எனக்கு ஏன் மூத்த பிள்ளை தான் முக்கியம் நடேசன் ஒரே போடு.! போட்டிப் படிக்கையுடன் வீட்டை விட்டு கிளம்பியா ராகினி.!

Thamizhum saraswathiyum august 2 episode
Thamizhum saraswathiyum august 2 episode

Thamizhum saraswathiyum : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில், கோதை நடேசன் அவர்களுக்கு அறுபதாவது கல்யாணம் கோவிலில் கோலாகலமாக நடைபெற இருக்கிறது இந்த அறுபதாவது கல்யாணத்தில் தமிழ் மற்றும் சரஸ்வதி கலந்து கொள்ள இருக்கிறார்கள் அதனால் அவர்களை எதிர்பார்த்து நடேசன் மற்றும் வசு இருவரும் கோவிலுக்கு வாசலிலேயே பார்க்கிறார்கள். சிறிது நேரம் கழி தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் கோவிலுக்கு வருகிறார்கள்.

அவர்கள் வருவதை ராகினி பார்த்து விடுகிறார் அதுமட்டுமில்லாமல் உங்களுக்கு வெட்கமானம் சூடு சொரணை இல்லையா உங்களை தான் அழைக்கவே இல்லையே எதுக்கு இங்க வந்தீங்க என வாய்க்கு வந்தபடி பேச தமிழ் உடனே வா இங்கிருந்து போயிடலாம் என சரஸ்வதி இடம் கேட்கிறார் ஆனால் அந்த சமயத்தில் வசு மற்றும் நடேசன் இருவரும் அருகில் வந்து கோவிலில் ஆயிரம் பேர் வர தான் செய்வாங்க அதெல்லாம் நாம கேக்குறதுக்கு ரைட்ஸ் கிடையாது என கூறுகிறார்கள்.

உடனே அர்ஜுனை மாப்பிள ராகிணியை கூட்டிட்டு போங்க என நடேசன் கூறுகிறார். அறுபதாவது கல்யாணம் நடப்பதை தூரத்திலிருந்து தமிழ் மற்றும் சரஸ்வதி பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் தமிழ் சரஸ்வதி இருவரும் வந்ததால் கோதை மிகவும் சந்தோஷப்படுகிறார். நடேசன் அவர்களை பார்த்து கோதை கேட்க நான் தான் வர சொன்னேன் நம்முடைய அருவாதாவது கல்யாணம் நல்லபடியா முடியணும் நம்முடைய நல்லதுல்ல அவங்களும் கலந்துக்கணும் அதனால் தான் வர சொன்னேன் எனக் கூறுகிறார்.

தண்ணி ஊற்றுவதற்கு முதன் முதலில் கார்த்தியை கூப்பிடுகிறார்கள். பிறகு ஒவ்வொருவராக தண்ணீர் ஊற்றிக் கொண்டிருக்கிறார்கள் அந்த சமயத்தில் ராகினி மற்றும் அர்ஜுன் மாப்பிள்ளை இருவரும் தண்ணீர் ஊற்றிய பிறகு ராகினிக்கு தலை சுற்றுகிறது உடனே ராகினியாயை  ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் செல்லும்படி அனைவரும் கூறுகிறார்கள். இதுதான் சமயம் என தமிழை தலைக்கு தண்ணீர் ஊற்ற அழைக்கிறார்கள். ஆனால் கார்த்தி தடுக்கிறார் அதையும் நடேசன் சமாளிக்கிறார் தமிழும் தயங்கிக் கொண்டே தலையில் தண்ணீர் ஊற்றுகிறார். அடுத்த காட்சியில் ராகினி ஹாஸ்பிடலில் இருந்து வந்து விடுகிறார், நடேசன் கோதைக்கு தாலி கட்டிய பிறகு ஒவ்வொருவராக ஆசீர்வாதம் செய்து கொண்டிருக்கிறார் அப்பொழுது தமிழை கூப்பிட ராகினி முடியாது என மறுக்கிறார்.

ஆனால் நடேசன் என் மூத்த பிள்ளை எனக்கு முக்கியம் என்பது போல் பேச உடனே ராகினி கோபித்துக் கொண்டு வீட்டிற்கு செல்கிறார் அர்ஜுனும் செல்கிறார் வீட்டிற்கு சென்ற ராகினி பெட்டி படிக்க எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே செல்ல முடிவெடுத்து அர்ஜுனை இழுத்துக் கொண்டு போகிறார். ஆனால் அர்ஜுன் குடும்பம் சொத்தை ஆட்டையை போட முடியாது என நினைத்து அதிர்ச்சியில் இருக்கிறார்கள் அதுமட்டுமில்லாமல் ராகிணியை பிரைன் வாஷ் பண்ணி இங்கேயே இருக்கும் படி பேசிக் கொண்டிருக்கிறார்கள் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.