Thamizhum saraswathiyum : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் சரஸ்வதி தன் கணவர் மீது இருக்கும் பழியை எப்படியாவது மாற்ற வேண்டும் என்பதற்காக அர்ஜுனை பாலோ பண்ண சொல்கிறார் நமச்சி இடம், நமச்சி அதே போல் பாலோ செய்கிறார் ஆனால் அர்ஜுனனின் நண்பன் அர்ஜுனிடம் இரண்டு லட்சம் பணம் கேட்கிறார் தன்னுடைய அம்மாவின் ஆப்பரேஷனுக்காக ஆனால் தர மறுக்கிறார் அர்ஜுன். இதனை பயன்படுத்தி எப்படியாவது அர்ஜுனை சிக்க வைக்கலாம் என பிளான் போட்டு சரஸ்வதி அர்ஜுனனின் நண்பனிடம் இரண்டு லட்சம் பணத்தை கொடுத்து உங்க அம்மாவின் ஆப்ரேஷன் செலவை பார்த்துக்கோ எனக் கூறுகிறார்.
அதுமட்டுமில்லாமல் அர்ஜுனை பற்றிய அனைத்து உண்மைகளையும் சொல்லு உன்னை என் தம்பி மாதிரி நினைச்சு கேட்கிறேன் என கேட்க உடனே அர்ஜுனனின் நண்பன் அனைத்தையும் கூறுகிறார். ஆனால் இதனை ஒளிந்திருந்து யாரோ ஒருவர் வீடியோ எடுக்கிறார்கள். பரபரப்பாக சரஸ்வதி போன் செய்து நடேசன் இடம் அர்ஜுனனின் உண்மை முகத்தை வெளிப்படுத்துகிறேன் என கிளம்புகிறார். நேராக அர்ஜுன் இருக்கும் இடத்திற்கு சரஸ்வதி நமச்சி மற்றும் அர்ஜுனனின் நண்பன் மூவரும் வருகிறார்கள்.
அப்பொழுது வாசலில் அனைவரும் நிற்க சரஸ்வதியை நீ ஏன் இங்கு வந்தாய் என ராகினி திட்டுகிறார் அதுமட்டுமில்லாமல் அர்ஜுன் குடும்பம் அனைத்தும் சரஸ்வதியை விரட்டி அடிக்க பார்க்கிறார்கள் ஆனால் நடேசன் அவர் சொல்ல வந்ததை சொல்லட்டும் எனக் கூற சரஸ்வதியும் நான் சொன்னால் சரிவராது அர்ஜுனனின் நண்பன் இளங்கோ சொன்னால் உண்மையாக இருக்கும் என அனைத்து உண்மையும் கூற சொல்லுகிறார். இளங்கோவும் அனைத்து உண்மையையும் கூறியும் அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.
ஆனால் அர்ஜுன் ஏற்கனவே அங்கு நடந்த அனைத்தையும் வீடியோ எடுத்து வைத்துள்ளார் என்பதை யாருக்குமே தெரியாது இந்த சமயத்தில் ராகினி இத்தனை பேர் உன்னை பற்றி பேசுகிறார்களே ஏதாவது சொல்லு அர்ஜுன் என கத்துகிறார் அந்த சமயத்தில் அர்ஜுன் இவங்க சொல்றதெல்லாம் உண்மைதான் ஆனால் இவங்க எதுக்காக இப்படி பண்றாங்க தெரியுமா என வீடியோவை எடுத்து காட்டுகிறார் அப்பொழுது பணம் கொடுத்ததை வீடியோ எடுத்து வைத்துள்ளார் அர்ஜுன்.
உடனே கார்த்தி மற்றும் அர்ஜுன் குடும்பம் அனைவரும் சரஸ்வதியை திட்டுகிறார்கள் அந்த சமயத்தில் கோதையும் பணத்திற்காக உண்மையை மறைக்க பார்க்கிறாயா என சரஸ்வதியை திட்டுகிறார் ஆனால் அவர் வேண்டுமென்றே திட்டவில்லை சரஸ்வதி வேறு யாரும் திட்டக்கூடாது என்பதற்காக திட்டி விடுகிறார் என தெரிகிறது. இதனால் அர்ஜுன் சைலண்டாக வில்லன் சிரிப்பு சிரிக்கிறார். இளங்கோவும் சத்தியம் பண்ணி சொல்லியும் யாரும் நம்பவில்லை. சரஸ்வதி எவ்வளவு முயற்சி செய்தும் அனைவரும் முன்பும் அசிங்கப்பட்டு நிற்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.