Thamizhum saraswathiyum : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் நடேசன் மற்றும் கோதை இருவரும் ஜோசியக்காரரிடம் வந்துள்ளார்கள் அவர் பாம்புக்கு பால் கொடுத்து வளர்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என அர்ஜுனனை பற்றிய அனைத்து உண்மைகளையும் புட்டு புட்டு வைக்கிறார். அது மட்டும் இல்லாமல் ராகினியின் திருமண நாள் வருவதற்கு முன்பே நீங்கள் அனைத்தையும் நிரூபிக்க வேண்டும் அப்படி இல்லை என்றால் உங்கள் வீட்டில் பெரிய அசம்பாவிதம் நடக்கும் அதனை தடுக்க முடியாது என கூறுகிறார்.
இதனால் நடேசன் மற்றும் கோதை பயத்தில் நடுநடுங்கி இருக்கிறார்கள். அடுத்த காட்சியில் தமிழ் மற்றும் சரஸ்வதி புதிய கம்பெனி வாங்குவதற்காக சென்றுள்ளார்கள் அவர்களிடம் பேசிவிட்டு கம்பெனி டாக்குமெண்டை வாங்கி விட்டு வருகிறார்கள்.
இந்த சமயத்தில் அர்ஜுனை குத்திய ரவுடி சென்னை வந்துள்ளார் அர்ஜுனிடம் பணத்தைக் கேட்டு மிரட்டுகிறார். பணத்தை கொடுக்க அர்ஜுன் செல்கிறார் பணத்தை கொடுத்துவிட்டு உடனடியாக சென்னையை விட்டு கிளம்பு எனக் கூறுகிறார். ஆனால் அந்த ரவுடி எனக்கு செட்டப் இருக்கிறது அதை பார்த்துவிட்டு தான் செல்வேன் என போகிறார் அப்பொழுது போலீஸ் அவரை கண்டுபிடித்து பின் தொடர்கிறது.
அதே போல் நடேசன் இடம் போலீஸ் அந்த ரவுடி இங்கே வந்துள்ளதை கூறியவுடன் நடேசன் மற்றும் கோதை இருவரும் கிளம்புகிறார்கள். அது மட்டும் இல்லாமல் உண்மையை நிரூபிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது உனக்கு கூடிய சீக்கிரம் தெரியும் என ராகினியிடம் பொடி வைத்து பேசிவிட்டு கிளம்புகிறார்கள்.
ஆனால் அந்த ரவுடி திடீர்னு எஸ்கேப் ஆகி ஓடுகிறார் அர்ஜுனும் அந்த ரவுடி எப்படியும் மாட்டக்கூடாது என்பதற்காக ரவுடி இருக்கும் இடத்திற்கு வருகிறார். ஆனால் அந்த ரவுடி எதிர்பாராத விதமாக ஆக்சிடென்ட் ஆகி கீழே விழுகிறார் அவரை ஹாஸ்பிடலுக்கு அழைத்து செல்கிறார்கள் ஆனாலும் அர்ஜுன் அவர் பின்னாடியே சென்று ரவுடிக்கு என்ன ஆனது என தெரிந்து கொள்ள வருகிறார்.
ரவுடி மயக்கத்தில் இருப்பதை தெரிந்து சந்தோஷத்தில் அர்ஜுன் கிளம்பி விடுகிறார், ஆனால் டாக்டர் 15 மணி நேரம் கழித்து நினைவு வந்துவிடும் அதன் பிறகு தான் விசாரிக்க முடியும் என கூறுகிறார். வேறு வழியில்லாமல் கோதை நடேசன் இருவரும் வீட்டிற்கு கிளம்புகிறார்கள் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது அர்ஜுன் மாட்டுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.