அர்ஜுன் விரித்த வலையில் வசமாக மாட்டிக் கொண்ட கோதை நடேசன்.! மாப்பிள வில்லாதி வில்லன்னு தெரியாது போல.! தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோட்.

thamizhum-saraswathiyum-august-10-
thamizhum-saraswathiyum-august-10-

தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் அர்ஜுன் செய்த தவறை அர்ஜுன் வாயாலயே சொல்ல வேண்டும் என எண்ணி அர்ஜுனை சிக்க வைக்க கோதை திட்டம் போடுகிறார் அதற்கு நமச்சி உடந்தையாக இருக்கிறார். நமச்சி போன் செய்து நீ உன்னையே கத்தியால குத்திக் கொண்டதை வீடியோ எடுத்துள்ளேன் இந்த வீடியோ வேண்டுமென்றால் எனக்கு பணம் வேண்டும் நான் சொல்லும் இடத்திற்கு வரவேண்டும் என கூறுகிறார் இதனால் அர்ஜுன் பதற்றத்தில் இருக்கிறார்.

அடுத்த காட்சியில் அர்ஜுன் மற்றும் அர்ஜுனின் மாமா இருவரும் இணைந்து திட்டம் போடுகிறார்கள். இது யாரா இருக்கும் என கண்டுபிடிக்க வேண்டும் என முடிவெடுத்து அர்ஜுன் அவர்கள் வரும் சொல்லும் இடத்திற்கு செல்கிறார் அந்த சமயத்தில் அர்ஜுனின் நண்பன் வருகிறார் அப்பொழுது இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள் இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் பொழுது கோதை மற்றும் நடேசன் இருவரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் உடனே இருவரும் காரில் இருந்து இறங்கி அர்ஜுனிடம் செல்கிறார்கள்.

அர்ஜுன் அவர்களிடம் சென்று எதற்கு மாப்பிள்ளை பதட்டமாக இருக்கிறீர்கள் பயமாக இருக்கிறீர்கள் ஏதோ பணம் என்று பேசிக் கொண்டிருக்கிறீர்களே என்ன விஷயம் என கேட்க அதெல்லாம் ஒன்னும் இல்ல கொஞ்ச நேரம் இருங்க எனக் கூறிவிட்டு சிறிது நேரத்தில் ஆட்டோ வருகிறது ஆட்டோவில் இருந்து அர்ஜுனின் மாப்பிள்ளை இறங்குகிறார் அதுமட்டுமில்லாமல் நமச்சியும் இறங்குகிறார்.

எனக்கு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது ஒரு போன் கால் வந்தது யாரோ மிரட்டுவது போல் போன் வந்தது அது யார் என்று கண்டுபிடிக்க வேண்டுமே எனக்கு தெரிந்த நண்பன் ஒருவன் போலீசில் இருப்பதால் அவரிடம் சொன்னேன் அவரும் எனக்கு உதவி செய்து யார் என்பதை கண்டுபிடிக்க உதவினார். அதன் பிறகு தான் தெரிகிறது இது போல் செய்தது நமச்சி என்று ஆனால் இவர் மட்டும் தனியாக செய்ய முடியாது இவர்களுக்கு பின்னாடி யாரோ இருக்கிறார்கள் என்பதை அர்ஜுன் கண்டுபிடித்து விடுகிறார்.

அது மட்டும் இல்லாமல் இவர்களுக்கு பின்னாடி கோதையும் நடேசன் தான் இருக்கிறார்கள் என்பதை திட்டவட்டமாக தெரிந்து கொள்கிறார். உடனே ஆர்ஜன் எந்த நேரத்தில் நீங்க ஏன் இங்கு வந்தீர்கள் என கேட்க அதற்கு நாங்க ஒரு முக்கியமான வேலையாக செல்கிறோம் அப்பொழுது உங்கள் காரை பார்த்து அதனால் தான் வந்தோம் என சமாளிக்கிறார்கள். நமச்சியை போலீசில் பிடித்துக் கொடுத்து விடலாம் என அர்ஜுன் கூற அதற்கு அவன் ஏதோ புத்திக்கட்டு செஞ்சுட்டான் விட்டு விடலாம் என கோதை கூறுகிறார்.

அடுத்த காட்சியில் சரஸ்வதி மற்றும் தமிழ் இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள் மற்றொரு பக்கம் அர்ஜுன் நடந்த அனைத்தையும் ராகினியிடம் கூறிக் கொண்டிருக்கிறார். நடேசன் மற்றும் கோதை  இருவரும் வர உட்கார்ந்து சாப்பிடுங்கள் என அர்ஜுன் கூறுகிறார். ரொம்ப வேர்க்குது போல ஃபேன் வேணா அதிகமா வைக்க சொல்லட்டுமா என  அர்ஜுன் இன்னும் திமிராக பேசுகிறார். ஏனென்றால் இவர்கள்தான் நமச்சி இடம் கூறி போன் பண்ண சொன்னது என அர்ஜுன் கண்டுபிடித்து விடுகிறார்.

கோதை மற்றும் நடேசன் இருவரையும் அர்ஜுன் பழிக்கு பழி வாங்கிக் கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.