Thamizhum saraswathiyum Promo : தமிழும் சரஸ்வதியும் சீரியலில் சமீபத்திய எபிசோடில் தமிழ் அனைவரும் சிறிய வீட்டில் இருப்பதால் மிகவும் கஷ்டமாக இருக்கிறது என ஒரு புதிய வீட்டை பார்த்துள்ளார். அதற்கு அனைவரையும் கூப்பிட்டுக்கொண்டு போய் வீட்டை காண்பிக்கிறார்கள் வீடு அனைவருக்கும் பிடித்து போக பிறகு மீண்டும் பழைய வீட்டிற்கு வந்த அனைத்து திங்க்ஸ்களையும் எடுத்துக்கொண்டு செல்ல திட்டம் போடுகிறார்கள்.
வர வழியில் அர்ஜுன் வம்பு பண்ண அர்ஜுனிடம் இதுபோல் ஒரு புதிய வீட்டை நாங்கள் கண்டிப்பாக வாங்குவோம் என சபதம் போடுகிறார் சரஸ்வதி. அதற்கு கோதையும் அவரிடம் சபதம் போடுகிறார் அது மட்டும் இல்லாமல் என் கூடவே இருந்து நம்பிக்கை துரோகம் செஞ்ச கோழை டா நீ என அர்ஜுனை மோசமாக திட்டுகிறார் கோதை.
இப்படியே அனைவரும் மாறி மாறி அர்ஜுனனை திட்ட ஒரு காலகட்டத்தில் தமிழ் அர்ஜுன் முன்னாடி போக எங்க அடி விழுந்து விடுமோ என பின்னாடி செல்கிறார். அது மட்டும் இல்லாமல் அனைவரும் சந்தோஷமாக இருப்பதை நினைத்து அர்ஜுன் செம கடுப்பாகிறார் எப்படியாவது இவர்கள் சந்தோஷத்தை நிலை கொலைக்க வேண்டும் என அர்ஜுன் புதிய திட்டம் போடுகிறார்.
இந்த நிலையில் புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது அந்த ப்ரோமோ வீடியோவில் அர்ஜுன் ஆள் வைத்து ஒரு நபரை பைக்கில் சென்று கொண்டிருக்கும் தமிழ் மற்றும் சரஸ்வதியையும் இடித்து தள்ள வேண்டும் என கூறுகிறார்.
உடனே அந்த நம்பர் வண்டியில் சென்று கொண்டிருந்த சரஸ்வதி மற்றும் தமிழை இடித்து கீழே தள்ளுகிறார் இதனால் சரஸ்வதி மயக்கம் அடித்து விழுகிறார். அர்ஜுன் சரஸ்வதி வயிற்றில் இருக்கும் குழந்தையை கலைப்பதற்காகவே இதுபோல் நாற வேலையை செய்துள்ளார் இத்துடன் இந்த ப்ரோமோ வீடியோ முடிகிறது அது மட்டும் இல்லாமல் சரஸ்வதி மயக்கத்தில் இருந்து எழுந்திருப்பாரா குழந்தைக்கு என்ன ஆனது என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள்.