Thamizhum saraswathiyum : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் சரஸ்வதி தமிழ் மீது இருக்கும் கொலை பழியை துடைக்க வேண்டும் என்பதற்காக அர்ஜுனை பாலோ பண்ணி ஒரு வழியாக அர்ஜுனனின் வண்டவாளத்தை கண்டுபிடித்து விடுகிறார். அதுமட்டுமில்லாமல் அர்ஜுனனின் ஃபிரண்ட் இளங்கோ மூலம் அனைத்து உண்மைகளையும் வீட்டில் வந்து சரஸ்வதி கூற சொல்கிறார்.
அர்ஜுனின் நண்பன் இளங்கோ அனைத்து உண்மைகளையும் சொல்லியும் யாரும் நம்புவது போல் தெரியவில்லை ஏனென்றால் அர்ஜுன் சரஸ்வதி இளங்கோவுக்கு பணம் கொடுத்ததை வீடியோ எடுத்து அனைவருக்கும் காட்டி விடுகிறார். இதனால் பணத்திற்காக பொய் சொல்ல சொல்கிறார் என சரஸ்வதி மீது வீண்பழி விழுகிறது. ஆனால் இது கோதைக்கு மிகப்பெரிய சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
இந்த நிலையில் நடேசன் கோதையிடம் உன்ன புரிஞ்சிக்கவே முடியல சரஸ்வதிக்கு ஆறுதல் சொல்ல சொல்ற ஆனா அர்ஜுன் சொல்றத நம்புற என பேச அர்ஜுன் மீது எனக்கு முழு சந்தேகம் வந்துவிட்டது தமிழ் கண்டிப்பா தப்பு செஞ்சிருக்க வாய்ப்பே இல்லை அந்த இளங்கோ சொன்னது எல்லாம் உண்மைதான் ஆனால் அதற்கான ஆதாரம் கிடையாது.
சிக்க கூடாதுன்னு பக்காவா பிளான் பண்ணி வீடியோ எடுத்து அவன் மேல தப்பே இல்லாத மாதிரி நிரூபிச்சிட்டான் இனிமே நம்ம சும்மா இருக்க கூடாது இவ்வளவு நாள் முட்டாளா இருந்தது போதும் அர்ஜுனனின் முகத்திரையை நானே வெளிக்கொண்டு வருகிறேன் என கோதை நடேசன் அவர்களிடம் பேசிக் கொண்டிருக்கிறார் அந்த பக்கம் அர்ஜுன் சரஸ்வதி மூக்குடைந்து போகும் பொழுது இது உங்களுக்கு தேவையா தேவையில்லாம என் கூட மோதி மூக்கொடைஞ்சி நிக்கிறீங்களே சும்மா சும்மா தோத்துக்கிட்டே இருக்கீங்களே. என சரஸ்வதியை சீண்ட ஒரு நாள் கண்டிப்பா நீ மாட்டுவாய் அன்னைக்கு தான் தெரியும் என சரஸ்வதி கூறுகிறார்.
அடுத்த காட்சியில் அர்ஜுனுக்கு கோதை மீது லேசாக சந்தேகம் இருக்கிறது ஏனென்றால் கோதை பொடி வைத்துதான் பேசிய உள்ளார் என அர்ஜுனுக்கு தெரிய வருகிறது அதனால் இனிமை உஷாராக இருக்க வேண்டும் என கூறுகிறார். மேலும் நமச்சி அர்ஜுனனை பாலோ செய்ததை அர்ஜுனுக்கு தெரிய வர அதனால் தான் வீடியோ எடுக்க முடிந்தது என பேசிக்கொண்டு இருக்கிறார்கள் அர்ஜுன் குடும்பத்தில்.
சரஸ்வதி அசிங்கப்பட்டது தமிழுக்கு தெரிய வர தமிழ் இது எதுக்கு உனக்கு தேவையில்லாத வேலை நானே விட்டுட்டு போறேன் இல்ல அவன் கிரிமினல் அவன் இப்படித்தான் செய்வான் தேவையில்லாம அவன் கூட மோதிட்டிருக்கிறது விட்டுட்டு நம்ம வேலையை பார்க்கலாம் எனக்கூற சரஸ்வதி என் குழந்தையை கொலைகார குழந்தை யாரும் சொல்ல கூடாது அதனால கண்டிப்பா இதை நான் நிரூபிச்சே ஆவேன் என கூறுகிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.