Thamizhum saraswathiyum : விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வந்தாலும் தமிழும் சரஸ்வதியும் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது அதற்கு காரணம் பல சீரியல்களில் அரைத்த மாவையே அழைப்பார்கள் ஆனால் தமிழும் சரஸ்வதியும் சீரியல் கதை மிகவும் வித்தியாசமாக இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்த நிலையில் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் அர்ஜுன், கோதை ,நடேசன் தமிழ், சரஸ்வதி, வசு, ஜெயந்தி, பரமு, ராகினி என பலர் நடித்து வருகிறார்கள் இவர்கள் ஒரு நாளைக்கு தமிழும் சரஸ்வதியும் சீரியலுக்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்ற தகவல் தற்பொழுது கிடைத்துள்ளது.
அர்ஜுனின் அக்காவாகவும் பரமுவின் மனைவியாகவும் நடித்து வரும் ஜெயந்தி ஒரு நாளைக்கு சம்பளமாக தமிழும் சரஸ்வதியும் சீரியலில் நடிக்க ஐந்தாயிரம் ரூபாய் வாங்கி வாங்குவதாக தகவல் கிடைத்துள்ளது. அதேபோல் தமிழுக்கு நண்பனாக நடித்து வரும் நமச்சி 8000 சம்பளமாக வாங்குகிறார் எனக் கூறப்படுகிறது. ஜெயந்தியின் கணவனாகவும் அர்ஜுனின் மாமாவாகவும் நடித்துவரும் பரமன் ஒரு நாளைக்கு 5000 ரூபாய் சம்பளமாக வாங்குகிறார் என கூறுகிறார்கள்.
தமிழுக்கு தம்பியாகவும் வசுவுக்கு கணவனாகவும் நடித்து வரும் கார்த்தி ஒரு நாளைக்கு தமிழும் சரஸ்வதியும் சீரியலில் நடிக்க 8000 சம்பளமாக வாங்குவதாக தகவல் கிடைத்துள்ளது. ஜெயந்திக்கு தம்பியாகவும் பரமனுக்கு மச்சானாகவும் நடித்து வரும் அர்ஜுன் ஒரு நாளைக்கு 12000 ரூபாய் சம்பளம் வாங்குவதாக தகவல் கிடைத்துள்ளது.
இந்த சீரியலில் கதாநாயகனாக நடித்து வரும் தமிழ் ஒரு நாளைக்கு 13000 ரூபாய் சம்பளம் வாங்குவதாக கூறுகிறார்கள் அதேபோல் தமிழுக்கு மனைவியாக நடித்து வரும் நக்ஷ்த்திரா ஒரு நாளைக்கு 13000 சம்பளம் வாங்குவதாக தகவல் கிடைத்துள்ளது . இவரைத் தொடர்ந்து இதற்கு முன்பு வசுவாக நடித்து வந்தவருக்கு 8000 சம்பளமாக கொடுக்கப்பட்டதாம்.
இந்த சீரியலில் வாய் கிழிய பேசும் ராகினிக்கு வெறும் 6 ஆயிரம் ரூபாய் தான் சம்பளம் இவர்களைத் தொடர்ந்து நடேசன் ஆக நடிப்பவருக்கு எட்டாயிரம் ரூபாயும், கோதையாக நடிப்பவருக்கு 8000 ரூபாய் ஆகும் சம்பளம் கொடுக்கப்பட்டு வருகிறதாம் அதேபோல் சந்திரகலாவாக நடித்து வருபவருக்கு 6000 ரூபாய் சம்பளமாக கொடுக்கப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது.