thamizhaga vetri kazhagam name secret : தளபதி விஜய் கடந்த ஒரு வருடமாகவே அரசியலுக்கு வர போகிறார் என்று பலரும் கூறி வந்தார்கள் அதேபோல் சினிமாவில் நடித்து வரும் நடிகர்கள் பலரும் அரசியலுக்கு வரும் எண்ணம் இருக்கிறது அப்படிதான் விஜய்க்கும் இருக்கும் என பலரும் கூறி வந்த நிலையில்.
அரசியலில் இறங்குவதற்கு முன்பே தன்னுடைய அரசியல் பணியை தொடங்கி விட்டார் தளபதி விஜய் அதாவது தன்னுடைய ரசிகர் மன்றத்தின் மூலம் பல நலத்திட்டங்களை செய்து வந்தார். அது மட்டுமில்லாமல் மக்கள் இயக்க நிர்வாகிகள் பலரும் ஆங்காங்கே இருக்கும் மாவட்டங்களில் பல நன்மைகளை செய்து வந்தார்கள்.
அப்படி இருக்கும் நிலையில் திடீரென தளபதி விஜய் அவர்கள் தமிழக வெற்றி கழகம் என தன்னுடைய கட்சிப் பெயரை அதிரடியாக வெளியிட்டுள்ளார் இப்படி தன்னுடைய கட்சி பெயரை அறிவித்தது மட்டுமல்லாமல் தன்னுடைய அரசியல் நோக்கத்திற்கான அறிக்கையையும் தெளிவாக சொல்லிவிட்டார்.
ஐயையோ கமலா முத்த காட்சிக்கு பயந்து ஓடிய 4 நடிகைகள்.! லிஸ்டில் இடம் பிடித்த நயன்தாரா…
இந்திய தேர்தல் ஆணையத்தில் கட்சியின் பெயரை பதிவு செய்துவிட்டார் இனி மக்கள் மனதை வென்று வருகின்ற 2026 ஆம் ஆண்டு நடக்க இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவது மட்டுமே விஜயின் வேலை.
இந்த நிலையில் திடீரென விஜய் எதற்காக தமிழக வெற்றி கழகம் என கட்சியின் பெயரை வைத்துள்ளார் என்ற சந்தேகம் அனைவருக்கும் இருந்து வருகிறது இந்த நிலையில் தன்னுடைய கட்சி வெற்றியை நோக்கி பயணிப்பதற்காக தான் தமிழக வெற்றி கழகம் என பெயரை வைத்துள்ளதாக சிலர் கூறுகிறார்கள்.
ஆனால் வி எழுத்து தன்னுடைய கட்சி பெயரில் இருக்க வேண்டும் என்பதற்காக தான் அப்படி வைத்திருக்கிறார் என ஒரு சிலர் கூறுகிறார்கள் இப்படி கட்சியின் பெயரை வைப்பதற்கு ஒரு சென்டிமென்ட் காரணம் இருக்கிறது. 1984 ஆம் ஆண்டு சந்திரசேகர் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த வெற்றி படத்தில் தான் நடிகர் விஜய் சினிமாவில் அறிமுகமானார்.
அன்றிலிருந்து இன்று வரை சினிமாவில் கொடி கட்டி பறந்து வருகிறார் தளபதி விஜய் அப்படி இருக்கும் வகையில் அதனால் தான் வி என்ற சென்டிமென்டை கட்சி பெயரில் இணைத்துள்ளார் என ஒரு ஒரு சிலர் கூறி வருகிறார்கள். ஆனால் தளபதி விஜய் சில படங்களுக்குப் பிறகு இனிமேல் படத்தில் நடிக்க மாட்டார் என்பது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் தான்.
ஏனென்றால் திரையில் விஜயை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள் ரசிகர்கள், ஆனால் இனிமேல் திரையில் கொண்டாட முடியாது என்ற வருத்தம் இருக்கும் மேலும் 2026 ஆம் ஆண்டு நடக்க இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விஜய் தன்னை தயார் படுத்தி வருகிறார் என பலரும் கூறி வருகிறார்கள்.