Thamizhum saraswathiyum : தமிழும் சரஸ்வதியும் முந்தைய எபிசோடில் நடேசன் மற்றும் கோதை அர்ஜுனை சிக்க வைப்பதற்காக நமச்சியை வைத்து ஆடுபுலி ஆட்டம் விளையாட பார்த்தார்கள் ஆனால் அதில் வசமாக சிக்கிக் கொண்டது நடேசன், கோதை, நமச்சிதான். இதனால் இது என்னுடைய ஆட்டம் என அர்ஜுன் வாய்க்கு வந்தபடி பேசுகிறார்.
வீட்டிற்கு வந்த அர்ஜுன் சாப்பிட உட்கார்ந்து கொண்டிருக்கும் பொழுது தன்னை மாட்டி விட்டவரை ராகினிடம் கூறிக் கொண்டிருக்கிறார் அது மட்டும் இல்லாமல் இந்த வேலையை தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் சேர்ந்துதான் செய்திருப்பார்கள் என ராகினி கூற அதற்கு அர்ஜுன் என்னதான் என் மேல கோவமா இருந்தாலும் இந்த மாதிரி சில்லறை வேலை எல்லாம் அவர் செய்ய மாட்டாரு இதுக்கு பின்னாடி வேற யாரோ இருக்காங்க என கூறுகிறார்.
சிறிது நேரத்தில் ஏதோ ரெண்டு பேரு வயசான ஆளுங்க இதுக்கு பின்னாடி இருப்பதாக என்னுடைய நண்பன் கூறினார் என அர்ஜுன் கூற நடேசன் மற்றும் கோதைக்கு பதற்றம் அதிகமாகிறது இந்த சமயத்தில் உங்களுக்கு ஏன் இப்படி வேர்க்குது பேனா வேணா அதிகமா வைக்க சொல்லட்டுமா என நக்கலாக பேசுகிறார். இப்படியே பேசிக் கொண்டிருக்க நடேசன் அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே பொறை ஏறுகிறது.
இந்த நிலையில் தற்பொழுது ஒரு புதிய புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது இந்த ப்ரோமோ வீடியோவில் ராகினி கோதை மற்றும் நடேசன் அவர்களிடம் சண்டை போட்டு அர்ஜுனை நீங்க நடத்துற விதமே எனக்கு பிடிக்கல மரியாதையே கொடுக்கவில்லை என கூறிக் கொண்டிருக்க உடனே ராகினி அண்ணா நகரில் நமக்கு சொந்தமான ஒரு வீடு இருக்குல்ல அதை என் பேர்ல எழுதி வையுங்க என கூறுகிறார்.
இதையெல்லாம் ராகினியிடம் பின்னாடி இருந்து அர்ஜுன்தான் தூண்டி கொண்டிருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும் ஆனாலும் ராகினி குழந்தை நல்லபடியாக பிறக்க வேண்டும் என்பதற்காக கோதையும் அதுதானே நான் எழுதி தரேன் என ரிஜிஸ்டர் ஆபீஸ் செல்கிறார்கள்.
அங்கு தமிழ் புதிய கம்பெனியை எழுதுவதற்காக வந்துள்ளார் அப்பொழுது வீட்டை எழுதிக் கொடுக்க கோதை மற்றும் நடேசன் வந்துள்ளார்கள். கோதை வீட்டை எழுதிக் கொடுப்பதை சரஸ்வதி பார்க்கிறார் அப்பொழுது சரஸ்வதிக்கு கோபம் வருகிறது அர்ஜுன் எப்படியாவது எழுதி வாங்கி விட்டோம் என சந்தோஷத்தில் இருக்கிறார்.
அடுத்த காட்சியில் புதிய கம்பெனியை எழுதி வாங்க சரஸ்வதி கோதை மற்றும் நடேசன் அவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டு எழுதி வாங்குகிறார் இத்துடன் இந்த ப்ரோமோ வீடியோ முடிகிறது.