக்கா, நம்ப அப்பாவும், அக்காவும் திரும்ப வர போறதில்லை என வருத்தப்படுகிறார்..
அப்பொழுது ராகினி அங்கு வருகிறார் கவலைப்படாதீங்க அத்தை அதான் மாமாவோட கம்பெனி எல்லாம் திரும்பி கிடைச்சிடுச்சு இல்ல என்று சொல்ல, லட்சுமி இருந்தாலும் அந்த கம்பெனி இப்ப கோதை இன்டஸ்ட்ரிஸ் என்று தானே சொல்றாங்க அப்ப லக்ஷ்மி இண்டஸ்ட்ரின்னு பேர் இருந்தது அதை ரொம்ப பெருசாகணும்னு அவர் ரொம்ப ஆசைப்பட்டாரு..
கோதை இண்டஸ்ட்ரீஸ லட்சுமி இண்டஸ்ட்ரீஸ்னு மாத்துனா ரொம்ப நல்லா இருக்கும் என்று சொல்ல ராகினி இது நியாயமான ஆசை தானே மாத்திக்கலாம் என்று சொல்கிறார்.. பிறகு வீட்டு சுவற்றில் இருக்கும் அந்த சரஸ்வதி புகைப்படத்தையும் அழிச்சிடலாம் நீ அதை அடிக்கடி பார்த்து சோகமாகுற இந்த மாதிரி டைம்ல நீ வருத்தப்படக்கூடாது என ராகினிடம் சொல்ல..
அதற்கும் ராகினி சரி என்று சொல்லிவிட்டார் பிறகு அப்ப குடும்ப புகைப்படத்தையும் எல்லாத்தையும் எடுத்துடலாம் என்று கோதை படத்தையும் ஆட்களை வைத்து அழித்து விட்டனர் மேலும் குடும்ப போட்டோ எல்லாத்தையும் சுவற்றில் இருந்து கழட்டி விட்டன ராகினி இதைப் பார்த்து வருத்தப்படுகிறார் இதோடு இன்றைய எபிசோட் முடிந்துள்ளது