Thamizhum Saraswathiyum : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோட்டில் அர்ஜுனனை சிக்க வைக்க கோதை மற்றும் நடேசன் திட்டம் தீட்டியது அர்ஜுனுக்கு தெரிய வர சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது கோதை மற்றும் நடேசனை அர்ஜுன் சாடமாடியாக பேசுகிறார் அது மட்டும் இல்லாமல் என்னை சிக்க வைக்க திட்டம் போட்டது இரண்டு ஓல்ட் நபர்கள் அத்தை மாமா வயசு இருக்கும் என அர்ஜுன் பேசுகிறார்.
அது மட்டும் இல்லாமல் அவங்களுடைய பெயர் எனக்கூறி கோதை மற்றும் நடேசன் இருவரையும் பயமுறுத்துகிறார் இப்படியே பேசிக் கொண்டிருக்க கோதை சாப்பாடு போதும் என எழுந்து ரூமுக்கு செல்கிறார் அவர் பின்னாடியே நடேசன் அவர்களும் செல்கிறார். இருவரும் இந்த அர்ஜுன் மீது எனக்கு சந்தேகம் உறுதியாகிவிட்டது அவன் எப்படி பேசுகிறான் என்று பார்த்தீர்களா நம்ம ராகினி தான் பாவம் என பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் இனி நாம ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் எனவும் கூறுகிறார்கள்.
அடுத்த காட்சியில் ராகினி அர்ஜுன் இருவரும் ஒரே ரூமில் இருக்க அப்பொழுது ராகினி உங்கள அம்மா கிண்டல் பன்றதும் நீங்க அவங்கள ஒரு மாதிரியா பேசுறதும் ரொம்ப கஷ்டமா இருக்கு நாம இங்க இருக்கக் கூடாது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு என பேசிக் கொண்டிருக்க அப்பொழுது அர்ஜுன் நான் எந்த முடிவு எடுத்தாலும் எனக்கு உறுதுணையாக இருப்பதான என கேட்க அதற்கு நீங்க என்ன முடிவு எடுத்தாலும் அதற்கு நான் உறுதுணையாக இருப்பேன் என கூறுகிறார்.
அது மட்டும் இல்லாமல் என்ன முழுசா நம்புறியா ராகினி என கேட்க என்ன அர்ஜுன் இப்படி சொல்லிட்ட நான் உன்னை நம்பாத யாரு நம்புறது அப்பா கூட என்னை நம்ப மாட்டேங்கிறாங்க நான் உன்னை மட்டும்தான் நம்புகிறேன் என பேசிக்கொண்டு இருக்கிறார். அடுத்த காட்சியில் சரஸ்வதி மற்றும் தமிழ் இருவரும் மன்னிப்பு கேட்டுக் கொண்டிருக்க அந்த சமயத்தில் நடேசன் வருகிறார் நமச்சி அவர்களும் வந்து விடுகிறார். தமிழ் நான் ஆபீசுக்கு கிளம்புறேன் நீ டெலிவரி ஒழுங்கா பாத்துக்கோ என கூறிவிட்டு தமிழ் கிளம்பி விடுகிறார்.
நடேசன் அவர்களும் வந்து அர்ஜுன் எப்படி நடந்து கொள்கிறான் என்பதை சரஸ்வதி இடம் கூற இதனை கண்டுபிடிக்க அந்த வீடியோ தான் நமக்கு ஒரே ஆதாரம் அதனால வீடியோ எப்படியாவது வேணும் என பேசிக்கொண்டு இருக்க மறுபடியும் அந்த வீடியோவை நம்ம கேட்கலாம் அதை எப்படியாவது ஹார்ட் டிஸ்கில் இருந்து ரெக்கவரி பண்ணலாம் என பேசிக் கொண்டிருக்கிறார்கள். உடனே மூவரும் கிளம்பி சம்பவம் நடந்த ஹோட்டலுக்கு செல்கிறார்கள்.
அங்கு சென்று ஹார்ட் டிஸ்கை கேட்க அதற்கு அதை நீங்க அப்பவே வாங்கிட்டு போனீங்க வீடியோ கிடைக்கலையா என கேட்க அந்த வீடியோவில் ரெண்டு மூணு நாட்கள் வீடியோ மட்டும் டெலிட் ஆகி இருக்கு அதுக்கு வாய்ப்பே இல்லை என அந்த ஹோட்டல் மேனேஜர் கூறுகிறார் அது மட்டும் இல்லாமல் மறுபடியும் நான் வீடியோ கேட்க வந்தேன். ஆனால் அந்த வீடியோவே இல்லன்னு உங்க மேனேஜர் சொல்லிட்டாரு என பேசிக்கொண்டு இருக்க அவன் ஒரு திருட்டு பையன், ஃபிராடு, நிறைய ஃபிராடு பண்ணிட்டான் அதனால அவனை வேலையை விட்டு தூக்கிட்டோம். என்று ஹோட்டல் மேனேஜர் கூறிக் கொண்டிருக்கிறார்.
பிறகு ஹார்ட் டிஸ்கை எடுத்துக் கொண்டு வந்து கொடுக்கிறார் அந்த ஹார்ட் டிஸ்கை வாங்கி நமச்சி தன்னுடைய நண்பன் அவரிடம் கொடுத்து எப்படியாவது இந்த வீடியோவை ரெக்கவரி பண்ண வேண்டும் என கூறுகிறார். அவரும் நான் கண்டிப்பாக இதை ரெடி பண்ணி கொடுக்கிறேன் என கூறிவிட்டு செல்கிறார்கள் வீட்டிற்கு போகும் வழியில் அர்ஜுன், சரஸ்வதி மற்றும் நமச்சி இருவரையும் வழி மறைக்கிறார்.
அப்பொழுது அர்ஜுன் நீங்க என்ன பிளான் போட்டாலும் தோத்துகிட்டு மொக்க வாங்குறீங்க இனியாவது பிளான ஒழுங்கா போடுங்க என பேசிக்கொண்டு இருக்க உடனே சரஸ்வதி ஒரிஜினல் முகத்தை படம் போட்டு ஒரு நாள் காட்டுவேன் அன்னைக்கு உன் முகத்தை எங்கே கொண்டு வச்சுப்ப ஜெயிலுக்கு போக ரெடியாயிரு என சவால் விடுகிறார் சரஸ்வதி இத்துடன் இன்றைய எபிசோட் முடிகிறது.