Thamizhum saraswathiyum : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் வாசு தீவிரமாக அர்ஜுன் போனிலிருந்து எடுத்த டேட்டாவை அனலைஸ் பண்ணிக் கொண்டிருக்கிறார் ஏதாவது ஆதாரம் சிக்குமா என தேடிக் கொண்டிருக்கிறார் அந்த சமயத்தில் கார்த்திக் வந்து என்ன சின்சியரா திடீரென்று லேப்டாப் வச்சுக்கிட்டு ஒர்க் பண்ற நீ பண்றது எதுவுமே சரி இல்லை அப்பா, அம்மா கூட தனியா பேசிட்டு இருக்க இப்ப என்னடான்னா லேப்டாப் வச்சுக்கிட்டு சின்சியரா ஒர்க் பண்ற என கேள்வி எழுப்புகிறார்.
உன் கேள்விக்கெல்லாம் கூடிய விரைவில் பதில் கிடைக்கும் கார்த்தி கொஞ்ச நேரம் அமைதியாக இரு எனக் கூற அந்த சமயத்தில் வாசுவின் தம்பி வருகிறார் வந்தவுடன் கார்த்தி மற்றும் வசு இருவரும் வரவேற்கிறார்கள் உடனே கார்த்தி இடம் வசு இரண்டு காபி மட்டும் அபி எடுத்துக் கொண்டு வர சொல்லுங்க என கூற கார்த்தி கீழே செல்கிறார். காபி வந்தவுடன் குடித்துவிட்டு வசுவின் தம்பியிடம் அர்ஜுன் ரொம்ப மோசமானவன் அவன் மொபைலில் இருந்து நிறைய டேட்டா எடுத்தேன் ஆனா அது ஓபனே ஆகல என வசு கூற நான் தான் அப்பவே சொன்னேன் அல்லவா அவன் மோசமானவன் என வசுவின் தம்பி கூறுகிறார்.
உடனே வசூவின் தம்பி அந்த ஹார்ட் டிஸ்கில் இருந்து எதுவுமே எடுக்க முடியலையா என கேட்க அதுதான் டேமேஜ் ஆயிடுச்சு அதனால எதுமே எடுக்க முடியல என வசு கூற இந்த பைல் எல்லாம் ஓபன் ஆகல இத கொஞ்சம் பாரு என வசு தன்னுடைய தம்பியிடம் கூற உடனே அவரும் பார்த்துக் கொண்டிருக்கிறார் அப்பொழுது பல டேட்டாவை ரெகவரி பண்ணி வசுவிடம் காட்டிக் கொண்டிருக்கிறார் அப்பொழுது சில ஆடியோக்கள் தெரிகிறது அதனையும் போட்டு காட்ட உடனே வசு ஆதாரம் சிக்கிக் கொண்டது இந்த ஒரு ஆதாரம் போதும் என பேசிக்கொண்டு இருக்கிறார்.
உடனே இதனை என்னுடைய மொபைலில் ஏற்றி விடு என தன்னுடைய தம்பியிடம் கேட்க அவரும் ஏற்றிக் கொடுக்கிறார் உடனே கீழே போய் அனைவரிடமும் இதை போய் காட்ட வேண்டும் என தன்னுடைய தம்பியிடம் கூறிவிட்டு கீழே செல்கிறார் அப்பொழுது கோதை மற்றும் நடேசன் அவர்களிடம் ஆதாரம் சிக்கிக் கொண்டது என பேசுகிறார்.
கார்த்தி என்ன ஆதாரம் கிடைச்சுது என கேட்க அதற்கு உன்னுடைய பிரண்டு அர்ஜுனனை பற்றி ஆதாரம் தான் என பேசுகிறார் கார்த்தியும் அர்ஜுனை கூப்பிடுகிறார் அந்த சமயத்தில் ராகினி அர்ஜுன் குடும்பம் என அனைவரும் வருகிறார்கள் அப்பொழுது அர்ஜுனனை பற்றிய உண்மையை கோதை கூறுகிறார். அதற்கு அர்ஜுன் திரு திரு என முழிக்கிறார். மேலும் நடேசன் அவர்களுக்கு தான் முதலில் டவுட்டு வந்தது அதன் பிறகு தான் எனக்கு டவுட் வந்தது என கோதை தன்னுடைய மகள் ராகினிடம் கூறிக் கொண்டிருக்க என்ன ஆதாரம் இருக்கிறது காட்டுங்கள் என அர்ஜுன் கேட்கிறார்.
உடனே ஆடியோவை போட்டு காட்டுகிறார் வசு அப்பொழுது அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள் அது மட்டும் இல்லாமல் ராகினி என்ன அர்ஜுன் நீங்க பதவி மேல ஆசையே இல்லைன்னு சொன்னீங்க இப்ப என்னடானா எனக்கு பதவி கிடைக்கணும்னா எதுவானாலும் செய்வேன்னு பேசி இருக்கீங்க இது உங்களோட வாய்ஸ் தான என பேசிக் கொண்டிருக்க அர்ஜுன் எப்படி இந்த ஆடியோ கிடைத்தது என கேட்க உங்க போனில் இருந்து தான் எடுத்தேன் என வசு கூறுகிறார்.
ஒருத்தவங்க பர்மிஷன் இல்லாம எப்படி போனை எடுக்கலாம் என அர்ஜுன் கேட்க உடனே வசு திருட்டு தனம் செய்கிறவங்க போனை திருட்டுத்தனமாக தான் எடுத்து ஆதாரத்தை திரட்டனும் என பதிலடி கொடுக்கிறார் இந்த நிலையில் அர்ஜுன் மீது அனைவரும் கேள்வி கேட்க உடனே அர்ஜுன் இதில் எந்த ஒரு தப்பும் இல்லை நீங்கதான் சொன்னீங்க பதவிக்காக யாரும் எதுவானாலும் செய்யலாம் என சொல்லி பேசிக்கொண்டிருக்க உடனே அர்ஜுன் கல்யாண நாளுக்குள்ள உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் தரேன் என மற்றவர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கிறார். அதேபோல் கோதையும் உங்க கல்யாணத்துக்குள்ள ஆதாரத்தை நிரூபிக்கிறேன் என சபதம் போடுகிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.