Thamizhum saraswathiyum : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் தமிழ் மற்றும் சரஸ்வதி நமச்சி மூவரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது அர்ஜுன் கொஞ்சம் கொஞ்சமா வளர்ந்துக்கிட்டு வருகிறோம் என பேசிக் கொண்டிருக்க இந்த வளர்ச்சிக்கு கடவுள் தான் காரணம் எனக் சரஸ்வதி கூற ஆனால் தமிழ் இதுல நம்ம உழைப்பு அதிகமா இருக்கு என பேசிக் கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது சரஸ்வதி இப்ப எதுக்கு ராகினிக்கு வீட்டை எழுதி கொடுத்தாங்க அந்த அர்ஜுன் சும்மாவே இருக்க மாட்டான் என சரஸ்வதி கூற.
அதற்கு தமிழ் அவங்களை பத்தி நாம என்ன பேசுறதுக்கு இருக்கு நம்ம வேலையை பார்க்கலாம் நம இனி வேலையில ஒழுங்கா போக்கஸ் பண்ணனும் அப்பதான் மேல மேல வளர முடியும் என பேசிக்கொண்டு இருக்க சரஸ்வதி அது கரெக்ட்தான் ஆனா குடும்பத்தை பற்றி நினைக்காம இருக்க முடியாது என பேசுகிறார் சரஸ்வதி. சிறிது நேரத்தில் நடேசன் வருகிறார் அது மட்டும் இல்லாமல் புதிய கம்பெனி வாங்கியதற்கு வாழ்த்து தெரிவிக்கிறார் அதற்கு தமிழ் நீங்க வாங்க வேண்டிய கம்பெனியை நான் வாங்கி விட்டேன் என வருத்தம் இருக்கிறதா என கேட்க அதெல்லாம் கிடையாது சந்தோஷம்தான் எனக் பேசுகிறார் நடேசன்.
பிறகு தமிழுக்கு போன் வர நடேசன் சரஸ்வதி மற்றும் நமச்சி மூவரும் பேசுகிறார்கள் அப்பொழுது தேவையில்லாமல் வீட்டை இப்பவே எழுதி கொடுத்துட்டீங்க அந்த அர்ஜுனனை சும்மா இருக்க மாட்டான் என பேச நாளைக்கு அந்த வீடியோ வந்துரும் இல்ல அந்த வீடியோ வந்தா தான் எல்லார்கிட்டயும் நிரூபிக்க முடியும் என பேசுகிறார்கள். மற்றொரு பக்கம் அர்ஜுன் மற்றும் அவரின் மாப்பிள்ளை ஹார்ட் டிஸ்கை அந்த பில்டிங்கிலிருந்து வாங்கி வந்ததை அர்ஜுனிடம் கூறுகிறார் அப்பொழுது அதில் உள்ள வீடியோவை ரெக்கவரி பண்ணி விடுவார்கள் அதற்குள் எப்படியாவது நிறுத்த வேண்டும் என பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
உடனே அர்ஜுன் 5 லட்சம் பணம் தருகிறேன் அந்த வீடியோவை டெலிட் செய்து விடு என தன்னுடைய மாப்பிள்ளையிடம் கூறி நமச்சியின் நண்பன் அவர்களிடம் பேச சொல்கிறார் ஆனால் நமச்சி நீண்ட கால நண்பன் அதனால் கண்டிப்பாக டெலிட் செய்ய மாட்டேன் வேற யார்கிட்டயாவது இதெல்லாம் வைத்துக்கொள் என பேசுகிறார். பிறகு அர்ஜுன் மாப்பிள்ளை இருவரும் தனியாக பிளான் செய்கிறார்கள் மற்றொரு பக்கம் அடுத்த நாள் காலையில் நமச்சியின் நண்பன் ஹார்ட் டிஸ்கை எடுத்து வந்து கொடுக்கிறார் ஆனால் அதில் உள்ள வீடியோ டெலிட் ஆகிவிட்டதாகவும் அதனை ரெக்கவரி பண்ண முடியவில்லை எனவும் கூறுகிறார்.
இதனால் சரஸ்வதி நமச்சி இருவரும் அதிர்ச்சி அடைகிறார்கள் நமச்சியின் நண்பன் வெளியே வந்த பிறகு அர்ஜுன் அவரிடம் 10 லட்சம் பணத்தை கொடுக்கிறார். இந்த 10 லட்சம் ஏது என அர்ஜுனனின் மாப்பிள்ளை கேட்க ஸ்கிராப் வித்து விட்டேன் என அர்ஜுன் கூற மாட்டிக்கொள்ள போகிறாயா என பேசிக் கொண்டிருக்கிறார்கள். மற்றொரு பக்கம் ராகினிக்கு விழுந்து விழுந்து அர்ஜுன் குடும்பம் கவனித்துக் கொண்டிருக்கிறது இதனை பார்த்த வசு எல்லாம் பணத்திற்காக எப்படி நடிக்கிறார்கள் என கார்த்தி இடம் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
உடனே வாசு ராகினியை பார்த்து எப்ப கெளம்ப போறா பேக் பண்ண ஆள்வேனுமா என வசு கேட்க நான் இங்கேயேவா இருக்க போறேன் நான் கிளம்பிடுவேன் என பேசுகிறார்கள் மற்றொரு பக்கம் எதுக்கு இப்ப சண்டை போடுற நாங்க ஜோசியக்காரங்களை பார்க்க போறோம் அப்படியே நல்ல தேதியை பார்த்துட்டு வரும் என கோதை கூற அதற்கும் ராகினி சண்டை போடுகிறார் ஜோசியக்காரரை பார்க்க போன கோதை மற்றும் நடேசனுக்கு அதிர்ச்சி காத்துக் கொண்டிருக்கிறது ஏனென்றால் வீட்டில் பாம்பை வளர்க்கிறீர்கள் என ஜோசியக்காரர் கூறுகிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது,.