Thamizhum saraswathiyum : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் சாப்பிட உட்காருகிறார்கள் அப்பொழுது தமிழ் வருவதற்குள் வெரைட்டி வெரட்டையாக பல சாப்பாடுகளை ரெடி செய்து வைத்துள்ளார் சரஸ்வதி. அந்த சமயத்தில் நமச்சி வர ரெண்டு பேரும் பேசிக்கிட்டீங்களா உங்க ரெண்டு பேருக்குள்ள சண்டை இல்லையா என கேட்க சரஸ்வதி தமிழ் விரதம் இருப்பதை கூறுகிறார் அப்பொழுது நமச்சி இப்படியே பண்ணிட்டு இரு ஒரு நாள் நிஜமாகவே கோபமாக இருக்க போற நாங்க சிரிக்கப் போறோம் என பேசுகிறார்.
இந்த சமயத்தில் வசு கால் செய்து அந்த அர்ஜுன் நாளை கண்டிப்பா சிக்கிடுவான் வீடியோ ஆதாரம் கிடைச்சுடும் என கூறுகிறார். மற்றொரு பக்கம் அர்ஜுன் ராகினி இருக்கும் இடத்திற்கு போகிறார் அப்பொழுது ராகினி பலத்த யோசனையில் இருக்கிறார் உடனே அர்ஜுன் ராகினியிடம் என்ன ராகினி நீ என்ன சந்தேக படுறியா என கேட்க நீங்க சொல்ற விளக்கம் எனக்கு சரியாக படவில்லை நீங்க பதவிக்கு ஆசை படவே மாட்டீங்கன்னு நான் நினைச்சேன் ஆனா நீங்க இப்படி பேசி இருக்கீங்க அதான் எனக்கு இன்னும் புரியாமல் இருக்கிறது என்பது போல் கூறுகிறார்.
உடனே அர்ஜுன் நீ என்ன நம்புனா போதும் எல்லாமே நம்ம குழந்தைக்காக தான் கண்டிப்பா நான் எல்லாத்தையும் நேரம் வரும்போது நிருபிப்பன் என்பது போல் பேசுகிறார் ஆனால் ராகினிக்கு அர்ஜுன் மீது பலத்த சந்தேகம் ஏற்பட்டு விட்டது அடுத்த காட்சியில் நடேசன் மற்றும் கோதை இருவரும் கீழே நடந்து கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது அர்ஜுன் என்ன மாமா, அத்தை இன்னும் தூங்கலையா என பேச அதற்கு தூக்கம் வரல நாளைக்கு உண்மை தெரிஞ்டும் நிம்மதியா தூங்கலாம்னு இருக்கேம் என கூறுகிறார்கள்.
அதேபோல் அர்ஜுன் நான்தான் எந்த தப்பும் பண்ணலையே உங்களால எதுவுமே நிரூபிக்க முடியாது என்பது போல் பேசுகிறார் நாளைக்கு நீங்க இங்க இருக்கிறது கடைசி அதுக்கப்புறம் கம்பி தான் என்பது போல் நடேசன் கூறுகிறார் பிறகு அர்ஜுன் போன உடன் அர்ஜுனனின் அக்கா இவர்கள் பேசிக் கொண்டிருப்பதை எட்டிப் பார்க்கிறார் அப்பொழுது வசு, நடேசன் கோதை மூவரும் பேசிக் கொண்டிருக்க நாளை காலைல அந்த வீடியோவை ஆதி எடுத்துக்கிட்டு வருவான் என்பது போல் பேசிக் கொண்டிருக்கிறார்கள் இதனை தெரிந்து கொண்ட அர்ஜுனின் அக்கா அர்ஜுனிடம் போய் சொல்கிறார் உடனே அர்ஜுன் நன் மாட்டக்கூடாது என்பதற்காக அர்ஜுனின் அக்காவின் கணவரை வைத்து புதிய திட்டம் போடுகிறார்.
அதுமட்டுமில்லாமல் அர்ஜுனனின் அக்காவின் கணவர் வீடியோவை எடுத்துக் கொண்டு வரக்கூடாது என்பதற்காக கிளம்புகிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.