தமிழ் சினிமாவின் பல்வேறு விதமான டாப் நடிகர்களை வைத்து சிறப்பான படங்களை கொடுத்து இருந்தாலும் இயக்குனர் பா. ரஞ்சித்துக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்த திரைப்படம் சார்பட்டா பரம்பரை தான் சமிபத்தில் வெளியாகி வெற்றி நடை கண்டு வருகிறது.
சார்பட்டா பரம்பரை படம் நேர்த்தியாகவும் விறுவிறுப்பாகவும் இருந்ததால் தற்பொழுது பட்டி தொட்டி எங்கும் சென்றுள்ளது. மேலும் படத்தை பார்த்த ரசிகர்கள் தொடங்கி சினிமா ஆர்வலர்கள் இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் என பலரும் இந்த படத்தை இயக்குவதோடு சமூக வலைதளப் பக்கத்தில் இதைப்பற்றிய செய்திகளை பரப்பி வருகின்றனர்.
1970களில் வட சென்னையில் நடத்தப்பட்ட பாக்ஸிங் விளையாட்டை மையமாக வைத்து இப்படம் உருவாகி இருந்தது இந்த படத்தை பார்த்த பலரும் தற்போது கொண்டாடி வருகின்ற நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் நாசர்.
இந்த படத்தை பார்த்து ஒரு புதிய பதிவு ஒன்றை போட்டு உள்ளார். அவர் கூறியது தம்பி ரஞ்சித் உன்னை நான் பாராட்ட மாட்டேன் உங்களை கட்டி பிடித்து ஒரு நூறு முத்தம் கொடுத்து நன்று என்று ஒரு வார்த்தை மனசார சொல்லுவேன் இப்படி ஒரு படம் எஞ் சமூகத்திற்கு கொடுத்ததற்கு நன்றி என்று குறிப்பிட்டார்.
இச்செய்தி தற்பொழுது சார்பட்டா பரம்பரை குழுவினரையும் மற்றும் படத்தில் நடித்தவர் களையும் கொண்ட வைத்துள்ளது. பா ரஞ்சித் தற்போது இந்த திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய ஒரு உச்சத்தை தமிழ் சினிமாவில் எட்டியுள்ளதாக பலரும் குறிப்பிட்டு அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.