Thamizhum Saraswathiyum 10th to 14th July 2023 Promo : தமிழும் சரஸ்வதியும் முந்தைய எபிசோடில் வசு குழந்தைக்கு பெயர் சூட்டும் விழாவிற்கு சந்திரகலா இன்விடேஷன் அடித்துள்ளார். அந்த இன்விடேஷனில் தமிழ் மற்றும் சரஸ்வதி பெயரை போட்டுள்ளார் இதனால் குடும்பத்தில் பெரிய குழப்பம் ஏற்படுகிறது அது மட்டுமில்லாமல் அவர்கள் வந்தால் நாங்கள் இந்த வீட்டை விட்டு போகிறோம் என ராகினி பிரச்சனை செய்கிறார்.
அதனால் சந்திரகலா ஒரு முடிவுக்கு வந்து தன்னுடைய வீட்டில் பங்ஷனை வைத்துக் கொள்ளலாம் என கூறுகிறார். ஆனாலும் ராகினி அங்கும் தமிழ் வந்தால் நான் வரமாட்டேன் என பிடிவாதம் பிடிக்க கோதை வசுவோட ஆசை அவங்க வரதல உனக்கு என்ன பிரச்சனை வசுவோட குழந்தைக்கு பெயர் சூட்டு விழாவுக்கு அவங்க வந்தா உனக்கு என்ன என்பது போல் கோதை ராகினியிடம் சண்டை போடுகிறார்.
ஒருவழியாக அனைத்தையும் சமாளித்து பெயர் சூட்டும் விழாவை சிறப்பாக கொண்டாட திட்டமிட்டு அனைவரும் வந்து கொண்டிருக்கிறார்கள். அப்பொழுது சரஸ்வதி மற்றும் தமிழ் வரும்பொழுது சந்திரகலா வரவேற்கிறார் கோதையும் வாங்க என வரவேற்கிறார். இதனால் அர்ஜுன் குடும்பம் பயங்கர கடுப்பில் இருக்கிறது.
பிறகு தமிழ் சரஸ்வதி இருவரும் சாப்பிட உட்காரும் நேரத்தில் கோதையும் அவர்கள் அருகில் உட்காருகிறார் ஆனால் தமிழை பார்த்தவுடன் எழுந்திருக்க முற்படுகிறார். ஆனால் நடேசன் பரவால்ல உட்காரு என உட்கார கூறுகிறார் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டு இருக்கும் பொழுது தமிழுக்கு புறை ஏறுகிறது இதனால் கோதை தன்னை அறியாமல் பார்த்து மெல்ல சாப்பிடு என தட்டி விடப் போகிறார் அதற்குள் சரஸ்வதி தலையில் தட்டுகிறார்.
பிறகு அடுத்த காட்சியில் விருந்தாளிகள் வந்துள்ளதால் அண்ணா நீங்க சாப்டீங்களா என கேட்டுக்கொண்டு நிலை தடுமாறு கீழே விழப் போகிறார் கோதை அப்பொழுது தமிழ் கோதையை பிடித்துக் கொள்கிறார். இதனால் கோதையின் மனம் லேசாக வருத்தப்படுகிறது. இதை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கும் அர்ஜுன் குடும்பம் வைத்தெரிச்சலில் பொங்கி எழுகிறது.
அது மட்டுமே இல்லாமல் ராகினியும் இதை பார்த்து கோபப்படுகிறார் இத்துடன் இந்த ப்ரோமோ வீடியோ முடிகிறது.