Thamizhum Saraswathiyum : விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் தொடர் தமிழும் சரஸ்வதியும். இந்த சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் இருக்கின்றனர் இதில் தீபக் மற்றும் நக்ஷத்ரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். ஒவ்வொரு நாளும் புது புது கான்செப்ட் உடன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும்..
இந்த தொடரில் அர்ஜுனை ஆதாரத்துடன் கையும் களவுமாக மாட்டி விட கோதை, நடேசன் மற்றும் வசுந்தரா முயற்சி செய்து வருகின்றனர் கடைசியாக கூட வசுந்தரா அர்ஜுன் போனை எடுத்து அதில் சில பைலை காப்பி செய்து ஏதாவது ஆதாரம் கிடைக்கிறதா என்று பார்த்தார். அதில் இளங்கோவுடன் அர்ஜுன் பேசி இருந்த ஆடியோ ஒன்றை வீட்டில் உள்ள அனைவரிடமும் போட்டு காண்பித்தார். ஆனால் இதிலிருந்தும் அர்ஜுன் தப்பித்துவிட்டார்.
இந்நிலையில் அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ ஒன்று வெளியாகியிருக்கிறது அதில் அர்ஜுன் மற்றும் ராகினியின் முதலாம் ஆண்டு திருமண விழா நடைபெறுகிறது. அப்பொழுது அர்ஜுனின் அக்கா பங்ஷன் ஸ்டார்ட் பண்ணிடலாமா என்று கேட்க அர்ஜுன் நான் ஒரு சர்ப்ரைஸ் வச்சிருக்கேன் அக்கா என சொல்கிறார். உடனே அங்கு சரஸ்வதி, வசு மற்றும் ஆதியுடன் வந்து நிறுத்துடா, ஓ சர்ப்ரைஸ்க்கு இங்க வேலை இல்லடா தம்பி, ஆட்டம் இன்னையோட முடியப்போகுது என்று சொல்கிறார்.
உடனே நடேசன் ஆதியை பார்த்து அந்த வீடியோ எடுத்தாச்சா என்று கேட்க அந்த வீடியோவை நான் நேத்தே எடுத்துட்ட அங்கிள் அதுக்கப்புறம் என்னை யாரோ தலையில அடிச்சு லேப்டாப்பை உடைச்சிட்டு போயிட்டாங்க இருந்தாலும் அந்த வீடியோ இந்த இருக்கு என்று ஆதி தன்னைத்தானே ஆள் வச்சி அர்ஜுன் கத்தியால் குத்திக்கொண்ட வீடியோவை போட்டு காண்பிக்கிறார்.
அதை எல்லோரும் பார்க்கின்றனர் உடனே சரஸ்வதி இதுக்கு மேலயும் உனக்கு மரியாதை இல்லை, இந்த வீட்டை விட்டு வெளியே போடா என்று சொல்கிறார் கோதையும் எங்க வீட்டை விட்டு வெளியே போடா என வேகமாக சொல்லும் புரோமோ வெளியாகியிருக்கிறது.