தமிழிடம் போட்டி போட்டு மூக்கை உடைத்துக் கொண்ட அர்ஜுன்.! நடேசன் பேசுவதை ஒட்டு கேட்ட மாப்பிள்ளை குடும்பம்.

Thamizhum saraswathiyum august1
Thamizhum saraswathiyum august1

Thamizhum Saraswathiyum : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் சரஸ்வதி மெக்கானிக் செட்டில் வேலை செய்து கொண்டிருக்கிறார் அப்பொழுது அங்கு வேலை செய்யும் சிறுவன் கேபிளை மாற்ற முயற்சி செய்யும் பொழுது பார்த்து என சரஸ்வதி கூற நான் பார்த்துக் கொள்கிறேன் என கேபிளை புடுங்கி விடுகிறார். இதனால் பயந்த சரஸ்வதி அவங்க நமக்கு பணம் கொடுப்பது போக நாம அவங்களுக்கு பணம் கொடுக்கிற மாதிரி செஞ்சுராத என கூறுகிறார்.

அந்த சமயத்தில் தமிழ் வருகிறார் தன்னை பார்க்க உமாபதி சார் வந்தார் எனக் கூறுகிறார் அதுமட்டுமில்லாமல் இந்த இடத்தில் இருப்பதால் எவ்வளவு மரியாதை கிடைக்கிறது என இருவரும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது திடீரென தமிழ் நாம ஒரு கம்பெனிக்கு போய் பிரச்சனையை தீர்த்து வைத்தோம் அந்த கம்பெனி ஒரு யூனிட்டை விற்க போகிறார்கள் அதனை வாங்கலாம்னு தோணுது அதான் உன்கிட்ட ஐடியா கேட்க வந்தேன் என தமிழ் கூற அந்த சமயத்தில் பேங்கில் இருந்து ஒருவர் வருகிறார்.

அவர் சரஸ்வதி இடம் இன்னும் EMI கட்டவில்லை என சண்டை போடுகிறார் அது மட்டும் இல்லாமல் இதனை பார்த்த தமிழ் அதிர்ச்சி அடைகிறார். அந்த பேங்கில் இருந்து வந்தவர் பைக்கை எடுக்க முயற்சி செய்யும்பொழுது தமிழ் எதற்காக பைக்கை எடுக்கிறீர்கள் என கேள்வி எழுப்புகிறார் அப்பொழுது EMI கட்டவில்லை என பேங்காரர் கூறும் பொழுது என்ன சரஸ்வதி இதெல்லாம் என தமிழ் கேட்கிறார் அதற்கு சரஸ்வதி செலவாயிடுச்சு கண்டிப்பா இன்னும் ரெண்டு மூணு நாள்ல கட்டிடுவேன் என கூறுகிறார்.

அதெல்லாம் வேண்டாம் நானே கட்டிவிடுறேன் என தமிழ் கட்ட முயற்சி செய்யும்பொழுது இந்த பைக் நான் வாங்கி கொடுத்ததாய் இருக்கட்டும் அதனால் நானே கட்டிக் கொள்கிறேன் என சரஸ்வதி கூறுகிறார். பிறகு அந்த கம்பெனியை வாங்குங்கள் உங்களுடைய திறமை மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது நாமும் கோதை இண்டஸ்ட்ரீஸ் மாதிரி பெரிய கம்பெனியாக வளர்ந்து விடலாம் என கூறுகிறார்.

அடுத்த காட்சியில் தமிழ் அந்த கம்பெனியை வாங்குவது அர்ஜுனுக்கு தெரிய வர உடனே கார்த்தியை கூப்பிட்டு அந்த கம்பெனியை நாம வாங்க வேண்டும் அதனால் அத்தையிடம் நீயே பேசு என கூறுகிறார் இதனால் கார்த்தி கோதையிடம் சென்று அந்த கம்பெனியை நாம வாங்கிட்டோம்னா நம்ம கம்பெனி தான் இன்டஸ்ட்ரியல் பெரிய கம்பெனியாக இருக்கும் என கூற உடனே கார்த்தி மற்றும் அர்ஜுன் இருவரும் அந்த கம்பெனிக்கு போய் டீல் பேசுகிறார்கள்.

அது மட்டும் இல்லாமல் 4 கோடி ரூபாய் என பட்ஜெட் சொன்னவுடன் இந்த வாரத்திலேயே ரிஜிஸ்டர் வைத்துக் கொள்ளலாம் என பேசி விடுகிறார்கள். இவர்கள் கிளம்பியதும் தமிழ் அந்த முதலாளியிடம் கம்பெனி விற்பதை பற்றி பேசும்பொழுது நான் இப்பொழுதுதான் கோதை இன்டஸ்ட்ரியல் பேசினேன் என கூற தமிழ் அட்வான்ஸ் வாங்கிட்டீங்களா என கேட்கிறார் இல்லை எனக் கூற உடனே இந்த சிறிய அமௌன்ட் அட்வான்ஸ் ஆக வைத்துக் கொள்ளுங்கள் என பேசுகிறார் உடனே அந்த முதலாளி உங்களுக்கு தான் கண்டிப்பாக இந்த கம்பெனி என பேசுகிறார்.

அடுத்த காட்சியில் நடேசன் கோவிலுக்கு சரஸ்வதி மற்றும் தமிழையும் கண்டிப்பாக வரவேண்டும் என கூப்பிடுகிறார், இதனை அர்ஜுனனின் அக்கா ஓட்டு கேட்டு விடுகிறார் உடனே அர்ஜுனிடம் சென்று இதனைக் கூற அவர்கள் அங்கு வைத்து அவமானப்படுத்துகிறேன் என திட்டம் போடுகிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.