Thamizhum saraswathiyum Today Episode August 30 : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் ஆதி ரெக்கவரி சாஃப்ட்வேர் மூலம் அந்த வீடியோவை எப்படியாவது எடுத்து விட வேண்டும் என முயற்சி செய்து கொண்டிருக்கிறார் அந்த சமயத்தில் வசு கால் செய்கிறார் நீ பயப்படாமல் தூங்கு நான் அந்த வீடியோவை விடிவதற்குள் எடுத்து விடுகிறேன் என ஆறுதல் கூறுகிறார் ஆதி வீடியோவை எடுப்பதற்கு எவ்வளவோ முயற்சி செய்து கொண்டிருக்கும் பொழுது ஒரு வழியாக வீடியோவை எடுத்து விடுகிறார் வீடியோவை பார்த்த ஆதிக்கு அதிர்ச்சியாக உள்ளது.
ஏனென்றால் அந்த வீடியோவில் தமிழ் அர்ஜூனை கத்தியால் குத்தவில்லை அர்ஜுன் ஆல் வைத்து கத்தியால் குத்தியது தெரியவந்துள்ளது அது மட்டும் இல்லாமல் வேண்டுமென்றே திட்டம் போட்டு சிக்க வைத்துள்ளார் என்பது தென்ன தெளிவாக தெரிந்து விடுகிறது. வீடியோவை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது யாரோ கதவை தட்டுவது போல் சத்தம் கேட்க ஆதி வெளியே வந்து பார்க்கிறார் ஆனால் யாரும் இல்லாததால் உள்ளே செல்ல போகும்பொழுது பின் மண்டையில் கட்டையால் தாக்குகிறார்கள் அது மட்டும் இல்லாமல் லேப்டாப் மட்டும் ஹார்ட் டிஸ்கை உடைத்து போட்டுவிட்டு கிளம்பி விடுகிறார்கள்.
ஆனால் வீட்டில் அர்ஜுன் முதல் வருட திருமண நாள் என்பதால் கோலாகலமாக கொண்டாட ரெடியாகி கிறார்கள் இந்த சமயத்தில் அர்ஜுன் மற்றும் அர்ஜுன் மாமா, அக்கா, அம்மா என அனைவரும் வர அப்பொழுது கோதை நடேசன் வசு மூவரும் நிற்க அர்ஜுன் மிகவும் நக்கலாக கோதையிடம் வந்து பேசுகிறார் அது மட்டும் இல்லாமல் ஏதோ ஆதாரம் சொன்னிங்களே இல்லையா என பேச அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள் அதுமட்டுமில்லாமல் இவன் ஏதோ ஆதியை செய்துள்ளது போல் அவர்களுக்கு தோன்ற உடனே வசு நான் போய் பார்த்துவிட்டு வருகிறேன் என கிளம்பி விடுகிறார்.
அந்த சமயத்தில் சரஸ்வதியையும் வசு அழைத்துக் கொண்டு செல்கிறார் அங்கு சென்று பார்த்த பொழுது அவர்களுக்கு அதிர்ச்சி தான் ஏனென்றால் ஆதி தாக்கப்பட்டு கீழே கிடக்கிறார் அதுமட்டுமில்லாமல் லேப்டாப் அனைத்தும் உடைத்து சுக்குநூறாக கிடைக்கிறது. ஒரு வழியாக ஆதி எழுந்து அந்த வீடியோவை நான் பார்த்தேன் அவன் பக்கவாக பிளான் போட்டு தான் தமிழ் மாமாவை மாட்டி விட்டு உள்ளான் என கூறுகிறான்.
உடனே இருந்த ஒரு ஆதாரமும் போச்சு என வசு மற்றும் சரஸ்வதி இருவரும் புலம்பி கொண்டிருக்க ஆதி நான் சந்திரகலாவோட மகன் அப்படி எல்லாம் ஆதாரத்தை அழித்துவிட முடியாது என அந்த வீடியோ என்னோட மெயிலில் பேக்கப் எடுத்து வைத்து விட்டேன் என கூறுகிறார் உடனே வீடியோவை அனைவரும் பார்க்கிறார்கள். இந்த வீடியோவை வீட்டில் உள்ள அனைவருக்கும் போட்டு காட்டி அவனை வெளியே தள்ள வேண்டும் என கிளம்புகிறார்கள்.
அங்கு அர்ஜுன் ஆதாரம் எங்க அத்தை ஒன்றும் இல்லையா என நக்கலாக பேச அது மட்டும் இல்லாமல் உங்க எல்லாருக்கும் ஒரு சர்ப்ரைஸ் இருக்கு அது உங்களுக்கு அதிர்ச்சியாக கூட இருக்கலாம் என பேசிக் கொண்டிருக்கிறார் அது மட்டும் இல்லாமல் என்னடா சர்ப்ரைஸ் என கார்த்தி கேட்க இது உனக்கு சர்ப்ரைஸா இருக்குமா இல்லையான்னு தெரியல ஆனா அதிர்ச்சியா இருக்கும் என பொடி வைத்து பேச அனைவரும் மிரளுகிறார்கள்.
அந்த சமயத்தில் சரஸ்வதி வந்து நிறுத்துடா உன் சர்ப்ரைஸ் என கத்துகிறார் அதுமட்டுமில்லாமல் சரஸ்வதியை அர்ஜுன் குடும்பம் திட்டுகிறது இங்கே ஏன் வந்தாய் என கோதை ஒரு வார்த்தை கூட பேச கூடாது என அர்ஜுன் குடும்பத்தை மிரட்டுகிறார். அவள் என் மருமக அவளுக்கு வர இங்க எல்லா உரிமையும் இருக்கிறது என்பது போல் பேசுகிறார். இப்படியே பேசிக் கொண்டிருக்க சரஸ்வதி நீ அவ்வளவு சீக்கிரம் தப்பிக்க முடியாது வீடியோ ஆதாரத்தை எடுத்தாச்சு என பேசுகிறார்கள் அர்ஜுனின் மரண பயம் முகத்தில் தெரிய நடேசன் பாத்திமா ராகினி உன் புருஷன் முகத்துல மரண பயம் தெரிகிறது என பேசுகிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.