Thamizhum saraswathiyum : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் ஆதி அர்ஜுன் அவர்களிடம் நான் வருவேன் என நீ எதிர்பார்க்கவில்லை என பேசிக் கொண்டிருக்கிறார் அது மட்டும் இல்லாமல் அர்ஜுனனின் வண்டவாளத்தை ஒவ்வொருவராக பேசுகிறார்கள் அதேபோல் கோதையும் இவ்வளவு நாளா உன்கிட்ட சொல்லாத இருந்ததற்கு காரணம் நீ வாயும் வயுருமா இருக்க அதனால கஷ்டப்படுவ என்றுதான் சொல்லவில்லை என பேசிக் கொண்டிருக்கிறார்.
அதேபோல் வசுவும் எப்ப பாரு அர்ஜுனுக்கு சப்போர்ட் பண்ணிட்டு இருப்பியே இப்ப என்ன சொல்ல வர ஆதாரம் கேட்டாரு ஆதாரத்தை காட்டியாச்சு இதுக்கு என்ன சொல்ல போறாரு உங்க அர்ஜுன் என பேசுகிறார் உடனே அந்த வீடியோவை போட்டு காமி ஆதி என வசு பேசுகிறார் ஆதியும் வீடியோவை போடுகிறார் வீடியோ ஸ்டக் ஆகிறது கொஞ்ச நேரத்தில் ஓட ஆரம்பிக்கிறது வீடியோவை பார்த்த அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.
அது மட்டும் இல்லாமல் இப்ப நீ என்ன முடிவு எடுக்க போற ராகினி என ராகினியை பார்த்து கோதை கேட்க இது எனக்கு முன்னாடியே தெரியும் என பேசுகிறார் எல்லாம் தெரிஞ்சுக்கிட்டு தான் அப்ப நீ இவனோட இருக்கியா என நடேசன் கத்துகிறார். இதை பார்த்த கார்த்தி அர்ஜுனை அடிக்கிறார் அது மட்டும் இல்லாமல் வெளுத்து வாங்குகிறார். என் அண்ணனை கூட நம்பல உன்னை நம்பினேன் இப்படியா பண்ணுவ என அடிக்கிறார் அதேபோல் கோதையும் பெத்த மகனை கூட நம்பல உன்னை நம்பினேன் அதுக்கு நல்ல நன்றி கடன் செலுத்திட்ட என திட்டுகிறார்.
ராகினி எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார் இது எல்லாமே எனக்கு தெரியும் என்பது போல் கூறுகிறார் ஆனால் அர்ஜுன் அதற்கு முன்பு எங்க அப்பா ஒரு கம்பெனி வெச்சிருந்தாரு அதுக்கு பேரு லட்சுமி கம்பெனி அந்த கம்பெனி லாஸ் ஆகிடுச்சு அந்த சமயத்துல எங்க அக்காவுக்கு கல்யாணம் அதனால பணம் தேவைன்னு கம்பெனி விக்க முடிவு செய்து உங்க அம்மா அப்பா கிட்ட கேட்டாங்க அவங்களும் கம்பெனி வாங்கிக்கிறேன்னு சொன்னாங்க ஆனா கடைசி நேரத்துல கம்பெனி வாங்க காசு இல்லைன்னு சொல்லிட்டாங்க அதனால எங்க அக்கா கல்யாணம் நின்னுடுச்சு எங்க கம்பெனியையும் பேங்க் ஜப்தி பண்ணிடுச்சு அதனால நாங்க இந்த ஊரிலேயே இருக்க முடியாம திருச்சிக்கு போயிட்டோம்.
அங்க போய் ஒரே ஒரு சின்ன வீட்டுல எல்லாரும் இருந்தோம் எவ்வளவு நாள் நாங்க பட்டினியா கடந்த எங்க அக்காவும் கல்யாணம் நடந்தாலும் செத்துட்டா அதேபோல எங்க அப்பாவும் உங்க அம்மா அப்பா செஞ்ச நம்பிக்கை துரோகத்தால் ஹார்ட் அட்டாக் வந்து செத்துட்டாரு அதனாலதான் அதுக்கப்புறம் உங்க அம்மா அப்பாவை பழிவாங்க துடிச்சான் கோல்ட் மெடல் லிஸ்ட் வாங்குன படிப்புல எதற்சியா தான் கார்த்தியோட பழக்கம் வந்துச்சு அதன் பிறகு தான் உங்க வீட்டுக்கு வந்தேன் உங்க வீட்டுக்கு வந்த உடனே உங்களை பழி வாங்கணும் தான் தோணுச்சு என பேச அதற்கு ராகினி அப்ப காதலிச்சது எல்லாம் பொய்யா என கேட்க காதலிச்சது சத்தியமா நூற்றுக்கு நூறு உண்மை இப்பவும் உன்னை காதலிக்கிறேன் என அர்ஜுன் பேசுகிறார்.
இதையெல்லாம் ராகினி அனைவரும் முன்பும் சொல்லும் பொழுது அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.