Thamizhum saraswathiyum : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் ராகினி வீட்டை வீட்டு கிளம்ப பெட்டி படிக்கையுடன் வெளியே செல்ல அதனை தடுத்து நிறுத்துகிறது அர்ஜுன் குடும்பம் அது மட்டும் இல்லாமல் எவ்வளவோ கூறியும் ராகினி கேட்காததால் கடைசியாக அர்ஜுனின் அம்மா நாம போய்ட்டம்னா தமிழ் நினைச்சது நடந்துரும் தமிழ் ஜெயிச்சுருவான் நாம தோத்துருவோம் என கூற ராகினி அதிர்ச்சி அடைகிறார்.
நாம எப்படி தோப்போம் என ராகினி கேட்க ஆமாம் நாம போய்ட்டம்னா தமிழ் ஈசியா வீட்டுக்குள்ள வந்துருவான் அதுக்கப்புறம் குடும்பத்தில் தமிழ் சரஸ்வதி என அனைவரும் சந்தோஷமாக இருப்பாங்க நாம தான் வெளியில போய் கஷ்டப்படணும் அர்ஜுன் புதுசா வேலை தேடணும் என அனைத்தையும் கூற நாம போகக்கூடாது என அதிரடியாக கூறி விடுகிறார் ராகினி. அடுத்த காட்சியில் ராகினி பலமாக யோசித்துக் கொண்டிருக்கிறார் அப்பொழுது அர்ஜுன் என்ன யோசித்துக் கொண்டிருக்கிறாய் என கேட்க ராகி மொத்த சொத்தையும் ஆட்டைய போட்டுட்டு இவங்களை எல்லாத்தையும் துரத்தி விடணும் அதுபோல இருக்கு எனக்கு என கூறுகிறார்.
இதனால் அர்ஜுன் சந்தோஷத்தில் மிதக்கிறார் அடுத்த காட்சியில் கோவிலில் இருந்து வீட்டிற்கு வசு, கோதை, நடேசன் என அனைவரும் வருகிறார்கள் அப்பொழுது நீ இன்னும் இங்க தான் இருக்கியா என வசு கேக்க நான் கிளம்பி போய்டுவேன் நீங்க சந்தோஷமா இருக்கலாம்னு நினைக்கிறீங்களா என ராகினி கூறுகிறார். அப்படியா இல்ல எப்ப பார்த்தாலும் கிளம்பி போறேன் கிளம்பி போறேன்னு சொல்றியே அதனால கேட்டேன் என வசு பேசுகிறார்.
நான் போகலன்னு அம்மாவை தவிர மத்த எல்லாருமே நினைக்கிறாங்க நாம் போன அம்மா மட்டும்தான் வருத்தப்படுவாங்க அதனால தான் இங்கேயே இருக்கேன் என ராகினி கூறுகிறார் அது மட்டும் இல்லாமல் அர்ஜினும் நாம இங்கே இருந்தால் தான் அத்தை மாமாவும் சந்தோஷமா இருப்பாங்க என ரொம்ப போர்ஸ் பண்றாரு அதனாலதான் இருக்கோம் என கூறுகிறார்.
ஆனால் நடேசன் மாப்பிள்ளை சொன்னா சரிதான் என குத்தி காமிக்கிறார். தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் அந்த பக்கம் ரொமான்ஸ் செய்து கொண்டிருக்கிறார்கள். அடுத்த நாள் காலையில் ராகினி வெளியே வருகிறார் கோதை அவரிடம் பகலில் ரொம்ப நேரம் தூங்காத குழந்தைக்கு நல்லது கிடையாது என பேச நடேசன் வாக்கிங் என்னோட வான்னு சொன்னா கேக்குறியா என பேசுகிறார்.
நீங்க வாக்கிங் போறன்னு அவுங்க வீட்டுக்கு போறீங்க யார் வீட்டுக்கோ போறீங்க என ராகினி கூறுகிறார் அடுத்த காட்சியில் கார்த்தி கம்பெனிக்கு கிளம்பி கொண்டிருக்கும் பொழுது அந்த புதிய கம்பெனியை வாங்குவது என்னாச்சு என கோதை கேட்க அந்த சமயத்தில் அர்ஜுன் வந்து நம்ம கம்பெனிக்கு கெடுதல் பண்றது தமிழ் தான் நாம் அந்த கம்பெனியை வாங்க கூடாதுன்னு அவருடைய பவர் யூஸ் பண்ணி அவர் அந்த கம்பெனியை வாங்குகிறார் என கோதை மற்றும் நடேசன் இடம் போட்டு கொடுக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.