Thamizhum saraswathiyum : தமிழும் சரஸ்வதியும் சமீபத்திய எபிசோடில் தமிழ் மீது விழுந்த கொலை பழியை எப்படியாவது நிரூபிக்க வேண்டும் என முயற்சி செய்து சரஸ்வதி நமச்சி அவர்களிடம் கூறி அர்ஜுனை ஃபாலோ பண்ண சொல்கிறார் அவரும் ஃபாலோ பண்ணி அவருடைய நண்பரிடம் பேசிக் கொண்டிருப்பதை கேட்டுவிட்டு சரஸ்வதி இடம் சொல்ல உடனே சரஸ்வதி அர்ஜுனனின் நண்பனை மீட் செய்து பணத்தை கொடுத்து உங்களுடைய அம்மாவின் ஆப்ரேஷன் செலவை பார்த்துக் கொள்ளுங்கள் எனக் கூறுகிறார்.
ஆனால் பணம் எல்லாம் வேண்டாம் நான் செஞ்ச தவறுக்கு கொஞ்சமாவது நல்லது தேடிக் கொள்கிறேன் என நான் வந்து அர்ஜுனனின் வண்டவாளத்தை சொல்கிறேன் எனக் கூறிவிடுகிறார் அதுமட்டுமில்லாமல் தமிழை வேண்டும் என்ற சிக்க வைத்ததையும் சரஸ்வதியிடம் அர்ஜுனனின் நண்பன் கூறுகிறார் அந்த சமயத்தில் யாரோ ஒருவர் வீடியோ எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் இது தெரியாமல் பணம் கொடுப்பதையும் வீடியோ எடுக்கிறார்கள்.
இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் சரஸ்வதி அர்ஜுனனின் நண்பனை கூட்டிக்கொண்டு நடேசன் வீட்டுக்கு வருகிறார் அது மட்டும் இல்லாமல் அனைவரும் முன்பும் உண்மையை சொல்ல சொல்கிறார் அர்ஜுனன் நண்பன் இளங்கோவும் உண்மையை சொல்கிறார் அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். ஆனால் அர்ஜுன் சரஸ்வதி இளங்கோவுக்கு பணம் கொடுத்ததை வீடியோ எடுத்துக் கொண்டு வைத்து அனைவரிடமும் காட்டிவிடுகிறார்.
இப்படி பணத்தை கொடுத்து உண்மையை மறைக்க பார்க்கிறாயா? என கோதை சரஸ்வதியை திட்டி விடுகிறார் பிறகு இருவரும் கிளம்பி விடுகிறார்கள் அப்படி இருக்க சமீபத்தில் ஒரு ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது அந்த ப்ரோமோ வீடியோவில் சரஸ்வதி இளங்கோ நமச்சி மூவரும் செல்லும் பொழுது அர்ஜுன் வந்து நக்கலாக பேசுகிறார். அது மட்டும் இல்லாமல் கோதைக்கு பெரிய சந்தேகம் வந்துவிட்டது.
நடேசன் அவர்களிடம் இதுவரை நீங்கள் சொன்னதை பெருசா நான் எடுத்துக்கல இப்ப எனக்கு அர்ஜுன் மேல முழுசா சந்தேகம் வந்துடுச்சு தமிழ் கண்டிப்பா தப்பு செய்யலன்னு நான் நம்புறேன் இப்ப அதனால கண்டிப்பா அர்ஜுனன் முகத்திரையை நான் கிழிச்சு காட்டுறேன் என சபதம் போடுகிறார் அது மட்டும் இல்லாமல் இனி நானே எல்லாத்தையும் கண்டுபிடிக்கிறேன் என நடேசன் அவர்களிடம் கூறுகிறார் அப்பொழுது நடேசன் சந்தோஷப்படுகிறார் இத்துடன் இந்த ப்ரோமோ வீடியோ முடிகிறது.