Thamizhum saraswathiyum : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோட்டில் கோதை நடேசன் இருவரும் சாப்பிடுவதற்கு வருகிறார்கள் அப்பொழுது நடேசன் அவர்களிடம் கார்த்தி போன காரியம் என்ன ஆச்சு என கேட்க ஜஸ்ட் மிஸ் அந்த ரவுடி அடிபட்டு விழுந்துட்டான் மயக்கத்துல இருக்கான் வாயைத் திறந்த சொன்னா எல்லாருக்கும் உண்மை தெரிய வந்துரும் என கூறுகிறார்.
அந்த சமயத்தில் அர்ஜுன் குடும்பம் சாப்பாடு ரெடி செய்து எடுத்துக் கொண்டு வருகிறார்கள். உடனே கார்த்தி அது யாரு நமக்கு என்ன பண்றாங்க என கேட்க நம்ம கம்பெனியில ரொம்ப நாளா தப்பு பண்ணிட்டு இருக்கான் அவன் இப்பதான் கையும் காலமும் மாட்டி இருக்கான் அவன் வாயை திறந்து சொன்னா எல்லாருக்கும் விடிவு காலம் வந்து விடும் எனக் கோதையும் கூறுகிறார்.
இந்த சமயத்தில் சாப்பிட உட்காரும்போது சாப்பாடு எடுத்து வைங்க ஏன் மாச மாசன்னு நிக்கிறீங்க என பேச அர்ஜுன் குடும்பம் பதட்டத்தில் இருக்கிறது. அதேபோல் அர்ஜுனையும் மாப்பிள்ளை வாங்க சாப்பிடலாம் என கோதை நக்கலாக கூப்பிடுகிறார். இது எதுவுமே புரியாமல் ராகினி நீங்க ஏன் இப்ப நக்கலா பேசுற மாதிரி அர்ஜுன பத்தி பேசுறீங்க என கேட்க நாங்க அப்படியெல்லாம் பேசலையே நார்மலா தான பேசுரோம் என நடேசன் கூறுகிறார்.
பிறகு கோதை ரொம்ப நாளா எல்லா தப்பையும் செஞ்சிட்டு ஆட்டுத்தொலை போத்திகிட்டு நம்ம கம்பெனிக்கு உள்ளே இருக்கான் அவன் பேச்சை கேட்டுகிட்டு நமக்கு முக்கியமான நபரையே நாம சந்தேகப்பட்டுட்டோம் அது நம்ப தப்பு தான் ஆனா இனியும் பொறுமையா இருக்க முடியாது ஏதாவது ஒன்னு செஞ்சு ஆக வேண்டும் அவன் கண்ண முழிச்சா எல்லாத்துக்கும் விடிவு காலம் வரும் என பேசிக்கொண்டு இருக்கிறார்கள் ஆனால் அர்ஜுன் முகத்தில் பயம் தெரிகிறது.
மற்றொரு பக்கம் எல்லா விஷயத்தையும் நடேசன் நமச்சி அவர்களிடம் கூறிக் கொண்டிருக்க தமிழ் இதெல்லாம் நமக்கு தேவையில்லாத வேலை நம்ப வேலையை மட்டும் பார்க்கலாம் பெத்த பிள்ளையவே அவங்க சந்தேகப்பட்டாங்க எவனோ ஒருத்தன் கூறுனான்னு என்னையவே சந்தேகப்பட்டு அடிச்சாங்க அதனால இனிமே அந்த குடும்பத்துக்கும் இந்த குடும்பத்துக்கும் எந்த ஓட்டும் உறவும் கிடையாது ஜென்மத்துக்கும் அங்க போக முடியாது என திட்டவட்டமாக தமிழ் கூறுகிறார்.
மற்றொரு பக்கம் அர்ஜுனுக்கு தூக்கம் வராமல் பயத்தில் யோசித்துக் கொண்டிருக்கிறார் எப்படியாவது இதிலிருந்து வெளிவர வேண்டும் என பக்காவாக பிளான் போட்டுக் கொண்டிருக்கிறார் இந்த சமயத்தில் ராகினி கூப்பிட்டும் தூக்கம் வரவில்லை நீ போய் தூங்கு என கூறுகிறார் அதே சமயத்தில் கோதை மற்றும் நடேசன் இருவரும் இனிமேல் மாப்பிள்ளைக்கு தூக்கம் வராது இங்க சின்ன ரூமா இருக்கு ஏசி ஓடல கம்பி வச்ச ரூம் தான் நல்லா தூக்கம் வரும் என ஜெயிலுக்கு போவதை பற்றி சாடமாடையாக பேசுகிறார் நடேசன்.
கோதையும் எல்லாம் விடிஞ்ச உடனே ஒரு முடிவுக்கு வந்துருவாங்க நீயும் ஒரு முடிவுக்கு வருவார் என பேசிவிட்டு செல்கிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.