Thamizhum Saraswathiyum : தமிழும் சரஸ்வதியும் சமீபத்தை எபிசோடில் குடோனில் கட்டி போட்டு இருந்த தமிழ் மற்றும் நமச்சி இருவரும் தப்பித்து போய் ஹாஸ்பிடலில் இருக்கும் மேகனாவை பார்த்து தனது பக்கம் இருக்கும் நியாயத்தை எடுத்து கூறுகிறார் இதனால் மேக்னா மனம் மாறுகிறது உடனே தன்னுடைய மாமா வந்ததும் தமிழ் இங்கே தான் வந்தார்கள் அவர்கள் என்னிடம் புரிய வைத்து விட்டார்கள்.
அவர்களை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வாருங்கள் என கூறிவிடுகிறார் இதனால் தமிழ் மற்றும் நமச்சியை அழைக்க மேக்னாவின் மாமா செல்கிறார் ஆனால் மேக்னாவின் மாமாவிற்கு மேகனா தமிழ் மீது ஆசைப்படுவதை தெரிந்து கொண்டு எப்படியாவது மொத்த சொத்தையும் ஆட்டை போட வேண்டும் என எண்ணி நமச்சியை வைத்து கேம் ஆட ஆரம்பிக்கிறார்கள்.
தமிழுக்கு திருமணம் ஆகிவிட்டது மறைப்பதற்காக மேகனாவின் மாமா களிவரதன் மற்றும் அவரின் மகன் இருவரும் திருமணம் ஆனவர்களுக்கு மேகனா ஹெல்ப் பண்ண மாட்டார் என கூறி விடுகிறார்கள் அதனால் நமச்சி எப்படியாவது நமக்கு இவர்களுடைய ஹெல்ப் வேணும் என திருமணத்தை மறைக்க முடிவு செய்து விடுகிறார்.
இந்த நிலையில் புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது இந்த ப்ரோமோ வீடியோவில் மேக்னா தமிழை நினைத்து விதவிதமான புடவையைக் கட்டி அசத்தி வருகிறார் அப்பொழுது வேலைக்கார அம்மா இன்று அந்த தம்பி வர்றது தெரிந்து கொண்டு மிகவும் சந்தோஷமாக இருக்கிறாயே என கேட்கிறார்.
தமிழ் வந்ததும் வணக்கம் வைக்கிறார் அதற்கு வாங்க சாப்பிடலாம் என உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டு இருக்கும் பொழுது உங்களை பத்தி சொல்லுங்க என கேட்கிறார் அதற்கு தமிழ் சொல்ல ஆரம்பிக்கிறார் அப்பொழுது ஜூஸை வேணும் என்று நமச்சி தட்டி விட்டு தமிழை சொல்லவிடாமல் செய்கிறார்.
5 வைல்ட் கார்டு என்ட்ரினா.. 2 எவிக்ஷன்.! எதிர்பாராததை எதிர்பாருங்கள் ஆண்டவர் அதிரடி
தமிழ் வாஷ் பண்ணுவதற்காக உள்ளே செல்லும் பொழுது நமச்சி இன்னும் தமிழுக்கு கல்யாணம் ஆகவில்லை சாதித்து விட்டு தான் கல்யாணம் பண்ணிப்பேன் என உறுதியாக இருக்கிறார் என கூறி விடுகிறார் இதனால் வீட்டில் உள்ள அனைவரும் இன்னும் திருமணம் ஆகவில்லை என எண்ணி சந்தோஷப்படுகிறார்கள் இத்துடன் இந்த ப்ரோமோ வீடியோ முடிகிறது.
இனிய மேகனா தமிழை காதலிக்க ஆரம்பித்து விடுவார் என தெரிகிறது வழக்கம் போல் விஜய் தொலைக்காட்சியில் ஏற்கனவே திருமணம் ஆனவர்களை காதலிப்பது தான் கதையாக எடுத்து வருகிறார்கள் அதை தான் தற்பொழுது தமிழும் சரஸ்வதி சீரியலிலும் தொடர்கிறார்கள்.